Followers

சிறுகதைகள்

[சிறுகதை][twocolumns]

கவிதாயினி

[கவிதாயினி][twocolumns]

ஸ்நாக்ஸ் டைம்

[ஸ்நாக்ஸ் டைம்][bleft]

ஜெனிபர்

[ஜெனிபர்][twocolumns]

ப்ரீத்தா

[ப்ரீத்தா][twocolumns]

கன்னிநிலா பூவாழி 1

1.கன்னிநிலா-பூவாழி


கன்னிநிலா இன்று விடுப்புபோலிருக்கிறது அதன் பிம்பமாக அந்த சூரியனின் நடுநிசி பிரதிபலிப்பு இன்று இல்லை. அந்த இருள் அவனை விழுங்கிதான் இருந்திருக்ககூடும். ஆனாலும் அவனது கருப்பு குதிரைக்கும் அவன் அணிந்திருந்த கருப்பு உடைக்கும் அவன் யார் கண்ணிலும் பட வாய்ப்பில்லை. அவனது கையிலிருந்த கடிவாளத்தில் அவனது முழுகவனம் செல்லவில்லை. மனமோ மற்றொரு திசையில் லயிக்க அந்த கோட்டை சுவர்களை பார்த்தான். நல்ல உயர்ந்த கோட்டைகள்தான் அதிலும் இந்த சிற்பங்கள் அதன் அழகான உழிவிளையாட்டுகள் இந்திரனுக்கே ரசனை கற்று தரும் வலிமையும் கலைநயமும் படைத்தவை. ஆனால் இந்த மாபெரும்நாட்டின் காவலனாகிய சோழவர்மன் கொடையான் இந்த கள்வனை ஏன் அழைத்திருக்கிறார். அதிலும் நான் மன்னரின் கருவூலத்தையே கைவைத்தவன்.
மேலும் அன்று நடந்த சம்பவம்எங்கள் கோவே அரசே பசுமை ஏந்தும் வணங்காமுடியே உம்மை பணிகிறோம்என தலை தாழ்த்துநிற்க சோழவர்மன்இவனது குற்றம் என்னவோ
மன்னா இவன் நமது கருவூலத்திலேயே துணிச்சலாக சென்று திருடியிருக்கிறான். இதனால் நமது நாட்டின் கட்டிட கலைஞர்கள் திறமை முழுவதுமாக ஐயத்தில் உள்ளது. அதனால் இவன் சிரம் துண்டிக்க வேண்டுகிறேன் மன்னாஎன ஒருவர் நிற்க மன்னர் எழுந்து வந்து சங்கிலியால் பினைக்கபட்ட திருடனை பார்க்கிறார்.
ம்ம் ராஜதந்திரிதான் நீ! எங்கள் கட்டிட கலையை பார்த்துகூட கண்டுபிடிக்கமுடியாத அறிஞர்கள் மத்தியில் நீ அதன் காவல்களை மீறிவிட்டாய்
என் கரத்தை விடுவித்துபாருங்கள் உங்களுக்கே வித்தை காட்டுவேன்என திமிறினான்.
ம்ம் அருமை! உன் சினம் சூரியனின் உக்கிரம் போல உள்ளது! உன் பெயரை அறிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்
ம்ம் வின்னை ஆளும் மாமன்னருக்கு என் பெய்ர கண்டறிவதா கடினமான காரியம்என முகத்தை திருப்ப மன்னர் தன் அரசவை அமைச்சர்களை பார்க்கமாமன்னா இவனுக்கு ஒரு பெயர் என்று குறிப்பிட முடியாது அனைவரும் கூறும் ஒரு பெயர் காரிருளான் என்பது ஒற்றர்களின் தகவல்
ம்ம் அது என் கடலளக்கும் கப்பலின் பெயர்
நானும் அறிவேன் ஆகாசதீபனே!!” என மன்னர் கூற சபையே அமைதியானது.
மன்னாஎன ஆகாசன் அதிர்ந்தான். ஆம் அவன் பெயர் அவனை தவிற யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
நான் அறிவேன்! அப்புறம் உன்னுடைய ரகசியங்களும் நான் அறிவேன் அது வெளியேறும் தருனம் என்ன நடக்கம் என நீ அறிவாய்என மன்னர்கூற தீபன் விக்கித்து நின்றான். அவன் நினைவில் அந்த மாபெரும் ஐந்துதலை நாகம் தீபற்றி எரிந்துகொண்டு விஷத்தை கக்க காற்றில் அது பரவி அலறல் சத்தம் கேட்க கண்களை மூடினான்.
மன்னா! வேண்டாம் நான் என்ன செய்ய வேண்டும் உங்களுக்குஎன தீபன் சரனடையஇதுதான் புத்திசாலிதனம்
சரி ஆகாசனே உன்னை நான் விடுவிக்கிறேன் மாறாக நீ என் படையுடன் உன் காரிருளானை இனைத்துகொண்டு எனக்காக!!”
போர் புரிந்து உயிர் துறக்கிறேன் மன்னா
லேசான புன்முறுவல் புகுத்திவிட்டுயுத்தகளத்தில் புத்திசாலிகள் நேரடியாக செல்லவேண்டிய அவசியமில்லை ஆகாசா! உன் காரிருளான் என் படையுடன் இனைந்தால் அதுவே போதும் நாடுகள் சரண்டைந்துவிடும்என மன்னர் கூறஅப்படியே செய்கிறேன் மன்னா! ஆனால் அந்த நாள் வரும் வரைதான்
அதையும் நான் அறிவேன்! அந்த நாள் வரும்போது நம்மில் ஒருவர் உயிர் ஈசனை அடைந்திருக்கும் நீ ஐயபடவேணாடாம்! ம்ம் இவரது கை சங்கிலியை அவிழ்த்துவிடுங்கள்என மன்னர் உத்தரவிட அன்று அவிழ்க்கபட்ட விலங்குகள்தான் இது. பல மன்னர்கள் கப்பல் படையின் உச்சத்தில் இருந்தபோது சோழர்கள் இந்த காரிருளானின் கொடியை மட்டும் ஏற்றி விடுவார்கள். கூடவே அதன் பிரத்யோகமான அந்த யாழி மிருகத்தின் தொன்டை குழியால் செய்யபட்ட சங்குகள் ஒலிக்க அனைத்து கப்பல்களும் பயந்து சரனைடைந்துவிடுவர். இப்படியாக நாட்கள் ஓடி சென்றுகொண்டிருக்க காரிருளான் தனது நங்கூர கட்டை இதுவரை அவிழ்த்தது இல்லை. ஆனால் அந்த கப்பலும் தீபனும் அவிழ்க்கபடும் அந்த தருனம் நிச்சயமாக மொத்த ஆசிய கன்டமும் சரனடைந்து ஆகவேண்டும் என்பதே அந்த ஈசனின் தீர்ப்பு.
ஆம் காரிருளான் முழுவதும் தங்கத்தால் இழைக்கபட்ட ஓர் அற்புத படைப்பு யார் அதை படைத்தார்தகள் என்பது படைத்தவருக்கே உசிதம். தங்கம் என்றதும் அழகான உருவம் என்று எண்ணினால் நிச்சயமாக எண்ணபிழைதான். முழுவதும் பாசி படர்ந்து இருக்க அந்த உலோக அரக்கன் நீளம் சரியாக பத்தில் ஒருபங்கு மயில்கள் இருக்கும். இதை பார்த்து அனைவரும் ஐயம் கொள்ள காரணம் அது சபிக்கபட்ட ஒரு கப்பலாகும் . ஆம் ஒரு இயந்திர இரும்பன் எரிபொருளும் காற்றின் துனையும் இல்லாமல் இயங்குகிறான் என்றால் நிச்சயம் அது சாபமாகதான் இருக்கவேண்டும். அந்த கப்பலின் உந்துவிசைக்கு காரனமாக இருக்கும் அந்த அறையை யாரும் இதுவரை பார்த்தது இல்லை. அதை பார்க்கும் வல்லமை படைத்த ஒருவன்தான் அந்த கப்பலை ஆள முடியும். அந்த ஒருவன்தான் அந்த ஆகாசதீபன். மர்மம் நிறைந்த கப்பலை தன்னகத்தே கொண்டவனுக்கு மர்மங்கள் இல்லாமல் இல்லை.
ஆம் அந்த கப்பலின் அந்த ரகசிய அறை அதை பார்த்தவர்களில் கடைசியாக உயிருடன் இருப்பது இவன்தான். அந்த கப்பலின முன் பகுதியிலிருக்கும் அந்த காளியின் உருவம் வேட்டைகாளி என அழைக்படுகிறது. அது சுடுகாட்டினை காக்கும் காளியாக சித்தரிக்க பட அனைவரும் பயந்து நடுங்குவர். அந்த கப்பலில் தீபனின் கீழே வேலை செய்யும் நபர்கள்கூட அதன் கண்களை நேராக பார்க்க பயந்துதான் ஆகவேண்டும் அதன் கோரதன்மை அப்படி.
கப்பல் மையத்திற்கு ஆத்திரம் வந்தால் அந்த காளியின் கண்கள் பலமான ஒலியுடன் இயங்கி நெருப்பை உமிழுமாம் அந்த நெருப்பு ஒரு தீவை ஆவியாக்க வல்லது என பேச்சுவாக்கில் கூறுவது வழக்கம். ஒருமுறை சோழர்களிம் கப்பல் இதை நெருங்கியது. ஆனால் ஆகாசன் மதுவின்மனம் மிகுந்து இருக்கும் அந்த தருனம் ஒரு குண்டு தன் கப்பலின் மேல்தளத்தில் பட்டு சிதற அவ்வளவுதான். “ஏய் அடிமைகளா நம் கப்பலை தாக்கிவிட்டார்கள் அந்த துருவ நட்சத்திரத்தின் திசையில்தான் தாக்குதல் வந்திருக்கிறது. கப்பலை இயக்குங்கள் அந்த எதிரி கப்பலின் மீது மோதுங்கள்!! ம்ம் கோழைகள் சாதார மரகப்பலை வைத்துகொண்டு இந்த காரிருளானை தாக்குகின்றனர் ம்ம் போகட்டும்என கிளம்ப இவன் இந்த அளவுக்கு ஆத்திரமாக யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
அந்த சோழர் கப்பல் தென்பட இந்த கப்பலின் வேகம் கூடியது. கன்டிப்பாக அதை மரத்தின் இடையில் வைக்கபட்ட தங்க ஆப்பாக பிளக்கபோகிறது என்பது உறுதி. அனைத்து மாலுமிகளும் அந்த கண்கொள்ளா தருனத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.  அந்த இடமும் நெருங்கியது ஆனால் அந்த மரகப்பல் அங்கு இல்லை. அனைவரும் அந்த எரிந்த புகையை சுவாசிக்க ஆயத்தமானர்.
ஆம் அந்த காளியின் கண்ணிலிருந்தவந்து நெருப்பு ஈசன் நெற்றிகண்போல எதிரில் இருந்த கப்பலை ஆவியாக்கியிருக்க அதை பார்த்து பயந்த ஆகாசனின் மாலுமிகள் சிலர் இது சாபம் என பயந்து தண்ணீரில் பாயந்து சுறாவுக்கு இரையாகினர்.
ஆம் ஆகாசதீபன் இந்த சாகசத்தை வாழ்கையில் ஒருமுறை செய்திருக்கிறான். ஆனால் அதை எப்படி செய்யவேண்டும் என நன்கு அவனுக்கு தெரியும். அப்படி மீனிடமிருந்த தப்பி சென்ற ஒரு மாலுமி சோழர்களிடம் மாட்டிகொள்ள சோழவர்மனுக்கு இந்த விசயம் பிடிபட்டது. பின்தான் காரிருளான் என்ற பெயரில் சுற்றும் ஆகாச தீபனை பொறிவைதது பிடித்திருந்தான். ஆனாலும் தன் கொள்கைக்கு மதிப்பளிக்கும் மன்னருக்கு தீபன் உயிரையும் கொடுக்கும் நிலைக்கு ஆயத்தமானான்.
இதுவரை அவனுக்கு எந்த வேலையும் போரும் வரவில்லை. சோழர்கள் அவனது பெயரை மட்டும் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் மன்னர் முதல் வேலையாக என்னை ஏன் அழைத்தார் அதுவும்அந்த இருள் நேர்த்தில். என குழப்பத்துடன் கோட்டை வாயிலை பார்த்தான்.
கோட்டை வாயில் வழியாக இந்த காரிருளான் செல்வதா!!” என கூறிவிட்டு கோட்டையின் சுவற்றைதாண்ட குதிரையின் மீது ஏறி ஆயத்தமானான். அவனையும் குதிரையையும் சேர்த்திருப்பதைவிட பத்துமடங்கு உயரம் அதிகம்தான் ஆனால் இந்த காரிருளானிடம் பலிக்காது இந்த கோட்டையின் கட்டிட வல்லமை.
ஏய் யாரது அங்கேஒரு வாயில் காவலாளி பார்த்துவிடநான் இங்கு மீன்கள் கிடைக்கும் என வந்தேன் ஐயா
ஏய் மூடனே! என்ன பிதற்றுகிறாய் இரவில் உனக்குமீன்கள் கிடைக்குமா அதுவும் கோட்டை வாயிலில் வந்துகொண்டு
மன்னியுங்கள் ஐயா நான் சந்தைக்கு செல்லும் வழி என தவறாக நினைத்து வந்துவிட்டேன்
உன்னை பார்த்தால் சந்தேகமாக இருக்கிறதே! குதிரையிலிருந்து இறங்கினாள் நலமாக இருக்கும்
உடனே அவன் குதிரையிலிருந்திறங்கம்ம் நீ செல்லலாம்
ஐயா என்னுடைய குதிரை?”
அது அரசாங்க சொத்து! நீ கோட்டை ஊழியனான எனக்கு எழதிகொடுத்துவிட்டாய் செல்கிறாயா இல்லைஎன வாளினை உருவ
வாளில் கைவைக்கும்முன் சிறிது யோசித்துகொள்ளுங்கள்
ஓ உனக்கு அவ்வளவு துனிச்சலா வா வந்து சன்டையிடு
ம்ம் சரி வாருங்கள்என அவன் வந்து நிற்க.
உன்னுடைய வாள் எங்கே! என்ன வாய் சன்டை போட போகிறாயாஎன சிரித்தான்.
எனது கை போதும் உங்கள் வாளுக்கு பதில் சொல்லஎன முன்னால் வந்தான்.
என்ன துனிச்சலடா உனக்குஎன வாளினை எடுத்து காரிருளானின் இதயத்தை நோக்கி செலுத்த கிளாங் என்ற சத்தம் கேட்க அதிர்ந்தான் அந்த காவலன்.
ஏய் என்ன இது உடலில் கவசம் போட்டுறிக்கிறாயா
ஹா ஹா கவசமா நானா! என் உடலே கவசம்தான் நான் காரிருளானடா மூடனே!”
அவனது வாள் கீழே விழுந்தது. “நீ நீ..” என பதறினான்.
என்ன உளறலா நீ முதலில் காவலனே அல்ல! நீ திருடன் எதற்கு இங்கு நிற்கிறாய் என்பதை ஒளிரும் வின்மீன்கள் எனக்கு உணர்த்திவிட்டன. பாம்பின் கால் பாம்பறியும் மூடனே! நான் அதிலும் ராஜநாகம் நீ ஓலைரகம் ஹா ஹா
உன்னை!!” என அவன் வாளை நிம்ர்த்த அது பின்னாலிருந்த குதிரையின்மீதுபட்டு அது நிலத்தில் சரிந்தது. அப்போது காரிருளானின் கோபம் அனலாக நிறைய அவனது கண்ணை கட்டி உலகத்தை பார்க்கவிடாமல் செய்திருந்த துணி தீபற்றி எரிய அடுத்த நொடி எதிரிலிருந்த திருடன் பஷ்பமாக கண்ணிலிருந்த தீ அனைந்தது.
உன்னை கோட்டையின் உள் கருவூலத்தில் வைத்து கொள்ள வின்மீன்கள் உத்தரவு ஆனால் நீ அவசரபட்டவிட்டாய் மூடனே என சாம்பலிடம் பேசிகொண்டே ஒரு துனியை எடுத்து கண்ணில் கட்டிவிட்டு இறந்த குதிரையின் காயத்தில் தடவினான். அது கம்பீரமாக எழுந்து நிற்க கோட்டையின் சுவர்களுக்கு உள்ளே ஊடுருவி சென்றான்.
-தொடரும்.


1 comment:

  1. எப்படி இருந்தது என்று கமென்டில் கூறவும் தோழமைகளே

    ReplyDelete

தொகுப்பு...