“இந்த
ரேடியாவ அமத்தி தொலையமாட்டானுவ” அவள் குரல் கேட்டதுபோல சட்டென் இரைந்துகொண்டிருந்த
ரேடியோ நின்றது..
“ஏன்
புள்ள கோவபடுற.. திருவிழான்னா அப்டிதான் இருக்கும்.. ரெண்டு எடுத்துக்கு வெளிய வந்தாதான
அதவிட்டு உள்ளயே அடைஞ்சுகிடந்தா எப்புடி தெரியும்”
“ஆங்ங்..
நீ காதல்லாம் பன்ற வருவ நான் அப்புடியா”
“அடியாத்தி!
நான் காதல் பன்றேன் மேடம் கப்பல் ஓட்டுறாங்களா?.. இந்த ஹார்ட் கீசெயினு யாருக்கு வாங்குனியாம்?”
கவிதாவினை வம்புகிழுத்தாள். கீதா.
“ஏய்
நான் காதல் எல்லாம் பண்ணலப்பா”
“பாத்தாக
பாத்தாக இந்த மாதிரி ஊருக்குள்ளு நிறைய பேர பாத்தாக இப்போ எல்லாம் போன இடம் தெரியாமலா
இருக்கோம்”
“சீ
லூசு”
“ஏய்
சீ பேய் பங்களாவ சொல்லல புள்ள.. அவுக ஓடி போனத சொல்றேன்”
“நான்லாம்
ஓட மாட்டேன்பா”
“ஆமா
உன் மாமன்தான் பைக்கு வச்சுருக்குள்ள நீ எப்புடி ஓடி போவ”
“அது
பைக்குல ஏத்திட்டுதான் அடுத்த வேலை பாக்குமாக்கும்”
“ஏய்
உனக்கு இல்லாத உரிமையா சாவிய புடுங்கி வச்சுகோ”
“அம்புட்டுதான்
என்ன அடிச்சே போட்டுரும்”
“நீங்க
அடிச்சதுதான் பாத்தோமே”
“சீ..”
வெட்கத்தில் கவிதாவின் முகம் சிவந்தது.
“
“பார்டா
வெட்கத்த.. ஏய் போதும் போதும் என்கிட்ட வெட்க பட்டு என்ன ஆகபோவுது உன் மாமன் வருவான்
அவன்கிட்ட வெட்கபட்டாலாவது நால் ஐஸ்கிரீம் கரெக்ட் பன்னலாம்”
“மாமா
ஐஸ்லாம் வாங்கி தராது..”
“நல்லா
ஐஸ் வைக்கும்னு சொல்றியா?”
“என்ன
முழுசா பேச விடுறியா நீ”
“சரி
சொல்லு”
“எனக்கு
ஜலதோஷம் பிடிச்சுகுமாம் அதனால ஐஸ்லாம் வாங்கி தராது”
“உனக்கு
ஐஸ் பிடிக்குமா பிடிக்காதா”
“பிடிக்கும்தான்”
“உன்
மாமன டீல்ல விட்டுட்டு என்ன கட்டிகோ நான் வாங்கி போடுறேன்” கீதா கூற “சீ லூசு..” அடிக்க
வந்தாள்.
“உங்க
பிரட்சனை எப்போதான் ஓயுமோ” சேகர் பின்னால் வந்து நின்றான்.
“ஐ
எப்போடா வந்த ரேடியோ சத்தம் கம்மி பன்னி போட மாட்டியா?”
“ஏய்
என்னடா இது ஒரு திருவிழால வந்த ரேடியோ ஆபரேட்டருக்கு உத்தரவு போடுற”
“ஹலோ
நீ என் உட்பி அதுதான் பர்ஸ்ட் ஓகேவா”
“ஆமாடி
அப்போ அப்போ சொல்லு இல்லைனா நான் மறந்துட போறேன்”
“என்ன
மறந்த அம்புட்டுதான் பாத்துகோ இந்த கத்திய எடுத்து குத்திபுடுவேன்” கீதா தன் காதலனை
மிரட்டி கொண்டிருக்க கவிதாவின் கண்கள் சுற்றிலும் தன் மாமனை தேடியது.
“ஏய்
என்ன புள்ள தேடுற”
“ஒன்னுமில்லயே”
“ஏய்
சுந்தர தான தேடுற”
“ம்ம்”
கீதா
சேகரினை பார்த்தாள்.
“ஹலோ
ஹலோ மைக் டெஸ்டிங் ஒன் டூ திரி….. இங்கு கவிதா
என்ற குழந்தை தனியாக அழுதுகொண்டிருப்பதாள் சம்மந்தபட்ட நபர் எங்கிருந்தாலும் மைக் செட்
போடுமிடத்திற்கு வந்து அழைத்து செல்லுமாறு கேட்டுகொள்கிறோம்”
“அண்ணே
என்ன பன்றீங்க”
“என்னமா..”
மைக்கினை எடுத்துகேட்டுவிட்டு “அட யாருப்பா அது சுந்தர்? வந்து சீக்கிரம் கூட்டி போங்கப்பா”
கீதா
தன் தோழியின் கழுத்தில் கிடந்த செயினை சுட்டிகாட்ட “கழுத்துல அடையாளத்துக்கு ஒரு செயின்
போட்டுருக்குப்பா சீக்கிரம் வந்த அந்த குழந்தைய கூட்டி போங்க”
“அண்ணே
என்ன பன்றீங்க” மைக்கினை புடுங்கினாள்.
“ஐயோ
தங்கச்சி மைக் ஆஃப் பன்னல..”
“ஐயோ
இத எப்புடி அமத்துறது” என திரும்ப அவனிடம் கொடுத்தாள்.
“நானாவது
கொழந்தைனு உன் மாமனுக்கு மட்டும் புரியுற மாதிரி சொன்னேன் நீ பேசி ஊருக்கே கன்பார்ம்
பன்னிட்ட”
“ஐயோ
அண்ணே இப்போ என்ன பன்றது?”
“ஏய்
நடிக்காத லூசு.. உங்க மேட்டர் ஊருக்கே தெரியும்
அப்டியே எதும் தெரியாத பாப்பாமாதிரி ஆக்ட் குடுக்குறது.. கண்ண பாரு சின்ன பப்பாவாட்டாம்”
“நான்
என்ன சின்ன புள்ளயா?”
“நீ
எனக்கு சின்ன புள்ளதான் கவிதா..” கன்னதினை கிள்ளியவள்..” சரி நான் என் ஆளுகூட திருவிழாவ
சுத்தி பாக்க போறேன் நீ இங்கயே இரு உன் ஆளு வருவான்ன் வந்து ஐஸ் வாங்கி இல்ல இல்ல ஐஸ்
வச்சுட்டு போவான்”
“ஏய்
அவன் இவன்னு பேசத”
“ஹலோ
மேடம் உங்களுக்குதான் அவரு மாமான் எங்களுக்கு அண்ணன் அதனால் அப்டிதான் கூப்டுவேன்..
நீவாடா போலாம்”
“ஆக
மொத்தம் ஆம்பளைங்கள மதிக்குறதே இல்லடி நீ” பேசிகொண்டே இழுத்து சென்றான்.
சிறிது
நேரத்தில் ஒரு பல்சர் அங்கு வந்து நின்றது.
“லூசு
மைக்லதான் சொல்லுவியா”
“நான்
பண்ணல கீதாதான் சொல்லிபுட்டா”
“அவகூட
சேரதன்னு உனக்கு எத்தன வாட்டி சொல்றது”
அவள்
அருகில் வந்து நின்றான்.
“மாமா
குடிச்சியா?”
“இல்லியே”
“உண்மைய
சொல்லுடா அடிவாங்காத மாமா”
“நிஜமா
இல்லடி கிளி”
“வாசனை
வருது”
“அது
என் பிரண்டுக்கு ஊத்தி குடுத்தேன் ஊருல இருந்து திருவிழாக்கு வந்துருக்காங்கள்ள”
“அப்போ
குடிக்குற பிரண்டுகூடலாம் சேர்ரியா நீ”
“அதுக்காக
பழகுறதுக்கு முன்னாடி நீங்க குடிப்பீங்களான்னு கேட்டா பழக முடியும்”
“நான்
எது சொன்னாலும் உனக்கு நக்கலா போச்சுல்ல மாமா போ என்கிட்ட பேசாத”
“ஏய்
நில்லுடி கிளி.. பேசாதன்னு சொல்லாதடி”
பறந்து
போய்விட்டாள்.
‘பைக்குள
வேகமா போவாதன்னு சொன்னா கேக்குறதில்ல குடிக்காதன்னு சொன்னா கேக்குதில்ல.. ஞாயித்துகிழமை
தலைக்கு எண்ணெய் தேச்சு குளிக்க சொன்னா கேக்குறதில்ல… சே நான் ஒருத்தி உன்ன நம்பி இருக்கேனேன்னு
கொஞ்சமாவது அக்கறை இருக்கா உனக்கு” என தவனியின் முந்தானையினை கசக்கிகொண்டு அவன்மீதிருந்த
கோவத்தில் ஏதோ ஒரு தெருவினில் புகுந்து நடந்தாள். ஆனால் கால கொடுமை அங்கு ஒரு நாய்
அவளை பார்த்து உறும பயந்துபோயி நின்றாள்..
“ஐயோ
மாமா..” என வாய் உளறியது.
“என்னடி
நாய பாத்து மாமான்னு சொல்ற ஒருவேள அதோட பேரும் சுந்தரா? ஏய் சுந்தர் இங்க வாங்க.. பிஸ்கட்
சாப்புடுறீங்களா” என கூறியதும் அந்த நாய் கோவமடைந்து உர்ரென உறுமிகொண்டு வர ஓடி வந்து
அவனை கட்டி பிடித்துகொண்டாள்.
“சுந்தர்
உங்க வேளை முடிஞ்சது நீங்க போகலாம்”
“என்னது?”
என நிமிர பார்த்தாள் ஆனால் அவனோ இருக்கமாக கட்டிபிடித்திருந்தான் அதனால் அவளால் நிமிற
முடியவில்லை.
“ஓ
சாரி சாரி.. ஜானி ஓடு ஓடு..” அந்த நாய் ஒரே ஓட்டமாக ஓடியது.
“டேய்
மாமா அது உம்முட்டு நாயா”
“இல்லடி
வேட்டைக்கு வச்சுருக்குற நாயி யாருனாலும் கூட்டி போகலாம்”
“அப்போ
ஏன்டா என்ன கடிக்க வந்துச்சு?”
“ஆங்ங்
அதுவா வரலடி கிளி நான்தான் இங்க இருக்க சொன்னேன்”
“என்னது”
“தப்பு
உன்மேல இருந்தாலும் சரி என்மேல இருந்தாலும் சரி நீ கோவிச்சுகிட்டு வந்துடுவ அதான் எப்புடியும்
இந்த ஒரு தெருதான் இருக்குன்னு பாத்தேன் அதான் நம்ம ஜானிய இங்க போட்டாச்சு”
“லூசு
லூசு.. நான் போனா அப்புடியே விட்டுருவியா? சமாதான படுத்த மாட்டியா”
“சமாதானபடுத்துனா
தலையாட்டிடு போயிடுவ இப்ப பாரு கட்டி பிடிச்சுட்டு நிக்குற”
வெட்கத்துடன்
உடனே விலக்கிகொண்டாள்.
“ஏன்டி
தாவனி போட்டு சொக்க வைக்குற.. சரி இந்த ஐஸ் சாப்புடு” என ஒரு கோனை எடுத்து நீட்டினான்.
“ஐ
கோனு..” ஆனந்தமாக வாங்கிகொண்டாள் கவிதா.
“சரி
நீ கோன் சாப்புடு நான் போயி ஒரு ரவுண்டு..”
“என்னது..”
“இல்லடி
கிளி ஒரு ரவுண்டு ராட்டினம் சுத்திட்டு வந்துடுறேன்னு சொல்ல வந்தேன்”
“நீ
குடிக்க போற”
“ஈஈஈஈ..”
“பல்ல
காட்டாத அதான் ஐஸ் வச்சுட்டியே போ..”
“கோவமா..”
“இல்ல”
என முறைத்தாள்.
“சாரிடி..”
“நீ
குடிக்காம இருக்க நான் என்ன செய்யட்டும் பெத்தனாச்சி அம்மா என் மாமாக்கு புத்திய குடு..”
“நீ
ஒன்னு குடுத்தா போதும்” என கூறி முடிப்பதற்குள் ஒரு முத்தம் கொடுத்து ஓடினாள்.
திகைத்து
நின்றவன்.. “ஏய் நான் குடிக்க மாட்டேன் கிளி இன்னைக்கு “
“ம்ம்
தெரியும்”
“ஆனா
நாளைக்கு??”
திரும்பி
நின்று ஒரு பறக்கும் முத்தம் கொடுத்தாள்.. “இது நாளைக்கு..”
சுந்தர்
சிரித்துகொண்டே நிற்க அந்த நாய் மீண்டும் அவள் முன்னால் வந்து நிற்க ஓடி வந்து கட்டிகொண்டாள்.
“ஹலோ
மைக் டெஸ்டிங்.. யப்பபா சுந்தர் அந்த பாப்பாவ கொண்டாந்து மைக் செட் போடுற இடத்துல ஒப்படைச்சுருங்கப்பா
அந்த பாப்பாவுக்கு சொந்தகாரி கீதா காத்துகிட்டு இருக்கேன்.. வூட்டுக்கு போவனும்ல்ல.
ஏய் புள்ள சீக்கிரம் வாடி..கொஞ்சுனது போதும்…”
-ஜெனி.




No comments: