கன்னிநிலா-பூவாழி 2
தனது சக்தியை முடிந்த அளவிற்கு மறைத்து வாழ முயற்சி செய்த ஆகாசதீபனின் மனதிடத்திற்கு சவால்விடும் பனியினை இங்கிருக்கும் மானிடர்கள் செய்வதில் எந்த குறையும் வைப்பதில்லை. அதனால்தான் இன்று ஒருவனை எரித்துவிட்டு ஒளிகூட ஊடுருவ முடியாத கரும்பாறைகளில் ஓர் கதிராக ஊடுருவிசென்றான். அவனை ஏற்றி சென்ற புரவி தனது கால்களை மேலும் ஒரு அடி எடுத்துவைக்க தயக்கம் காட்டவே “என்ன ஆயிற்ற தோழா” என அந்த குதிரையிடம் தன் எண்ணத்தை கூற அந்த குதிரை கனைப்பை ஏற்படுத்தியது.
“ம்ம் புரிகிறது” என குதிரையிலிருந்து இறங்கி நடந்தான் காரிருளான்.
அது அந்த ரகசிய அறை முழுவதும் இருளாக இருக்க ஆகாச தீபன் அசையாமல் நின்றான். அப்போது கூரிய வாளுடன் ஒருவன் பாய லாவகமாக விலகி கொண்டு “மன்னா என்ன இது விளையாட்டு”
“எப்படி ஆகாச தீபா கண்களை கட்டிகொண்டு இருக்கும் நிலையிலும் இந்த இருளிலும் உன்னால் என் தாக்குதலை பார்க்க முடிந்தது?”\
“மன்னா தாங்கள் அறியாத புதிரல்ல இது!”
“இருந்தாலும் உன் ஓசையால் என் செவி அறிய ஆவல்தான் இந்த மனிதனுக்கு”
“எல்லாம் விபத்தாக அறங்கேறியது அந்த கரிய நாளில்! ஆகாச தீபன் என்ற பெயர் ஆகாயத்தில் சுடர்விடும் தீபங்களான வின்மீன்களின் அசைவுகளை வைத்து என்னால் இந்த சிறு துரும்பான பூமியின் உயிரினங்களின் அசைவுகளை அறிய முடியும் இன்னும் மூன்று தலைமுறைகளுக்கு பிறகு நடக்கபோகும் விதியை நான் அறிந்திருக்கிறேன் அப்படி அந்த தீபங்களின் மொழியை நான் பிழைத்தால் அன்று இந்த காரிருளான் நிரந்தர நித்திரை அடையகூடும்.”
“ஆக வின்மீன்கள் இருக்க விழி எதற்கு உனக்கு! ம்ம் பிரம்மாதமான சக்திதான்”
“மன்னா இது சக்தி இல்லை சாபம்”
“எனக்கு அப்படி தோன்றவில்லை காரிருளா” என மன்னர் சோழவர்மன் கூற அங்கு இருந்த முற்றத்தின் கைபிடியை பிடித்து வின்மீன்களை தன் கண்கள் இல்லாத கண்களால் பார்த்தான். அவன் முகத்தில் சோகம் இருப்பது அங்கு இருந்த சிறிய விளக்குகள் தெளிவாக காட்ட
“காரிருளா இன்று உனக்கு ஒரு வாய்ப்பு அளிக்கிறேன்! கூடவே இது எனக்கும் ஒரு உபகாரம்தான்! இதை நீ நிறைவற்றினால் உன் மனதில் நெடுநாளாக உறுத்திகொண்டிருக்க்கும் கவலைகளை இந்த கொடையான் தீர்த்து வைப்பான் என்பது உறுதி”
“என் கவலைகளை அகற்ற வல்லவன் அந்த ஈசன் மட்டுமே”
“ஹா ஹா ஈசன் அனைத்து இடங்களுக்கும் வந்து உதவி செய்ய முடியாது ஆகாச அதனால்தான் மன்னர்களை நியமித்தான். இன்று நான் தான் உனக்கு ஈசன் என்பது அந்த ஈசனின் கட்டளை
சோழவர்மனோ வாய்சொல் வீரன் கூட அவரது வாளும் வலியதுதான் இருந்தாலும் ஆகாசன் முன் பலிதம் ஆகாது. ஆகாசன் ஓர் செயல் வீரன். அதனால் வாய்போர் பிடிக்காமல் தோல்வியை ஒப்புகொண்டான்.
“மன்னா என் வாழ்கையை வின்மீன்களை தீர்மானம் செய்துவிட்டன. அதை பேசுவதால் எந்த பலனும்இல்லை. இந்த அடியோனை அழைத்த காரணம்?”
“சொல்கிறேன்” என கூறிவிட்டு மன்னர் கைதட்ட ஒருவன் வந்து நின்றான் கையில் ஒரு ஓலையுடன். அவனை ஆகாசன் முறைத்து பார்க்க “இவரை நீ நம்பலாம் ஆகாசா” என மன்னரின் குரல்.
“இவர்??”
“இவர் வேந்தசீடர்! இவர்கள் பரம்பரையாக இந்த அரன்மனையின் சீடன் அதாவது மன்னருக்கு அமைச்சர்களாக இருந்த வருகின்றனர். சுயநலமில்லாதவர்கள்! இவர்கள் அறிவுக்கு நிகரில்லை. நீ இவர்களை நம்பலாம்”
வேந்தசீடர்கள் சோழ பேரரசு நிறுவ ஒரு முக்கிய பங்காற்றியவர்கள் கூடவே அவர்கள் தீட்டிய திட்டங்கள் இதுவரை பொய்த்தது என்பது இல்லை. அறிவில் சிறந்தவர்கள் காலம் காலமாக மன்னர்குலத்தின் மகுடத்தின் உள்ளிருக்கும் மூளையாக செயல்படும் திறமை கொண்டவர்கள். இப்போது இந்த வேந்த சீடன் மன்னரின் நெருங்கிய நண்பரும் கூட. தன் மூளையிடம் நட்பு கொள்ளாத மனிதன் இல்லைதான். ஆனால் ஆகாசதீபன் யாரையும் எளிதில் நம்புவதில்லை. அதுவுமில்லாமல் தன்னை பொறிவைத்து பிடிக்க திட்டம் தீட்டிகொடுத்த அந்த மகா புத்திசாலி இந்த வேந்தசீடனாதான் என்பது வின்மீன்களின் வாயிலாக அறிந்திருந்தான். அன்றிலிருந்த அவரின் முகத்தை நேருக்கு நேராக பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது ஆகாசனுக்கு அது இன்று பலிதம்.
“என்ன ஆகாசதீபா!” என வேந்தன்கூற மன்னரும் ஆகாசனும் அதிர்ச்சியாக பார்த்தனர். “மன்னியுங்கள் அரசே! காரிருளா”
இப்போது இருவரும் நிதானமடைந்தனர். “நான் உன்னை பிடித்துவிட்டேன் என்பதால் உன்னைவிட பெரிய மனிதன் நானில்லை என்பதில் எந்த ஐயமும் இல்லை” என்று அவர் கூறிய தோரனையில் நீ சிறிய துரும்பு எனக்கு என்ற கர்வம் இருக்க ஆகாசன் சிரித்தான்.
“வேடிக்கை! மன்னா நான் என்ன செய்ய வேண்டும்” இது ஆகாசன்.
“அமைச்சரே” என மன்னர்கூற வேந்தன் அந்த ஓலையை ஆகாசனிடம் கொடுத்தான். அதை வாங்கி பார்த்தான் ஆகாசன்.
அதில்,
உலகமடந்தைக்கோர் உதிரமாக உதித்த
உத்தமி சந்திரவாரி சாகிநின்று
வையகம் அழியாகாத்திட்ட கன்னிநிலா!
தனில் வேங்கையாக நின்று கொடிநாட்டும்
சோழனுக்கோர் கன்னி துனையாக
கொடுத்த மேனி பூவாழி!
தேடியழைந்து கண்டறிந்து கவரும்
கள்வன் மனாளன்கோர் அழியா உயிர் நிலைக்கும்
இந்த பூவாழி மங்கை சிறையில்
கடல் கடந்து கவர் என் உதிரமே!”
என இருக்க கூடவே அழகு மங்கையின் ஓவியமும் இருந்தது.
“மன்னா இதன் காரணம்?” என எல்லாம் தெரிந்தும் காரிருளான் கேள்வி எழுப்ப மன்னர் சிரித்துகொண்டே அமைச்சரை பார்த்தார்.
“பூவாழி பற்றி நீ கன்டிப்பாக அறிந்திருக்க கூடும்! “ சிறிய சிரிப்ப காரிருளானிடமிருந்து. “இருந்தாலும் நான் கூற கடமை பட்டிருக்கிறேன்” என வேந்தன் கூற ஆரம்பித்தான்.
அது ஒரு அழகிய பொழுது சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் உருவாகி சலங்கைகட்டிகொண்டு ஆடிகொண்டிருக்க தமிழாலும் பூமியாக இருந்த நிலத்தில் ஆண்ட பழங்குடி சோழ வம்சம் அது ஆண்டு கொண்டிருக்க! மன்னரின் நித்திரை கலைந்து நின்றார்.
“ஏன் மன்னா கலக்கம்” இது அவரது மனைவி கண்ணுகினியாள்.
“இல்லை இனியாள்! இந்த சோழர்குடி முடிவு நெருங்கிவிட்டது என்று என் புலன்கள் உறுதிபடுகின்றன”
“மன்னா அவ்வாறு நடக்கும் வாய்ப்பு இல்லைதான்”
“இல்லை இனியாள்! எனக்காக வந்திருக்கும் ஈசனின் தூது இது” என மன்னர் கூற இனியாள் விக்கித்து நின்றாள். ஈசனின் தூது என்றால் மன்னர் கைலாயம் செல்லவேண்டும் என்பது இயற்கையின் விதி. இப்படி மொத்த ஆசியாவையும் ஆண்டு கொண்டிருந்த இந்திரசோழன் கூற அவள் ஆசை மனைவி அதிர்ந்து நின்றாள்.
“என்ன இனியாள் ஏதேனும் ஐயமா!” இருவரும் சிறிது நேரம் மௌனம் காக்க நிலவு பெரிதாக தோன்றியது
இந்திரன்தான் முதலில் மௌனம் கலைத்தான். “இனியாள் என் தந்தைக்கும் இப்படிதான் தூது வந்தது. அவர் எங்களை விட்டு பிரிந்துவிட நான் சிறுவயதில் அரியனை அமர்ந்தேன்.”
“கூட என்னையும் மனந்தீர்கள்” என சிரித்தாள்.
“ஆனால் எனக்கு ஆயிரம் மனைவிகள் அல்லவா” என அவனும் சிரிக்க “இருக்கலாம் எல்லாம் எனக்காக தானே செய்தீர்கள்”
“ஆம் உனக்கு சேவை செய்யதான் அவர்களை மனந்தேன்! இருந்தாலும் தெற்க்கே நுழையும் அந்த படைக்கு இந்த தூது வந்த நிகழ்வு தெரிந்தால் கன்டிப்பாக நமது படை நிலைகுலைந்துவிடும்”
“அப்படி நடக்க வாய்ப்பு நான் கொடுக்க மாட்டேன் என் மன்னா”
அவளை குழப்பமாக பார்த்தான் இந்திரன்.
“நான் ஒன்று சொல்கிறேன் மன்னா ஆத்திரம் கொள்ள வேண்டாம்”
“உன்னிடம் நான் ஆத்திரமா வாய்ப்பே இல்லை”
“அது என் வரம்! அனைத்து நாட்டின் இளவரசியையும் கவர்ந்துமனந்தவர்தானே நீங்கள்அதுவும் என் ஒரு வார்த்தைகாக”
மன்னர் சிரிப்பை மட்டும் வீச
” பூவாழி!” என
இனியாள் இழுத்தாள்.“ஆமா பூவாழி அவளுக்கு என்ன”
“இல்லை அவளை தாங்கள் மனக்க வேண்டும்!”
“இல்லை முடியாது இனியாள்! இந்த முடிவு மொத்த உலகத்தையும் அழிக்கும் செயல்” மன்னரின் முகத்ததில் பதற்றம்
“என்னை கவர்ந்தவருக்கு பூவாழியை கவர்வது பெரிய காரியமில்லையே என் மன்னா! யோசித்து பாருங்கள் தீராத புகழ் அழியா உடல் உங்களுக்கு கிடைக்கும் அவளை மனந்தால்?”
“ஆனால் அது அவ்வளவு எளிதல்ல”
“இந்த உலகத்துடன் சேர்ந்தே பிறந்தவள். என்றும் இளமையானவள். கன்னிநிலா அவள். அவளை தாங்கள் மனந்தால் உங்களுக்கும் அந்த வரம் கிட்டும் என் மன்னா” என மன்னரின் தோழில் சாய்ந்துகொண்டாள்.
மன்னர் யோசித்துவிட்டு “எனது சோழ பரம்பரையிலிருந்து இந்த இந்திரன் உனக்கு வாக்களிக்கிறேன் என்னவளே இனியாள். என் வாரிசிலிருந்து ஒருவன் அந்த பூவாளியை மனப்பான் இது சித்தம்” என கூற இனியாள் மகிழ்ந்தாள்.
அதன்பின் இந்திரனே நேரடியாக போர்களத்தில் குதித்து போர்புரிதான். முடிவு பூவாழியை அடைய கொண்ட ஆசையில் இந்திரனின் உயிர் கட்டளைபடி ஈசனிடம் சேர்ந்துவிட்டது. ஆனால் அவனது ஆயிரம் மனைவிகளும் தங்களுக்கான வாரிசை பெற்றெடுத்த நேரம் பூவாழியின் சேனைகள் மொத்த சோழ சாம்ராஜ்யத்திலும் காலெடுத்துவைத்தன. சோழ சாம்ராஜ்யம் சிதறியது. இந்திரனின் குழந்தைகளை பூவாழியின் சேனையால் கொல்லபட்டன. அந்த ஆயிரம் மனைவிகளும் கொல்லபட்டன. தப்பியவள் இனியாள் மட்டுமே!
தன்னவனை கொன்ற பூவாழி! ஆம் அழியா உடல் உயிர் கொண்டவள்தான் அந்த பூவாழி அதனால்தான் இந்த கர்வம் நிலவு தோன்றும்போது இவளும் பிறந்தாள்அல்லவா அதான்இந்த கர்வம். அதை அடக்குகிறேன் என் வாரிசு உன்னை பழிவாங்கும் என மனதில் உறுதி பூண்டவள் கையில் ஆயிரம் மனைவிகளில் வேலைகார பெண் ஒருத்தியின் குழந்தைகள் இருக்க “இவர்கள் என் மன்னவனின் உதிரம் உனது கர்வத்தை அழிக்கும் பிரம்மஸ்த்திரம்” என உறுதி எடுத்துகொண்டு காட்டினுள் மறைந்து அவர்களை வளர்த்தாள்.
அதன் பயானாக சோழகுலம் மறைந்து வாழ்ந்தது. நூறு அல்லது இருநூறு வருடங்களுக்கு அல்ல! பத்தாயிரம் வருடங்களாக தன் வித்தைகளை மறைத்துவாழ்ந்து வந்து கடந்த ஆயிரம் வருடங்களாக தன் எல்லையை விரிவித்து கொண்டிருக்கிறது. அதற்குள் பல சாம்ராஜ்யங்கள் இந்த இடத்தை கடந்து சென்றுவிட்டன.
இப்போது இறுதியாக இருப்பது என வேந்தன் கூறுவதற்குள் “சோழவர்மன்” என முடித்தான் ஆகாசன்.
“சரியாக கூறினாய் ஆகாசா!” என மன்னர் அவனை மெச்ச
“அப்படியானால்ல்ல்” என ஆகாசன் இழுக்க.
“நீ நினைப்பது சரிதான் ஆகாசதீபா! உன் காரிருளானின் கட்டவிழ்க்கும் நேரமிது! அந்த அழகு மங்கை பூவாழி தெற்கு பகுதியில் ஒரு தீவில் இருக்கிறாள் என்பது ஓலைகளின் குறிப்பு! ஆம் அவளது சாம்ராஜ்யம் சுருங்கிவிட்டது. இப்போதுதான் அவளை கவர்ந்துவர சரியான தருனம்! ஆம் நான் சாகவரம் பெற போகிறேன்! அதுவும் ஆகாசதீபனின் உதவியால். அந்த அழகுமங்கைமேனி எனதாகும் நேரம் ஈசனின் குறிப்புகளும் பலனலிக்காது. அவளை எனக்காக கவர்ந்து வா ஆகாசா! பூவாழி மங்கை எனதாக வேண்டும்.” என ஓவியத்தை வாங்கிய மன்னர் “ஆகா என்ன அழகு! அழகு பதுமை இவள் ஏன் இத்தனை வருடங்களாக இந்த அழகை மறைத்து வாழ்கிறாய் என் ராணி” என வர்னித்து கொண்டிருக்க ஆகாசன் அங்கிருந்து திரும்பி நடந்தான்.
“ஆகாசா உன் பதில்?” என மன்னல் குரலிட
“நீங்கள் எனக்கு அளித்திருப்பது ஆனை!”
“அப்படியானால்”
“காரிருளானின் சங்கிலிகள் தகர்க்கபடபோகிறது சோழர்களின் குளமான வங்க்கடலும் தென்பெருங்கடலும் சலித்தெடுக்க கிளம்புகிறேன்! பூவாழிக்காக” என தீபன் நடக்க காரிருளானின் சங்கிலிகள் பனிகட்டிபோல உருக அந்த கப்பலின் மாலுமிகள் ஒருவரை ஒருவர் ஆச்சரியமாக பார்த்திருக்க ஆகாசன் கப்பலின் மேல்தளத்திற்கு வர ஆதவன் அந்த பிரம்மான்ட கப்பலை காண கிழக்கே விழித்துகொண்டான்.
-தொடரும்




No comments: