Followers

சிறுகதைகள்

[சிறுகதை][twocolumns]

கவிதாயினி

[கவிதாயினி][twocolumns]

ஸ்நாக்ஸ் டைம்

[ஸ்நாக்ஸ் டைம்][bleft]

ஜெனிபர்

[ஜெனிபர்][twocolumns]

ப்ரீத்தா

[ப்ரீத்தா][twocolumns]

கன்னிநிலா பூவாழி 3


கன்னிநிலா(பூவாழி)-3

“நீ ஏன் என்னை அழைத்து செல்ல மறுக்கிறாய் ஆதிரையா?”என ஏக்கத்துடன் நின்றிருந்தாள் ஆதிரையனின் காதலி பூவாழி. ஆதிரையனின் மனம் இருதலைகொள்ளி எறும்பாக அவளை பார்த்தான்.
“பூ! நான் மிகவும் ஆபத்தான பயனத்தை மேற்கொள்ள போகிறேன். நீ எப்படி என்னுடன் பயனிக்க முடியும்? சர்வ வல்லமையும் பெற்ற காரிருளானுக்கே சில நேரங்களில் யானைக்கும் அடி சருக்கும் என்பது போல ஆகிவிடுகிறது அந்த ஆழ்கடலில்”
“அப்படி என்றால் என்னைவிட்டு பிரிகிறாயா ஆதிரையா?” என்று கண்களில் வைரங்களாக மின்னும் கண்ணீருடன் நின்றாள் அந்த அழகு மங்கை பூவாழி.
ஆதிரையான் துறுதுறுப்பான இளைஞன் காரிருளான் கப்பலில்தான் பிறந்த வள்ரந்தவன் அவனது தாய் தந்தை யார் என்றெல்லாம் அவன் அறிந்திருக்கவில்லை. இப்போதைக்கு அந்த கப்பல் தலைவன் காரிருளான்தான் இவனுக்கு சர்வமும்.
ஒருமுறை காரிருளான் சூரியனின் மறைவுதிசையை நோக்கி பயனமானது. அதற்கு காரிருளான் எளிமையாக கூறிய காரணம்.”மேற்கே குளியலிடும் சூரியனின் அந்த குளியல் தொட்டியை கண்டறிய என் காளிஉத்தரவிட்டாள்” என்று சிரித்துகொண்டே கூற அவனது மாலுமிகள் “தலைவருக்கு முற்றிவிட்டது போல” என கூறி வேறு வழியில்லாமல் கப்பலை கிளப்பினர் அப்படியொரு நாளில்தான் அந்த சிறிய ரக கப்பல்களின் அணிவகுப்பு நடைபெற்றது.
ஆம் உயிரை கொல்ல துடிக்கும் அந்த ராட்சத அலைகளுக்கு நடுவை கம்பீரமான காரிருளானே சிலநேரம் சிரம்பட்டிருக்கிறது. இதில் இந்த சிறிய ரக கப்பல்களை எடுத்துகொண்டு இவர்களை ஏன் தெற்கிலிருந்து கிழக்காக பயனிக்க வேண்டும் என அனைவருக்கும் குழப்பம் ஏற்பட்டது. ஆனால் மாலுமிகளின் மனதில் இருந்த ஒரு எண்ணம் தலைவர் நம்மை பிரட்சனையில் சிக்கவைத்தவிட்டார் என்பதுதான்.
குழப்பத்தில் சலசலப்புகள் சூழ்ந்த நேரம், “அனைவரும் தரைதளத்தில் படுத்துகொள்ளுங்கள்” என காரிருளானின் சத்தம் சுறாவாக கர்ஜிக்க மாலுமிகள் மின்னல் என அதை கேட்டு படுத்தனர் அங்கு அமர்ந்திருந்த அந்த கழுகை தவிர.
அடுத்த நொடி அந்த கழுகின் தலைதுன்டிக்கபட்டு கீழே விழுந்தது. அனைவரும் பயத்தில் பார்த்துகொண்டிருந்தனர். “தலைவா என்ன நடக்கிறது”
காரிருளான் லேசாக சிரித்துவிட்டு “யுத்தம்”
“என்ன யுத்தமா! நாம் எந்த வீரர்களின் பக்கம் தலைவா”
மீண்டும் லேசாக சிரித்துவிட்டு “அனைவரும் ஒருபக்கம் அவர்கள் நமக்கு எதிர்பக்கம்!”
“அப்படியென்றால்?”
“அவர்களது எதிரி நாம்தான்” என சிரித்தான்.
“அப்படியானால் தாக்குங்கள்”  என அந்த செயல்வீரன் துடிக்க “கொஞ்சம் பொறுங்கள் தளபதி அவர்கள் வளரிபடையினர்”
“அப்படி யென்றால்”
“இப்போது பாருங்கள்” என தனது கட்டைவிரலால் சொடுக்கிட்டு ஓசை ஏற்படுத்தினான். உடனே அனைத்தும் மெதுவாக தென்பட அந்த கப்பலின் தளபதியின் கண்களுக்கு அப்போதுதான் என்ன நடக்கிறது என்று புரிந்தது.
அவனது கட்டைவிரல் ஓசைக்கு கட்டுபட்ட காலம் அப்படியே நிற்க அவர்கள் கப்பலை நோக்கி வளைந்த வாள்கள் வீசபட்டிருகின்றன எப்படியும் சில நூறு இருக்கலாம். அதில் சிக்கியதால்தான் அந்த கழுகு தனது தலையை இழந்துள்ளது என தளபதி உணர்ந்துகொண்டார்.
அடுத்த நொடி அந்த வாள்கள் மீண்டும் வந்த திசையை நோக்கி சென்றன. “தலைவா இது எப்படி”
காரிருளான் மீண்டும் ஏளனமாக சிரித்துவிட்டு “அது வளரி, அதற்கு பொருள் வளைந்த வாளை எறி அதனால் வளரி என்றனர். இது இருபதாயிரம் வருடங்கள் பழமையான ஒரு ஆயுதம். கூட சரியான வீரனால் எறியபட்டால் பல கஜ தூரங்களை கடந்து எதிரியின் தலையை துண்டாக்கிவிட்டு மீண்டும் வீரனின் கைக்கே திரும்பிவிடும். வில் அம்புகள் இதன் முன் ஒரு சிறு குச்சிகள்தான்”
“தலைவா அப்படியானால் மிகவும் ஆபத்தான ஆயுதமா”
“அது வைத்திருப்பவரின் கைகளை பொறுத்தது!” என கூறியவன் “இப்போது எழுந்திரியுங்கள் வலைகளை கட்டவிழ்ங்கள்” என முழங்கினான் காரிருளான்.
உடனே எழுந்த அனைந்து வீரர்களும் கப்பலின் வலதுபுறமாக கட்டபட்டிருந்த கயிற்றினை அறுத்துவிட்டனர். அடுத்த நொடி அந்த சிலநூறு சிறய கப்பல்கள்  அந்த வலையில் மீனாக சிக்க அதை சுக்குநூறாக உடைத்தனர்.
வளரி படையினரின் ரத்தம் கடலில் சாறாக பிளியபட்டது. “என்ன தலைவா இது இவ்வளவு எளிதாக இருக்கிறது. இந்த வீரர்களின் ஆற்றல் அவ்வளவுதானா”
“தளபதி நம்மிடம் சண்டையிடும் நோக்கதில் இவர்கள் இங்கு வரவில்லை. வளரி வீரர்களின் போரினை நீங்கள் நேரில் பார்க்கும் தருனம் கூறுங்கள் அதுவுமில்லாமல் இப்போது வாள் வீசியவர்கள் கடைகுட்டிகளே பெரிய முதலைகள் வந்தால் சகலமும் சர்வ நாசம்.”
“அப்படியானால் இந்த மாபெரும் கப்பலின் முன்” என தளபதி கேட்க
“இந்த கப்பலை தலையில்லாத முன்டங்களால் எப்படி செலுத்த முடியும் தளபதி” என காரிருளான் கூற அவன் அவ்வளவு எளிதில் யாரையும் புகழ்ந்து பேசுபவன் அல்ல. ஆனால் அவன் அப்படி கூற வளரி படையின் வீரம் பற்றி புரிந்த கொண்டார் தளபதி.
ஆனால் தளபதிக்கு ஓர் சந்தேகம் எழ அதே கேட்க திரும்பும் தருனம் காரிருளான் தண்ணீரில் குதித்திருந்தான். “தலைவா என்ன காரியம் செய்ககிறீர்கள்” என தளபதி பதறினாலும் ஊள்ளூர இவன் இறந்து விட்டாள் இந்த கப்பலை தான் சொந்தம் கொண்டாடலாமல்லவா என்ற எண்ணம் இல்லாமல் இல்லை அப்படியான தங்க பேரலை இது.
ஆனால் காரிருளான் கையில் ஒரு பெண்ணை பிடித்துகொண்டு நீந்தி மேலே வந்தான். “வழியை விடுங்கள்” என உத்தரவு கொடுக்க அனைத்து வீரர்களையும் கொன்று குவித்துவிட்டனர். அந்த கப்பலில் வந்தவர்களில் மீதமிருக்கும் ஓர் உயிர் இந்த பெண் மட்டும்தான்.
இல்லை இரண்டு உயிர் அவள் வயிற்றிலிருந்த வெளிவர ஒரு வீரன் காத்துகொண்டுள்ளான். அந்த பெண்ணை தளத்தில் படுக்க வைத்தவன் அவளை பார்க்க அவளோ “காரிருளா” என லேசாக கூறினாள்.
“என்னை மன்னித்து விடுங்கள் தாயே” என காரிருளான் கூற அவள் லேசாக புன்னகைத்தாள். “ஈசனின் சித்தம் இது” என அவள் கூறவிட்டு காரிருளானின் கையினை எடுத்து தனது வயிற்றில் வைத்தாள்.
“இது சத்தியம் தாயே” என அவன் ஏன் கூறினான் என தெரியவில்லை. அடுத்த நொடி அவள் பிரசவவலியால்துடித்தாள். திருட்டும் போரும் புரிந்த வலியை தாங்கும் மாலுமிகளுக்கு ஒரு பெண்ணின் பிரசவவலியை தாங்கும் திறனில்லாமல் பார்த்துகொண்டிருந்தனர். அப்படியே அவள் ஒரு அழகான ஆண் குழந்தையை ஈன்றெடுக்க அதை பார்த்து லேசாக சிரித்தாலும் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது. அப்படியே அவள் இறந்துபோனாள்.
அந்த குழந்தையை கையில் ஏந்தியவன் “இவன் நம் புதிய தளபதி ஆதிரையன்” என ஊரக்க குரலில் கூற முன்னர் இருந்த தளபதியின் முகம் வாடியது. எப்படி இருந்தாலும் சில நாழிகைகள் முன் பிறந்த ஓர் குழந்தைக்கு தன் பதவி அழிப்பதா என கோபமடைந்தான் இருந்தாலும் மற்ற மாலுமிகளுடன் சேர்ந்துகொண்டு ஆதிரையன் ஆதிரையன் என கூக்குரலிட்டனர்.
“இந்த தாயை எனது அறையின் தங்க பேழைக்கும் வைத்து பாதுக்கருங்கள்” அனைவரும் அதிர்ந்து விட்டனர். “தலைவா என்ன கூறுகிறீர்கள்”
ஆம் அதற்கு காரணம் இருந்தது. அந்த பேழை கப்பல் தலைவன் இறந்தாள் கரை சேரும் வரை வைக்க வேண்டிய ஒன்று. ஆனால்அந்தகப்பலுக்கு சிறிது தொடர்பில்லாத ஒரு மங்கையை. அதுவும் அவள் ஒரு மங்கை அதுதான் உறுத்தலாக இருக்க.
“ம்ம் சீக்கிரம்” என அவன் உறும அப்படியே செய்தனர். பின் ஒரு தீவில் நிறுத்தி அந்த பெண்ணை புதைத்து தீவு முழுவதும் வைரங்களை பரப்பிவைத்துவிட்டு இறுதி அஞ்சலி செலுத்தி கப்பலின் பயனத்தை கிளப்பினர்.
ஆதிரையனின் தொடக்கம் இதுதான். ஆதிரையனின் பூர்வீகம் கன்டிப்பாக காரிருளானுக்கு மட்டும் தெரிந்த ஒரு ராஜ ரகசியமாகதான் இருக்கும். அப்படி அந்த கப்பலில் சுற்றிதிரிந்தவன்தான் ஆதிரையான்.
ஆனால் தன் தலைவர் வேண்டுமென்றே ஏன் சோழவர்மனின் கைகூலிகளிடம் சிக்க வேண்டும் அதுவுமில்லாமல் இப்படி சோழ படையில் ஓர் அடிமையாக கப்பல் இருக்கிறதே. என வருத்தம் ஆதிரையனுக்கு இருக்க காரிருளானிடம் சென்றான்.
“தந்தையே ஏன் இவ்வாறு செய்தீர்கள் கடலின் அரசனை இந்த சிறு எலிகளுக்காக ஏன் தடுத்து சங்கிலியிட்டீர்கள்”  என ஆதிரையான் கேட்க
அவனோ சிரித்துகொண்டு “ஆதிரையா! உனக்கு திருமன வயது வந்துவிட்டது அதனால் இந்தசோழ பேரரசில் அழகிகள் அதிகம் ஒன்று!! வேண்டாம் உனக்கு தோன்றுமளவிற்க்கு காதல் செய் அதற்காகதான் இப்படி கட்டிவைத்துள்ளேன் இந்த முரடனை”  என ஏளனமாக சிரித்தான்.
“தந்தையே!
“ஆதிரையா நீ இருபது வயது இளைஞன் நீ! என்னை பார்த்தால் உனது தந்தை மாதிரியா தெரிகிறது” ஆம் காரிருளான் பார்க்க என்றும் பதினாறு வயது இளைஞன்தான் கப்பலுடன் இருப்பதால் சிலநூறு ஆண்டுள் இருக்கிறான் என்றொரு வாய்மொழி வழக்கு உள்ளது.
“நீங்கள் என்றும் பதினாறு மார்கன்டையர்தான் ஆனாலும் உங்களைதான் நான் தந்தையாக கருதியுள்ளேன்”
“அதுவும் உண்மைதான்! சரி சரி நல்ல பண்பான பெண்ணாக அழைத்துவா” என சிரிக்க ஆதிரையானும் கிளம்பினான். அப்படி அந்த அழகான பன்பான சிறிது கோபமான பெண்தான் இந்த பூவாழி.
பதினாறு வயது மங்கை அரச குடும்பத்தின் பணிபெண். அரசிகூட இந்த அளவுக்கு அழகில்லைதான். ஒப்பனை செய்யாமலே கண்ணை கவரும் மங்கை. துறுதுறுவென மான்குட்டி கால்கள்.
கடலில் நீந்திதிரியும்கடல் கன்னியின் இடை. அவளது மார்பழகை வர்ணிக்கும்போது ஆதிரையன் எடுத்தமுயற்ச்சிகள் தோல்விதான். கழுத்தினது அழகு பவள பாறைகளுடன் ஒப்பிடுவான். இதழ்கள் நிலவின் பிறைகள். கன்னங்களும் அதில் விழும் குழிகளும் ரகசிய வட்டநீர் சுழற்ச்சிகள். கண்களோ அழகான மீன்கள் கார்கூந்தல் அவள் பின்னலகை தொட்டிருக்க அதில்தான் முதலில் மயங்கிவிட்டான் நமது கதாநாயகன்.
இன்று தன்னையும் உன்னுடன் அழைத்து செல் என சன்டையிட்டு கொண்டுள்ளாள். சற்றுபிடிவாத காரிதான்.
“என்னைவிட்டு பிரிகிறாயா ஆதிரா”
“பூ என் நிலையை புரிந்தகொள் இது மன்னரின் உத்தரவு கூட என் தந்தை மன்னருக்கு வாக்களித்துள்ளார். நான் செல்லவேண்டும்”
பூவாழி சோகமாக அவனை பார்த்து நிற்க அவன் அவளை கட்டிபிடித்துகொண்டு “நான் கன்டிப்பாக உனக்காக திரும்ப வருவேன் பூவாழி”  என அவன் கூறும்போது அவள் அழுவது தெரிந்தது.
தலைவனை பிரியும்போது கண்ணீல் வரும் உயிர்துளிகள் அனையிடமுடியாத ஒன்று.
“இப்போது நீ என் உன் பளிங்கு கண்ணிலிருந்து வெள்ளம் பாய்ச்சுகிறாய்” என அவள் கூந்தலுடன் விளையாடினான்.
“காதலா! அந்த கன்னிநிலாவை தேடிபோன யாரும் திரும்பியதில்லை. நீ போகாதே”
“இது என் தந்தையின் உத்தரவு பூவாழி என்னை புரிந்துகொள்”
“அப்படியானால் நானும் உன்னுடன் வருகிறேன்! சாவென்றால் மேலோகத்தில் நாம் இருவரும் சேர்ந்து வாழலாம்”
“இல்லை நீ சாக நான் அனுமதிக்க முடியாது”
“அப்படியானால் உன்னை பிரிந்துநான் மட்டும் இருப்பேனா” என அவள் கண்ணில் நீர் வரத்து அதிகமானது.
அப்போது அந்த கரையில் வந்து நின்ற காரிருளான் “ஆதிரையா இவள்தான் உன் காதலியா”
“தந்தையே அதுவந்து” என அவன் இழுக்கும்போது பூவாழி ஆரம்பித்துவிட்டாள். “தலைவா! என்னை உங்கள் கப்பலில் பணிபெண்ணாக சேர்த்துகொள்ளுங்கள்”
காரிருளானும் ஆதிரையனும் ஒருவைர ஒருவார் பார்த்துகொண்டனர். காரிருளானின் துணிகள்மூடிய கண்கள் பூவாழியின் அழகை பார்க்காமல் இல்லை.
“ம்ம் அழகும் அறிவும் உள்ள பெண்தான்! ஆனால் தாயே என் கப்பலில் பெண்ணின் கால்தடம் பட்டதில்லை இதுவரை” என்றான் காரிருளான்.
“அப்படியானால் அந்த காளி!” என முன்னிருந்த அந்த காளியின் சிலையை காட்ட “வென்றுவிட்டாய் தாயே கிளம்பு” என காரிருளான் கூறி நகர ஆதிரையான் அதிர்ச்சியில் நின்றான்.
“ஐயோ தந்தையே! இவள் கரையிலேயே என்னை பாடாய் படுத்துவாள். இதில் கடலிலுமா” என கூறிகொண்டே கப்பலில் ஏறினர்.
அப்போது கப்பலின் கீழே ஒருவன் நின்றுகொண்டு “பூவாழி” என கூற அவள் திரும்பி பார்த்தாள் கூட அனைவரும் திரும்பி பார்த்தனர்.
“பூவாழி தேடியதொரு பயனம் விளக்கின் ஒளியில் பட்ட விட்டில்தான்  இன்னுயிரை மாய்க்காதீர்கள்” என சத்தமிட அருகிலிருந்த காவலாளிகள் அவனை அடித்து இழுத்து சென்றனர்.
அவனை பார்த்துசிரித்த ஆதிரையான் வாயிலிருந்து “மூடன்” என்ற வார்த்தை வர
காரிருளான் “இல்லை! அறிவுசுடர் படைத்தவன்” என கூறய அதே நேரம்
பூவாழியோ “சித்தர் அவர்” என முடித்தாள். மூவரும் ஒருவரை ஒருவர் பார்க்க காரிருளான் “கப்பலை செலுத்துங்கள்” என கர்ஜிக்க கயிறுகள் வெட்டபட்டு பூமி முழுவதுமாக சூரியனை சுற்றி வந்த அதே நாளில் கப்பல் அந்த நீல கடலில் முத்தமிட
தலைவன் பிரிவால் வாடிய மங்கைபோல கடல்மங்கை காரிருளானை கட்டியனைத்துகொண்டாள். கப்பல் முன்னேற மன்னர் சோழவர்மன் நின்றிருந்தான்.அருகிலிருந்த அந்த மூடன் “நீ அழிய போகிறாய் சோழவர்மா” என சிரிக்க கையிலிருந்த சாட்டையால் அடித்து அவனை இழுத்துசென்றனர்.
கப்பலில் நின்றிருந்த தன்னவனின் தோளில் சாய்ந்து இதமான காற்றிமை சுவாசித்துகொண்டிருந்தாள் பூவாழி. பின்வரபோகும் விபரீதம் தெரியாத குழந்தையாய்.
-தொடரும்


No comments:

தொகுப்பு...