தைய்ய தைய்ய தைய்ய தக்க தைய்ய தைய்ய தைய்யா!
என ரகுமான் காதில் ஒலித்துகொண்டிருந்த நேரம் அந்த கைபேசியை எடுக்ககூட நேரம் இல்லை ரவிக்கு.
எல்லாம் அந்த கூட்டமான ரயில்தான் காரணம். அந்த ஸ்டேஸனில் மின்னிகொண்டிருந்த விளக்குகளின்
ஊடே பெரும் ஒளியையும் ஒலியையும் வீசிகொண்டு வந்தது அந்த தொடர்களாய் தொடரும் ரயில்பெட்டி.
இரைகிடைத்த மீன்கள்போல மக்கள் வெல்லம். அனைவரும்
ஏதோ போருககு போவதுபோல அந்த ரயிலை குறிவைத்ததுதான் ரவியின் துர்அதிஷ்டம். ரயில் வந்து
நிற்க ரவி தன் வழக்கமான யுக்தியை பயன்படுத்தினான். அது வேறு ஒன்றும் இல்லை. நாம் ஏற
வேண்டிய அவசியம் இல்லை ஏறுபவர்களுக்கு இடையீறாக இருந்தாலே போதும் என்ற ஆர்கிமிடிஸின்
தத்துவம்தான். இன்றும் அப்படியே செய்ய அந்த மக்கள் வெள்ளம் அவனை அடித்துகொண்டு ரயிலினுள்
தள்ளியது.
ஆனால் அவன் மிகவும் கஷ்டபட்டது அந்த கைபையினை
காப்பாற்றதான். ஆமா பின்ன தன் ரேவதிக்காக அதை வாங்கிசெல்கிறான். அதில் அவளுக்கு பிடித்த
பிரியானி பொட்டலம் அல்லவா இருக்கிறது. இந்த கூட்ட நெரிசலைவிட அதிக நெரிசலை தாக்கபிடித்து
வாங்கியிருக்கிறான் அல்லவா. தன்னவளுக்காக இதைசெய்ய மாட்டானா என்ன!. இதைவிட பெரிய காரியம்
ஒன்ன்றே செய்துவிட்டான். என்னனு கேட்குறீங்களா
ரவி ரேவதி வீட்டில் சிவப்பு கொடி இவர்களின்
காதலுக்கு. வேறு என்ன வழி சென்னை சூப்பர் எக்ஸ்பிரஸ் ரவியும் மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ்
ரேவதியும் கைகோர்த்து ஓடிவந்து விட்டனர். ரவிதான் கொஞ்சம் அவசரபட்டுவிட்டான்.
“ரேனுகுட்டி தோசை ரெடியாமா ஆபிஸ்க்கு லேட்
ஆகுதுபாரு” என கிச்சனில் இருந்த தன் மனைவியிடம் பேசிகொண்டிருந்தான். “ஏங்க இங்க வாங்க”
என அழைத்தாள்.
ரவியும் பதறிகொண்டு உள்ளே போக அந்த கேஸ்
பர்னருடன் சண்டைபோட்டுகொண்டு இருந்தாள். “என்னமா ஆச்சு” என்றான்
“என்ன மன்னிசிடுங்க” என பாவமாக நினாறாள்.
“ஏனடா குட்டிமா என்ன ஆச்சு”
“இல்ல எனக்கு சமைக்க தெரியாதுங்க அம்மாதான்
செஞ்சுதருவாங்க நீங்க என்ன திட்டுவீங்கனுதான் ட்ரை பன்னேன்”
அப்போது அவளது கையை கவனித்தவன் “ஏய் லூசு
இது என்னடி கைல காயம்” என பதறினான்
“ஒன்னும் இல்லைங்க” என்று சமாளித்தாள்.
“சமைக்க தெரியலைனா சொல்லவேண்டியதுதான்டி
சும்மா எதுக்கு கைய சுட்டுகுற வா கட்டு போடறேன்”
“இல்லைங்க உங்களுக்கு லேட் ஆகிடுச்சு நான்
வேனா உப்பமா கிண்டிதரவா அம்மா ஊருக்குபோற நேரம் அதான் கிண்டி சாப்புடுவேன்” என்றாள்.
“சரி” என்று கூறிவிட்டு அவள் அருகிலேயே அமர்ந்தான்
மேற்கொண்டு எதுவும் காயம்படகூடாது அல்லவா
பனிபோர் கேள்விபட்டிருப்போம் ஆனால் உப்புமா
போர் நிகழ ஒருவழியாக தயார் செய்து அனுப்பி வைத்தாள்.
இப்படி உப்புமாவிலேயே ஓடிய அவனது வாழ்கையில்
அடுத்த வந்தது அந்த இடி. அதன் பெயர் யூடியூப். ஆம் அதிவேக இன்டர்நெட் வந்ததிலிருந்த
தன்னவனுக்காக மூன்றில் ஒருபங்கு நாளில் ஓடுவது அந்த சமையல் குறிப்புதான்”
அந்த சமையல் குறிப்புக்கு கிடைத்த ஆய்வக
எலி நம்ம ஹூரோ ரவிதான். இந்த கஷ்டத்தை இன்று நிறையபேர் அனுபவித்துகொண்டு இருக்கிறார்கள்
என்று நினைக்கிறேன்.
ஆனால் இன்று காலையில் இருவருக்கும் இடையில்
சண்டை.
“ஏங்க பிரியானி நல்லா இருக்கா”
ரவியின் மூளையில் ஒரு மின்னல் “என்ன இது
தக்காளிசாதம் இல்லையா அதுவும் இல்லாம லேசா புளிக்குதே” என்று கூற நினைத்தாலும் ரேவதி
பிரியானி தடுத்துவிட்டது. அதை முழுங்கிவிட்டு “குட்டிமா சமைச்சது நல்லா இல்லாம போகுமா”
என சாப்பிட்டுவிட்டான். ஆனால் அவள் அதை சாப்பிட்டு வாந்தி எடுத்துவிட்டாள். அப்போதுதான்
அர்ச்சனை ஆரம்பமானது.
“ஏண்டி உன்னை யாரு அதை திங்க சொன்னா? அதான்
நான் உனக்கு ஹோட்டல்ல ஆர்டர் பன்னிட்டுதான போறேன் தினமும்” என்று திட்டினான். அவள்
என்ன நினைத்தாலோ தெரியவில்லை அவள் கண்ணில் கண்ணீர் வந்தது. அதுதான் ரவியின் மனதை அரித்துகொண்டு
உள்ளது.
இன்னைகாவது அவளுக்குபிடிச்ச பிரியானி வாங்கிட்டுபோவோம்
என் செல்லம் எனக்காகதான கஷ்டபடுறா என வாங்கினான். அவளது குழந்தைதனத்தை நினைக்கும்போது
ரவிக்கு சிரிப்பு வந்தது.
ஆனால் அடுத்த நொடி அவன் முகம் வாடியது. அவன்
கையிலிருந்த அந்த பிரியானி பொட்டலம் தன்தவாளத்தில் உருண்டு ஓடியது கூட்டம் அப்படி.
சோர்வாக வீடு வந்து சேர்ந்தான். நாளைக்காவது
வாங்கி கொடுக்கனும் அவனது வாழ்வின் லட்சியம் இதுதான்.
“ஏங்க டல்லா இருக்கீங்க” சண்டைபோட்டாலும்
முதலில் பேசிவிடுவாள்.
“ஒன்னுமில்லமா”
அவனருகில் அமர்ந்துகொண்டு அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்.
அவனுக்கு ஆறுதலாக இருந்தது.
“சாப்பிடலாமாங்க” என்றாள்.
“என்னடி உப்புமாவா” இது ரவி
“இல்லைங்க பிரியானி”
“அப்போ தக்காளி சாதம்னு சொல்லு”
“இல்லைங்க நான் கடையில வாங்கிட்டு வந்தேன்”
அதிர்ச்சியானவன் “நீ எப்புடிகுட்டிமா தனியா
வெளிய போன” என்றான் அவள் இவனில்லாமல் வெளியே போகமாட்டாள்.
“இல்ல அந்த பக்கத்துவீட்டு அக்காகூட போனேங்க”
“ம்ம் வா தக்காளி சாதம் சாப்பிடலாம்” என்று
சிரித்தான். “இல்லடா பிரியானி என தோளில் செல்லமாக குத்தினாள்.
“சரி வா” என அவளை தூக்கினான்.
“ம்ம் பாத்துங்க வயித்துல பாப்பா இருக்கு”
ரவிக்கு என்ன கேட்டோம் என்று பிடிபடவில்லை.
“இனி உங்களுக்கு சமைச்சுபோட வேற ஆள் வரபோறா”
என்றாள் வெட்கத்துடன்.



