கன்னிநிலா-பூவாழி 4
இதமான காற்று பூவாழியின் கூந்தலை கடலலை போல தூதுவிட்டுகொண்டிருக்க அவள் சற்றுமுன்
சூடிய மலர்களின் வாசனையின் எச்சங்களாய் மனங்களை பரப்பிகொண்டிருக்க ஆதிரையன் தன்னவளின் அழகில் மெய்மறந்து நின்றான்.
கரை கன்னியே கடலில் குதித்த
காரணம் ஏனோ! என் இதயத்தின்
துடிப்பை உணரவா இல்லை
என் இளமையை திருடவா
பெட்டகமே உன்னை
நான் பாதுக்க வேண்டுமல்லவா
இந்த கடல் கன்னிகலிடமிருந்து
அவை உன்னை கண்டிட்டாள் ராணியாக சிறைபிடிக்க
உன்னை மீட்பது கடினமே!
ஏன் வந்தாய் என்னுடன்..
என கவிதைகளாய் பாட “எங்க நாட்டின் புலவர்கள்
அரங்கத்தில் இடம் கேட்பீர்கள் போல” என நெற்றியை அகலவிரித்தாள்.
“உன்னை வர்னிக்க அந்த அவையில் இருக்க வேண்டுமென்றால் நிச்சயமாக நான் அந்த இடத்தை
நிரப்புவேன்”
“அதீதமான சிந்தனைதான் உங்களுக்கு! எங்கள் சோழ நாட்டின் புலவர்கள் இயற்றும் ஈரடி
வெண்பா குறவன் பாட்டு இலக்கியநயங்கள் கலைகள்
எவறும் எட்ட முடியாத ஒரு புதையல் நீங்கள் கொள்ளையாரானாலும் எளிதில் திருடிவிட
முடியாத ஒன்று
“உன் மனதுமா?”
“அதைதான் என்றோ களவாடிவிட்டீர்களே” என வெட்கபட்டாள்.
அவையில் மன்னர் இருக்க அருகில் வேந்த சீடர் நின்றிருக்க திடீரென் சங்குகள் முழங்கபட்டன.
ஆம் அனைத்தும் வலம்புரி சங்குகள். கிடைப்பதற்கரிய ஒரு காரணிகள் அவை வலம்புரி சங்குகளை
கைபற்றுவது எளிதான காரியமல்ல.
தெள்ளியதோர் முழுநிலவு நாளில் காத்திருக்க அந்த ஒரு வினாடி மணிதுளிக்குள் அனைத்து
மற்ற சங்குகளும் நிலவின் ஒளியால் ஜொலிக்கும் தன் தாயினை தரிசிக்க ஒன்றாக கூடும்! ஆழ்ந்த
ஆழத்தில் ஒழிந்திருக்கும் அந்த வலம்புரிதாய் தன் மக்களை பார்க்க வெளியே வரும் மன்னர்கள்
நாட்டினை காண மாறுவேடத்தில் வலம் வருவதை போல!
அந்த்தருனம் அது லட்சகணக்கான சங்குகள் சூழ நடுவில் பவள பாறையின் மீது வீற்றிருக்கும்.
அந்த தருனம் வாள்வீசும் வீரனாயினும் முடியாது. மூழ்கி முத்துகுளிப்பவனாலும் முடியாது.
புத்தியை தீட்டி உழல்பவனாலும் முடியாது.
சூரிய குடும்பத்தின் அனைத்து கோள்களும் நேர்கோட்டில் அமையபெற்றவனாள்தான் அந்த
சங்கின் நடுவில் விழுந்து நிற்க மற்ற சங்குகள்
வழிவிட்டு நிற்கும். இல்லையேல் லட்சம் சங்குகள் சூழ ஆழ்கடலில் இன்னுயிரை விடவேண்டியதுதான்.
ஆனால் அப்படி கோள்களின் ஒருங்கினைவு நடக்கும்போது பிறந்த குழந்தைகள் இருவர்
மட்டும்தான் இருக்கின்றனர் இந்த பூவுலகில். அதில் ஒருவர்தான் ஆழிவேட்டையர். ஆம் வலம்புரிகளை
வேட்டையாடி தன் படையில் இனைத்துகொண்டிருப்பதால் ஆழிவேட்டையர் என பெயர் பெற்றிருந்தார்.
இப்போது இந்த சோழ சாம்ராஜ்யத்தின் போர் ராஜதந்திரியாகவும் கப்பல் படையின் சேனாதிபதியாகவும்
இருக்கிறார்.
வெண வலம் புரிகளை எடுக்க மற்றுமோர் வழியாக அந்த அம்மாவாசை நாளில் ருத்ரகாளியின்
மூக்குத்தி ஒளியில் மயங்கி அவை கரைக்கு வரும்போது பிடித்தாள்தான் உண்டு. அப்படியே எடுத்தாலும்
சிறிது நேரத்தில் அவை உயிரை விட்டு காற்றில் கானலாக மறைந்துவிடும். ஆனால் அவற்றை உயிருடன்
வைத்திருந்து போருக்கு பயன்படுத்துபவர் இந்த ஆழிவேட்டையர் மட்டும்தான்.
அவரது வருகையால் அரன்மனை அதிர்ந்து நின்றது. ஆம் ஒன்பது கோள்களும் ஒருங்கினைய
பொற்ற இருதுருவங்களில் ஒருவர் ஆழிவேட்டையர் மற்றொருவரை இந்த உலகம் அறிந்திருக்கவில்லை.
ஆம் தீமை எப்படி எளிதில் வெளிபடும். மற்றொருவன் தீயவன் என மக்களின் எண்ணமது. ஆக ஆழிவேட்டையர்தான்
நல்லசக்தி துருவம்.
ஆனால் ஆத்திரத்தில் இருநூறு யானைகளை கொன்று வீழ்த்தி அவர் கர்ஜித்த அந்த போரை
எந்த வீரனும் மறந்திருக்க மாட்டான். நெஞ்சில் ஆழிவேட்டையரை போல ஆகவேண்டும் என மானசீகமாக
நினைத்திருப்பான். அவர் அரன்மனையில் காலடி எடுத்துவைப்பதே இல்லை. ஆனால் இன்று!!
“சேனாதிபதியை வனங்குகிறேன்” என மன்னர் சிரம் தாழ்த்த அனைவரும் எழுந்தி நின்று
மன்னர் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என நின்றனர்.
“உன் வரவேற்பிற்காக நான் வரவில்லை” என்ன ஒரு கம்பீரமான குரல்.
“என் மீது கொண்டுள்ள ஆத்திரத்தின் காரணம்”
“காரணம் நீ அறிவாய் சோழவர்மா!” என கூறிவிட்டு வேந்த சீடரை பார்த்து “நீயும்
உடந்தைதானே” என கூற “இல்லை சோனாதிபதி” என வேந்த சீடன் நடுங்கினான்.
ஓரகண் பார்வையை வீசிவிட்டு “அரசே நான் ஒரு எச்சரிக்கை கொடுக்கதான் வந்தேன்!
நீங்கள் செய்த காரியம் இந்த மொத்த சோழ சாம்ராஜ்யத்தின் சர்வ நாசத்தின் துவக்கம்”
அவையோர் அனைவரும் புரியாமல் விழித்தனர். “என்ன நடக்கிறது இங்கே” என கேட்க வாய்திறக்க
முடியவில்லை அவர்களால் எதிரில் நிற்பது ஆழிவேட்டையர் அல்லவா
“குருவே! நான் நமது சோழ சாம்ராஜ்யத்தின் எல்லையை விரிவு படுத்தவே இவ்வாறு செய்தேன்”
“அதற்கு நெருப்பில் கைவிடுவாயா!? யாரை கேட்டு பூவாழியை தேடி அந்த கயவன் கப்பலை
அனுப்பினாய் என நான் அறியலாமா! அதற்கு அரசவையில் அனுமதி உண்டா”
பூவாழி என்ற வார்த்தையை கேட்டதும் அவையில் சிறு சலசலப்பு மூண்டது. “மன்னா பூவாழி
ஒரு கற்பனை பெண்தானே” என அவையிலிருந்த ஒருவர் கேட்க “ஐயா ஏடுகளின் சுவடுகள் உங்கள்
மனதில் ஒட்டிகொண்டிருக்கிறது என நினைக்கிறேன்! பூவாழி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு அப்பாற்
பட்டவள் அவளை தீண்ட நினைப்பதன் நோக்கம் நிச்சயமாக அழியா உயிர் படைக்கதான் ஆம் ஆவளால்தான்
ஒரு தனி மானுட பிறவியை என்றும் மார்கன்டேயனாக வைக்க முடியும்! அப்படியேன்றால் அவளை
நாடி அனுப்பியது நிச்சயமாக நாட்டின் நலனால் அல்ல! இது மன்னரின் சுயநலத்தின் எச்சம்தான்”
“அப்படியானால்..”
“ஆம் பூவாழி உண்மைதான்! அந்த கன்னியின் உக்கிரம் தாங்காமல் அவளை தனிதீவில் சிறைவைக்க
பலர் இன்னுயிரை மாய்த்துள்ளனர். அமைதியாக உறங்கும் அவளை தட்டி எழுப்புவது அதுவும் மன்னரின்
அற்ப ஆசைக்காக என்பது மொத்த பூவுலகத்தையும் சுட்டெறிக்கும் ஒரு நிகழ்வாகதான் இருக்கும்!”
“மன்னரின் பக்கமும் நியாயம் இருக்கலாம் அல்லவா”
“பூவாழி நியாய தர்மங்களுக்கு அப்பாற் பட்டவள்! ஒருவேளை காரிருளான் பூவாழியை
கண்டறிந்தாள். பிரளயம் நிச்சயம்” என கோபமாக கத்திவிட்டு “உன் அழிவை தேடிகொண்டாய் சோழவர்மா!”
என முறைத்துகொண்டு செல்ல மன்னர்.
“குருவே!” என அழைக்க “இனி உனக்கு என் சீடனாக இருக்கும் உரிமை இல்லை! கூட என்
ஆழிவேட்டை கப்பற் படையும் சோழ சாம்ராஜயத்துக்கு அல்ல!”
அனைவரிடமும் அதிர்ச்சி ஆம் கப்பல் படையில் இப்போது காரிருளானும் இல்லை இப்போது
ஆழிவேட்டையர் இப்படி அறிவிப்பார் என்று சிறிதும் எதிர்பார்கவில்லை. கடல்வழியில் சோழ
சாம்ராஜ்யத்திற்கு மிகபெரிய ஆபத்து காத்துகொண்டிருக்கிறது.
ஆழிவேட்டையர் கிளம்பும்போது “பூவாழியை அவன் பிடிக்கும்முன் அவனது கப்பலை சுக்கு
நூறாக்குவேன்” என கர்ஜித்துவிட்டு கிளம்ப மீண்டும் வலம்புரி சங்குகள் ஒலித்தன. கூடவே
ஆழிவேட்டையரின் படை கடலில் குதித்து கிளம்பியது. மன்னர் முகத்தில் சிறு சலனம் “நாம்
ஏதேனும் தவறு செய்துவிட்டோமோ” என வேந்தசீடன் அருகில் நின்றுகொண்டு “மன்னா இதெல்லாம்
பெரிதாக எடுத்து கொள்ளாதீர்கள்” என கூற அரசவையில் அடுத்த வேலைகளுக்காக பட்டயத்தை படிக்க
ஆரம்பித்தனர்.
கடலின் சீற்றதினை கண்ட ஆகாசதீபன் “ஆழிவேட்டையர்!” என கூற “யார் அந்த கிளவனா”
என அனைவரும் சிரித்தனர்.
“அவருக்கு பயப்படாத நீங்கள் அவரது படைக்கு பயப்படுவீர்கள் என நினைக்கிறேன்”
“என்ன கூறிகிறீர்கள் தலைவா”
“ஆம் மொத்த ஆழிவேட்டையரின் படையும் நம்மை அழிக்க புறப்படாகிவிட்டது”
இப்போது அனைவரின் கண்களிலும் மரண பயன் தொற்றிகொள்ள அவர்களுக்கு தெரியும் இந்த
கப்பலில் உயிருடன் இருப்பவர் காரிருளான் மட்டும்தான் ஏனையோரின் வரலாறு மிக சொற்பனானதுதான்.
ஒருமுறை கப்பலின் மொத்த மாலுமிகளும் கொல்லபட்ட கதையும் காரிருளான் ஒரு தலைவனாக கூறியுள்ளார்.
மாலுமிகள் பயந்துகொண்டிருப்பது அற்க்குதான்.
ஆம் “தலைவா அப்படியானால் நீங்கள் அவர்களை காப்பாறவில்லையா” என கதைகேட்ட ஒருவன்
கூற “எனக்கு தோன்றவில்லை! பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கை நியதி” என சிரித்துகொண்டே
சென்றார் காரிருளான்.
அப்படியானால் நிச்சயமாக இவர் நம்மை “ஆழிவேட்டையரிடம் பலிகொடுக்க போகிறார்” என
பேசிகொண்டனர்.
“தந்தையே ஏன் பயன்கொள்கீறீர்கள் உங்கள் மூடியவிழியாலயே அவர்களை சுட்டெறிக்கலாமே”
“என் மைத்துன்னை என்னால் எப்படி சுட்டெறிக்க முடியும் சொல்?” என காரிருளான்
கூற
“தந்தையே அப்படியானால்”
“ஆம் ஒன்பது கோள்களும் ஒன்றாக பினைந்திருக்கும் தருனம் எங்கள் தாய் இரட்டை குழந்தையாக
எங்களை ஈன்றெடுத்து மறித்தாள் இந்த கடல்தாயின் மடியில். அதில் ஒருதுருவம் கரும்துருவம்
இந்த காரிருளான். மற்றொரு வென்துருவம் வெண்வலம்புரி சங்குகள் சூழ்ந்த ஆழிவேட்டையார்
என் மைத்துனன்.” என கண்ணீல் மூடியிருந்த துணிகள் நனைந்தன.
“தந்தையே நீங்கள் மன்னரின் பேரால்தானே கடமையை செய்கிறீர்கள் உங்கள் மைத்துனர்
இதை புரிந்துகொள்ள மாட்டாரா”
“அவர் மன்னரின் படையில் இப்போது இல்லை”
“அப்படியானால் நம் மன்னரிடம் இப்போது கப்பற்படையே இல்லயா” என ஒருவன் கூற அதுவும்
உண்மைதான்.
“மாலுமிகளே கேளுங்கள் அருகில் தனித்தீவு வரும்பொருட்டு என் வின்மீன்கள் வழிகாட்டுகின்றன.
உயிரின் பற்று இருப்பவர்களை நான் அங்கே விடுத்து செல்கிறேன்! ஏனையோர் என்னுடன் என்
மைத்துன்னை எதிர்த்து இந்த நீலகடலில் போராடலாம்” என அவர் கூற “நாங்கள் உயிரைவிட உங்களை
மதிக்கிறோம் தலைவா” என அனைவரும் கர்ஜித்து கரியநிற போர்கொடியை ஏற்றினர்.
“பூவாழி நீ ஒரு பெண் நீயும் என் மகனும் அங்கே இருந்து சொர்க்கம் படைக்கலாம்”
“தந்தையே உங்களை விடுத்து நான் முடியவே முடியாது நான் அவர்களை ஒருகை பார்த்துவிடுகிறேன்”
“நானும் என்னவனைவிட்டு செல்லதயாராக இல்லை” என பூவாழி தன் மடியில் ஒழித்து வைத்திருந்த
கத்தியை எடுத்தாள்.
ஆகாசதீபனுக்கு தெரியும் தனது இந்த கரியசக்தியால்தான் தன்தாய் இறந்தாள் என அதானல்தான்
தன்னை கருப்பு புறமாக இந்த உலகம் பார்க்கிறது அதனால் ஆழிவேட்டையரின் உடன்பிறப்பு தான்தான்
என உலகத்திற்கு அறிவிக்க பயந்தான். கூட நல்ல சக்தியின் முன் தீயசக்தி சிறிதும் நிற்கபோவதில்லை.
ஆம் ஆழிவேட்டையரின் முன் காரிருளான் சிலநொடிகள் நிற்பதே சிரமம்தான். இந்த தங்க்கப்பல்
சிதையும் நாள் வெகுவிரைவில் இல்லை என காரிருளானுக்கு நன்றாக தெரியும்.
“அங்கே பாருங்கள் சங்குகள்” என ஒருவன் கத்த “அவை வேவு பார்க்கும் சங்குகள்தான்
பயப்படவேண்டாம். இன்னும் இரண்டு உதயத்திற்குள் அவர் நம்மை கண்டறிய வாய்பு இருக்கிறது”
என காரிருளான் கூற கப்பல் திடீரென நிற்க அனைவரும் தடுமாறி கீழே விழுந்தனர்.
“என்ன ஆயிற்று தலைவா”
“ஆழிவேட்டையர் வேட்டையை துவங்கிவிட்டார்” என சிரித்தவன். “அனைவரும் பாதுகாப்பு
அறைக்கு செல்லுங்கள்” என உத்தரவிட்டான். ஆம் பாதுகாப்பு அறைக்கு செல்ல சொன்னால் அதற்கு
அர்த்தம் காரிருளான் அந்த யாரும் நுழையமுடியாத கப்பலின் இதயமான பெட்டக அறைக்கு செல்ல
போகிறார் என்று அர்த்தம்.
அனைவரும் ஓடி ஒழிய பூவாழி விசித்திரமாக பார்த்துகொண்டிருந்தாள். ஆதிரையன் அவளது
கைகளை பிடித்து இழுத்துகொண்டு ஒழிந்துகொள்ள ஆகாசதீபன் அந்த அறைகதவினை திறக்க அவனது
தோல்களை உரிந்தன. வெப்பம் அனலாக கக்கியது. மேலும் உள்ளே சென்றான். அந்த பெட்டக அறையின்
மொத்த வெப்பமும் அவனை சுட்டெறிக்க தோல்கள் முழுவதுமாக கருகிசிதைந்தன.
-தொடரும்




No comments: