"அம்மா இன்னைக்கும் வரகாப்பிதான?!" அலுத்து கொண்டாள் ஜானவி.
"ஏண்டி உனக்கு தொண்டைல அமிர்தம் மட்டும்தான் இறங்குமோ! உனக்கு கல்யாணத்துக்கு நகை நட்டு சேக்கனும்டி உங்க அப்பாரு இருந்துருந்தா நல்லா வாய்க்கு ருசியா தின்னுருப்ப அதான் அவரு நம்மல விட்டுட்டு போயி பத்து வருசம் ஆச்சுடி! உன்ன நான் வளக்க பட்டபாடு எனக்குதான்டி தெரியும்" என்று தினசரி அர்சனையை துவங்கினார் சந்தனமாரி.
"உனக்கு இதே வேலைம்மா! அப்பா பேர சொல்லியே எஸ்கேப் ஆகுற" என சொல்ல நினைத்தாலும் மனம் வரவில்லை. அமைதியாக சென்று அந்த பாத்திரத்தில் சிறிது சுக்கை நசுக்கிபோட்டு சூடு செய்துவிட்டு வடுகட்டி கிளம்பினாள்.
பின் குளியலை முடிக்க அந்த சாக்கால் மறைக்கபட்ட நவீன அறையில் நுழைந்தாள் ஜானவி.
ஜானவி சுருக்கமாக ஜானு. அப்பாவின் செல்லப்பிள்ளை. அவர் கொஞ்சாத நாள் இல்லை. ஆனால் இந்த பத்து வருசமாக அவர் ஜானுவை திரும்பகூட பார்க்கவில்லை. ஜானுவுக்கு சிறிதுகோபம். சிறுவயதிலேயே தன்னை விட்டு கடவுளைபார்க்க சென்றுவிட்டடார் அல்லவா!
ஜானு பிறந்ததிலிருந்தே சந்ததனத்தின் புராணம். "பொட்டபுள்ளையா பொறந்துட்டா இவளுக்கு நகைநட்டு சேத்துவைக்கனும்" ஜானு அவதரித்த முதல்நாள் கேட்ட வசனம் இது.
"அதுக்குள்ள ஏண்டி இப்புடி பேசுற" என்று ஜானுவை ஏந்திகொண்டே கூறினார் அவள் அப்பா.
"பொட்டபுள்ளைககு செல்லம் கொடுக்ககூடாது. வாய் அதிகமா பேசாதடி! உன் மாமியா குத்துவா வாங்கு! எதுக்கெடுத்தாலும் எதுத்துபேசாதடி!" என்று பல வாசகங்கள் உண்டு.
ஜானு எப்படியோ படித்து ஒரு நல்ல வேலையில் சேர்ந்து விட்டாள். அதனால் சந்தனத்தின் அடுத்த புது மந்திரம் "அந்த குமார் மாமா உன்ன பொண்ணு கேட்டாருடி! அப்புறம் இந்த மாமா! அவங்க! இவங்க!" என்றானது. அந்த சொந்தங்கள் எல்லாம் கஷ்டபடும்போது எங்கே போனது என்று தெரியவில்லை.
"அம்மா கொஞ்சநாள் உன்கூட இருக்கேன் மா" என்று சமாளிப்பாள்.
"அப்போ யாரையும் லவ் பன்றியாடி?! அப்பா இல்லாத பிள்ளை ஓடி போயிட்டா அம்மா வளர்ப்பு அப்புடிதான்னு சொல்ல வச்சுடாதடி" என்று அழ ஆரம்பித்து விடுவார்.
ஜானவியும் மௌனமாக சென்று விடுவாள்.
இன்றும் அந்த அர்ச்சனை வேண்டாம் என நினைத்தாள். அமைதியாக குளித்து விட்டு வெளியே வர ஒரு கரண்டி பறந்து வந்தது. அதன் பின்னாலயே ஒரு கோழி பறந்து வந்து ஜானவயின் தலையில் அமர்ந்தது.
மீனாட்சிக்கு கிளி எனக்கு கோழியா என நினைத்து அதை தள்ளிவிட்டாள். "அத புடிடி இன்னைக்கு கொழம்பு வச்சுடுறேன் சும்மா அந்த புவனேஸு கோழிய அடச்சு வளக்க மாட்டாளா?" என்று புலம்பினாள் சந்தனம்.
"அம்மா விடும்மா" என ஜானு சாப்பிட்டுவிட்டு கிளம்பினாள்.
வேலை அதிகம்தான் ஒரு வழியாக முடித்தாள். அன்று சம்பளதினம்வேறு அதையும் வாங்கிகொண்டு வெளியே வர பால்கோவா விற்பனை அமோகமாக இருந்தது.
தன் தாய்க்கு பால்கோவா மிக விருப்பம் அதனால் எப்படியும் "ஏண்டி காசு வந்தா ஆட்டம் போடுவா" என திட்டினாலும் பரவாயில்லை என வாங்கிகொண்டு கிளம்பினாள்.
எதிரில் புவனேஸ் அக்கா."ஜானு என் கோழிய பாத்தியா?!" என்றாள்.
தன் அன்னையை பற்றி அறிந்தவள் அல்லவா ஜானு நிலைமை உணர்ந்தது.
இருந்தாலும் அன்னை அல்லவா "இல்லக்கா நான் இப்போதான் ஆபிஸ்ல இருந்தது வாரேன்!" என்று கிளம்பினாள்.
"இல்லமா அது வயலுக்கு வச்சிருந்த பூச்சி மருந்த திண்ணுடுச்சு அதான் தேடுறேன்" என கூற ஜானு பதறிகொண்டு வீட்டை நோக்கி நடந்தாள்.
கறிகுழம்பு வாசனை அவளை வரவேற்றது. உள்ளே கொதித்தது கோழி.
"அம்மா உனக்கு அறிவே இல்லையா"
மகள் முகத்தில் முதல்முதலாக கோவம்
"ஏன்டி"
"அடுத்த வீட்டு கோழிய ஏண்மா அடிச்ச"
"ஹே லூசாடி நீ இன்னைக்கு உனக்கு புறந்தநாள்டி அதான் பாய் கடையில் போயி வாங்கி வந்தேன் உனக்கு பிடிக்குமேனு சமைச்சு வச்சேன்டி" என்றார் கோவத்திலும் பாசம்.
"என் பிறந்தநாள்னா உனக்கும் பிறந்தநாள்தான்மா" என்றாள் ஜானு.
"ஆமா நான் கொண்டாட எனக்கு என்ன வயசாடி திரும்புது" இது சந்தனம் அம்மா.
அடுத்த நொடி தன் பையிலிருந்த பால்கோவாவை தன் அன்னைக்கு ஊட்டியிரூந்தாள்.
கூடவே கொதித்து கொண்டிருந்த கோழியை பார்த்து "அம்மா இது அது இல்லையே!" -சந்தேகமாக.
(பிற பகுதிகள்
பின் வெளியிடபடும்)



