Followers

சிறுகதைகள்

[சிறுகதை][twocolumns]

கவிதாயினி

[கவிதாயினி][twocolumns]

ஸ்நாக்ஸ் டைம்

[ஸ்நாக்ஸ் டைம்][bleft]

ஜெனிபர்

[ஜெனிபர்][twocolumns]

ப்ரீத்தா

[ப்ரீத்தா][twocolumns]

கிராமத்து கிளி



“ராம் நான் கடையாண்ட போயிட்டு வந்துடுறேன் தோட்டத்த பாத்துகோ சீக்கிரம் வந்துடுறேன்பா சரியா” என ராமின் தந்தை கிளம்பிகொண்டிருந்தார்.
“ஏன்பா நானும் வாரேனே”
“இல்லப்பா நீயே டவுன்ல படிச்சிட்டு பலவருசம் கழிச்சு இப்பதான் வந்துருக்க பெரிப்பா வந்து பாக்கனும்னு சொன்னாக! அதான் நீ இரு அம்மா கம்மா கரைக்கு போயருக்கா சீக்கிரம் வந்துடுவா நீ இரு சரியா”
“ம்ம் சரிப்பா” என கைபேசியை எடுத்தான்
“பாத்து இருப்பா” என அவர் இழுக்கும் போது “பாம்பு தொல்ல இருக்கு அதான?”
“அதில்லப்பா களவானி தொல்லைங்க அதிகம் மாங்காயெல்லாம் திருடி போயிடுதுக அப்பாக்கு சரியா கண்ணு தெரியல அதான் யாருனு பாக்க முடியல வந்தா பொறவாள கிடக்குற கயித்த எடுத்து மரத்துல கட்டிவை தோல உறிச்சுபுடுறேன்”
“ம்ம் சரிப்பா ஏன் இங்க டவரே கிடைக்கமாட்டேங்குது”
“நம்ம ஊருல டவர்கம்பம் நட விடலப்பா அதான் அப்டி”
“ஓ.. சரிப்பா போயிட்டுவாங்க” என அந்த இயற்கை காட்சியினை காண தலை நிமிர்ந்தான்.
கீழே சருகுகள் காலில் பட காலிலிருந்த செருப்பினை கழற்றிவிட்டு வெறுங்காலால் அதை உணர்ந்து சிலிர்த்தான். அப்படியே சருகொலியை கேட்டுகொண்டே நடக்க காதோரமாக அந்த தேனி ரீங்காரிமிட்டது.
குக்கூ.. குக்கூ.. ஒழிந்துகொண்டு பாடல் மட்டும் பாடிகொண்டிருந்தாள் முகம் தெரியாத எழுதாளர் போல..
கிளிகளும் கீச்சிட இயற்கையோட ஒன்றிவிட்டான். சில்லென்ற காற்று அவனை தழுவ நிமிர்ந்தான். இரண்டு வண்ணத்து பூச்சிகள் அவன் காதோரம் உரசிசெல்ல அதை பார்த்தான்.
“அக்கா ஓடுக்கா ஆளு வந்துட்டாங்க” என கத்திகொண்டே ஒருபொடியன் கீழே குதித்து ஓட அவனை சுற்றி நாலைந்து பொடிவாண்டுகள் ஓட்டம் பிடித்தன.
ஆனால் ஒரு தாவனி கீழே உட்கார்ந்துகொண்டு காலை பிடித்துகொண்டிருந்தாள்.
“யாரும்மா அது தோட்டத்துல” கத்திகொண்டே வேகமாக முன்னேறினான்.
அவளோ காலில் குத்தியிருந்த முள்ளினை எடுத்து போட்டுவிட்டு அதில் காயத்தில் எச்சில் வைத்தாள் அப்போது அவளின் முன்னால் வந்து நின்றான்.
“ஏய்!!!”
“மாமா!” ஆனந்தமாக அவனிடம் கூற
“ஏய் ராஜேஸ்வரி நல்லா குந்தானி மாதிரி இருந்த நீயாடி இப்புடி ஒல்லியா இருக்க”
“போ மாமா”
“ஏய் நிஜமா நம்ப முடியலடி”
“நான்தான் மாமா”
“ரொம்ப நாளாச்சுடி உன்ன பாத்து”
“நானும்தான்” குரலில் ஒரு ஏக்கம் தெரிந்தது அவளுக்கு உள்ளூர ‘மாமாவ கட்டி புடிடி’ என அசரீரி ஒலித்தாலும் அதை அடக்கிவைத்தாள்.
“நீதான் இந்த வாண்டுகள கூட்டிகிட்டு வந்து மாங்காய பறிச்சு போறியா அப்பா புலம்புறாங்க”
“இல்ல மாமா நான் இல்ல”  என அவள் இடுப்பில் ஒரு துண்டில் மாங்காயினை வைத்து சுற்றியிருந்தாள்.
“அப்ப நீ திருடல… எங்க அந்த துண்ட காட்டு”
“அய்யோ மாமா அது வந்து”
“திருடி…” என சிரித்தான்.
“சரி அப்பா வர்ரதுகுள்ள கொண்டு ஓடிருடி”
“வரட்டும் எனக்கு என்ன பயம் நீதான் பறிச்சு குடுத்தேனு சொல்லிடுவேன்”
“ஓஓ..”
“ம்ம்”
“அப்படின்னா அப்பா என்கிட்ட ஒருவேளை குடுத்தாரு”
“என்ன மாமா?”
“திருடி மாட்டுனா மரத்துல கட்டிவைக்க சொல்லிருக்காருடி”
‘உன்ன கட்டிக்க போறவள நீ கட்டிவச்சா என்னடா’
“கட்டிகோ மாமா”
“நிஜமா கட்டிருவேன்டி” (உன்னதான்டி கட்டிகனும் எனக்குனு வேற யாரு இருக்கா என் செல்ல ராட்சசி)
“கட்டிகோ மாமா”
“இந்த வாரேன் இரு” என கயிறினை எடுத்து வந்தான்.
“ஏன் மாமா! மஞ்சள் கயிறு இல்லியா”
“அது கல்யானத்தப்போ பாத்துகலாம்டி” சிரித்துகொண்டே அவன் கூற அவள் கண்ணில் கண்ணீர் நிறைந்தது.
“ஏய் ஏன்டி அழற”
“போடா மாமா! இங்க நம்ம மருதாயி கிளவி அவன் கிளிமாதிரி பொண்ண இழுதுட்டு வந்துநிக்க போறான்பாரு நீ ஏமாந்துபோகபோற” அப்டின்னு என்ன அழவைக்கும் தெரியுமா”
“அப்ப நீ என்னடி சொல்வ”
“நான் என்ன சொல்ல இப்டிதான் வீட்டுகுள்ள போயி அழுவேன்”
“அடி லூசு சிருக்கி” என கண்ணீரை துடைத்துவிட்டுகொண்டே “உன்னவிட்டா எனக்கு யாருடி இருக்கா அது மாதிரி என்னவிட்டா உனக்கு யாரு இருக்கா”
உடனே ஓடிவந்து கட்டிபிடித்துகொண்டு அவனது மார்பில் முகம் புதைத்துகொண்டாள்.
“ஏய் என்னடி நான் உன்ன கட்டிபோடனும் இங்க என்னடான்னா நீ என்ன கட்டிபோடுற”
“போடா மாமா” என அவனது மார்பின் சூட்டினை ரசித்துக்கொண்டிருந்தாள்.
“அது சரி இப்டியே நிப்போம் அப்பா வந்தா அப்புறம் பஞ்சாயத்துதான் நெக்ஸ்ட் கல்யானம்தான்டி”
“அப்ப பாக்கட்டும்”
“உன்ன இந்த மாதிரி பாக்கும் போது அந்த நாள்தான்டி ஞாபகம் வருது” என அவள் தலையினை வருடி கொடுத்தான்.
“எந்த நாள் மாமா”
“ம்ம் சின்ன வயசுல நான் ஹாஸ்டலுக்கு போகும் போது என்ன ஒரு குந்தானி கட்டி பிடிச்சுகிட்டு போகாதடா நானும் வாரேன்னனு அழுதாளே அந்த ராஜிதான் ஞாபகம் வருது”
அடுத்ததாக அவனது மார்பில் தன் கையால் மெதுவாக குத்தினாள்.
“வலிக்குதுடி! ஐயோ அம்மா”
“வலிகட்டும் நல்லா”
“ஏன்டி இந்த கொலைவெறி”
இப்போது அவனது மார்பிலிருந்து விலகியவள் “நேத்து எங்க அம்மா அப்பாவ பாக்க வந்தீள?”
“ஆமா அத்தைய பாக்க நான் வரகூடாதா”
“சொல்றத கேளு மாமா இல்லைனா அடிவிழும்” கொஞ்சள் குரலில் கூறினாள்.
“உத்தரவு பொன்டாட்டி” லேசான வெட்கசிரிப்பினை அவனது வார்த்தை வரவைத்தது அவளிடம்
“என்னடி வெட்கபடுற! சின்ன வயசுல நல்லா தின்னுபுட்டு என் மேலு உப்புமூட்ட எறிகிட்டு என்ன சாகடிப்ப”
“அது அப்போ”
“இப்ப என்னவாம்”
“நீ பேச்ச மாத்தாத”
“சரி மாத்தல சொல்லுடி”
“எங்க வீட்டுக்கு வந்தீள”
“ஆமாடி அப்பாவும் நானும் வந்தோம்! அத்தைக்கு புடவை மாமாக்கு வேஸ்டிலாம் கொண்டுவந்தேனே”
“என்ன பத்தி கேட்டியா மாமா நீ”
“அதான் கோவமா”
“ம்ம்! நீ அத்த ராஜி எங்கனு கேப்பினு நான் ஜன்னல்வழியா உன்ன பாத்துகிட்டே இருந்தேன் தெரியுமா நீ கேக்கவே இல்லைல”
“ஓ அதான் கோவமா?”
“ஆமா போ நான் கோவமா போறேன்” என திரும்பியவளின் கையினை பிடித்து நிறுத்தினான்.
அப்படியே அவளை இழுக்க மீண்டும் மார்பில் புதைந்துகொண்டாள் அந்த ஒல்லிகுச்சி உடம்பு காரி.
“ஏன்டி அப்ப உன்னபத்தி எப்டிடி கேக்குறது அம்மா அப்பா எல்லாம் இருந்தாங்க அத்த என்ன நினைப்பாங்க ஆனா என் கண்ணு முழுசும் உன்னதான் தேடுச்சு தெரியுமாடி”
“போ நீ ஐஸ் வைக்குறியா”
“ஆமா ஐஸ் வைக்குறேன்” நெற்றியில் முத்தமிட்டான்.
“இங்க!!!” என கன்னதினை காட்டினாள்.
“என்னடி சின்ன வயசுல எச்சி மாமா ச்சீனு சொல்லுவ இப்ப என்னனா கன்னத்த காட்டுற”
“அப்போ சின்ன பொண்ணு மாமா விவரம் தெரியாதுல்ல இப்ப பெரிய பொண்ணு”
“அப்ப விவரம் தெரியுமா?” நக்கலாக கேட்டான்
“சீ போட மாமா”
“ஏய் ஒன்னு மறந்துட்டேன்டி”
அவள் கண்களாலேயே என்ன என கேட்டுவிட்டு அவனை ரசித்தாள்.
“ஹாப்பி பர்த்டேடி”
“ஏன்டா”
“இல்ல புதுதாவனிலாம் போட்டுருக்கியே அதான்”
“சீ மாமா இது தீவாளிக்கு எடுத்தது அழகா இருந்துச்சு அன்னைக்கு போடல புதுசா பீரோல்ல பூட்டிட்டேன் இப்ப உனக்காகதான் போட்டுகிட்டு வந்துருக்கேன் எப்டி இருக்கு” என கண்களில் காதல் தழும்ப கேட்டாள்.
“எனக்கு பிடிக்கலடி”
“பிடிக்கலியா?..” முகம் சுருங்க ஆயத்தமாகும்போது.
“ஆமாடி பிடிக்கல உனக்கு ஒரு பட்டுபுடவை எடுத்து வந்தேனே அத கட்டிவருவேன்னு பாத்தேன்”
“இரு கட்டி வருவேன்னு பாத்தியா”
நாக்ககினை பற்களுக்கு இடையில் வைத்துகடித்தான். “ஐயோ உளறிட்டேனா”
“ஏய் மாமா சொல்லுடா”
“இல்லடி அம்மா சொல்லுச்சு ராஜிய கூப்பிடுடான்னு நான்தான் அவங்க்கிட்ட அம்மா இப்ப வந்தா கதவு நிலைகம்பத்த பிடிச்சுகிட்டு வெட்கபட்டுகிட்டே நிப்பா சரிய பேச முடியாது. நாளைக்கு நீங்க ரெண்டு பேரும் எங்கயாவது கிளம்பிடுங்க எப்புடியும் பாக்க வருவா அப்ப பேசிகிறேன்னு சொன்னேன்”
“அப்ப திட்டம் போட்டுதான் பன்னியா மாமா”
“ஆமாடி உன் முட்ட கண்ண ஜன்னலுக்கு வெளிய இருந்து நான் பாத்து ரசிச்சுகிட்டுதான் இருந்தேன் நீயா வெளிய வருவேன்னு பாத்தேன்”
“போடா!!! நீ கூப்டுவேனு பாத்தேன் நான்”
“சரிவிடுடி”
“ஆமா அந்த புடவை எங்க மாமா”
“ஆங்ங்.. என்ன கேக்குற அத்தகிட்ட குடுத்துட்டேனே”
“அவங்க காட்டலியே என்கிட்ட”
“ஏய் நல்லாகேளுடி என் பச்சைகிளிக்கு சிவப்பு கலரு”
“அந்த டிசைன் போட்டது”
“ஆமா வீட்டுல இருந்துச்சு அததான் எடுத்தேன் மாமா அம்மா ஏய் அது கல்யான புடவைடி வை அத தொடாத அப்டின்னு திட்டுனாங்க!! நான் அம்மாவோட கல்யான புடவைன்னு வச்சுட்டு வந்துட்டேன் மாமா”
“ஹா ஹா..”
“ஏன்டா சிரிக்குற”
“யாரு சொன்னாலும் நம்பிடுறியேடி செல்ல பொண்டாட்டி” என கட்டிபிடித்துகொண்டான்.
“மாமா விடு அத்த வந்துட போறாங்க”
“அவங்க கம்மாய்க்கு போயிருக்காங்க லேட் ஆகும்டி”
“விடுடா யாராவது பாத்துட போறாங்க”
“விடமாட்டேன்.. பஞ்சாயத்து கல்யானம்…”
“கல்யானமா??”
“ஏன் பன்னிக்க மாட்டியாடி”
“இப்ப வேணாம் மாமா”
“எனக்கு வேணுமேடி”
“அடம்பிடிக்காத மாமா”
“முடியாது இப்பவே என்ன கட்டிகோ”
“கட்டிகிறேன்டா மாமா” என அவளும் அவனை அனைத்துகொண்டாள்.
“நல்லா கட்டிகுறடி நீ! பெரிய பொண்ணா ஆகிட்ட”
“சி போடா லூசு மாமா”
“மாமா உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சுருக்கேனே”
அவள் அவனது கண்களை நிமிர்ந்துபார்க்க அவன் குனிந்து அவளது கண்களில் ஊடுருவினான்.
“என்னன்னு பாக்குறியா! இந்தா பாரு” என தனது பையில் கையை விட்டு அந்த தாலியை காட்டினான்.
அவளது கண்ணில் ஆனந்த கண்ணீருடன் அவனது கன்னதில் மாறி மாறி முத்தமிட்டாள்.
“ஏய் என் கன்னத்தி எச்சி பன்றியா நீ! இரு நான் உன் கன்னத்த எச்சி பன்றேன்” என அவளது கன்னத்தில் முத்தமிட்டான்.
“சீ போ மாமா நீ கெட்ட பையன் கன்னத்த எச்சி ஆக்கிட்ட”
“எச்சிய தொடைக்கனுமே என்ன பன்னலாம்” என கூறிகொண்டே கன்னதினை கடித்தான்.
“வலிக்குது மாமா ஆவ்வ்.. இருடா நானும் கடிக்குறேன்” என அவளும் கடித்துவைக்க இருவரும் கட்டிபிடித்துகொண்டு நின்றனர் காதலுடன் கிளிகள் முத்தபறிமாற்றம் கொள்ள
“ஏய் யாருப்பா அங்க தோப்புல கட்டிபிடிச்சுகிட்டு நிக்குறது?”
அப்புறம் என்ன மக்கா பஞ்சாயத்துதான் கல்யானம்தான் காதல்தான்..
-ஜெனி.



No comments:

தொகுப்பு...