Followers

சிறுகதைகள்

[சிறுகதை][twocolumns]

கவிதாயினி

[கவிதாயினி][twocolumns]

ஸ்நாக்ஸ் டைம்

[ஸ்நாக்ஸ் டைம்][bleft]

ஜெனிபர்

[ஜெனிபர்][twocolumns]

ப்ரீத்தா

[ப்ரீத்தா][twocolumns]

ரொம்ப குட்டிகதை



“ஏய் இப்புடிதான ரோட்ட பரப்பிகிட்டு போவிங்களா” சுந்தர் பின்னால் பைக்கில் வந்துகொண்டு கேட்டான்.
“ஆங்ங் உங்க அப்பன் வீட்டு ரோடா” கீதா முறைத்தாள்.
“ஏய் சும்மா இருடி” என ரகசியமாக கீதாவின் கையினை கிள்ளினாள் கவிதா!..
“அடி யாத்தி உங்க மாமாவ சொன்னதும் கோவபடுறியே புள்ள அப்டியே முகம்லாம் சிவந்து போயிடுச்சு”
“அவுக போனதும் பேசிகலாம்டி” கையினை கிள்ளினாள் கவிதா
“ஏய் வழிய விடுறீங்களா இல்ல ஏத்திபோடவா” ஹரனை அடித்தான்.
“ஒதுங்க ஓட்டுறது” கீதா
“வாயி! உன்னலாம் என்னடி சொல்றது உன்ன எவனாவது கட்டிகிட வந்தா செத்தான்டி”
“வரும்போது பாத்துகிடலாம்” கீதா விடாமல் வாயடித்தாள்.
“ஏய் ப்ளீஸ்பா சும்மா இரு” கவிதா தன் தோழயிடம் கெஞ்சினாள்.
“உன் மாமாங்குறதுக்காகலாம் விடமுடியாதுங்க மேடம் என்ன பேசுறான் பாத்தியா”
“ப்ளீஸ்பா மாமா பாவம்பா”
“ஏய் என்ன கிசுகிசுன்னு பேசுறீங்க வழிய விடுங்க”
“மாமா! இரு” என கவிதா ஒதுங்கி நின்றாள்.
உடனே சுந்தர் பைக்கினை உறும “மெதுவா ஓட்டு மாமா” கத்துவது அவன் காதில் விழுவதற்குள் போய்விட்டான்.
சோகமான முகத்துடன் இருந்தாள் கவிதா.
“ஏய் கவி நீதான்டி மாமான்னு உருகுறு பாத்தியா உன்ன கண்டுகவே இல்ல இந்த லட்சனத்துல அவனுக்கு பிடிச்ச ரெட் புடவைய வேறு முதல் தடவ சுத்திகிட்டு வந்த”
“இல்லப்பா நீ இருக்கீல அதான் மாமா பேசாம போகுது”
“நல்ல மாமா! வாய பாத்தில எப்டி திட்டுனான்னு”
“ப்ளீஸ்பா அவன் இவன்னு பேசாத”
“சரிங்க மேடம்”
“மேடம்னு ஏன்டி சொல்ற”
“ஆமா உன் ஆளு பைக் ரேசர் மாதிரி ஒட்டுது எங்கயாவது விழுந்து கால உடச்சுக்க பேறான் நீ அவன வச்சு காலம்பூரா கஞ்சி ஊத்து”
“நான் அதுக்கும் ரெடிதான்டி”
“என்னமோடி போ! நான் பாட்டிய பாத்துட்டு வந்துடறேன் நீ வீட்டுக்கு போ” என இடையிலை கழன்றுகொண்டாள்.
மாமா புது வருசத்துக்கு உனக்கு பிடிச்ச புடவைய அம்மாக்கு தெரியாம எடுத்து போட்ட்டு வந்தா என்ன பாக்கமயே போறியா இரு! ஆமா அது என்ன பைக்கில இம்புட்டு வேகம் உனக்கு! கீழ விழுந்தா எனக்குதான வலிக்கும் நீ ஜாலியா படுத்துகுவ! நான்தான அழுவேன்! இரு நானே உன் கால ஒடச்சு கஞ்சி ஊத்துறேன் அப்புறம் எப்புடி பைக் ஓட்டுறேன்னு பாக்கலாம். தனக்குள் அவனை செல்லமாக திட்டிகொண்டே நடந்துவந்தாள்.
“ஓய் கிளி!”
சுற்றி திரும்பி பார்த்தாள்.
“இங்க இருக்கேன்” ஒரு வீட்டின் மறைவிலை நின்றிருந்தான்.
“ஐ மாமா”
“இங்க வா” சைகை காட்டினான்.
சுற்றிலும் யாரும் இல்லை என உறுதி செய்துகொண்டு அவனருகில் சென்றாள்.
“ஏய் பச்சகிளி! என்னடி இது சிவப்புலாம் போட்டு மாமாவ அசத்துற”
“உனக்கு பிடிக்கும்னு அம்மாக்கு தெரியாம எடுத்து சுத்திகிட்டேன் நல்லா இருக்கா”
“அடி பாவி உனக்கு குடுக்க சொல்லி நான்தான்டி அத்தகிட்ட குடுத்தேன் அத நீ திருடி வேற போட்டு வந்துருக்க”
“ஓ அதான் அம்மா பாத்துட்டு ஒன்னுமே சொல்லலியா”
“ஆமா சின்ன பாப்பா எதும் தெரியாது”
“சரி நான் சண்டை! உன்மேல கோவமா இருக்கேன்” முகத்தினை திருப்பிகொண்டாள்.
“நீ ஒரு மூலையில கோவமா இரு” என அவளது தோளில் கைவைத்துகொண்டே அவளை திருப்பினான்.
“என்ன மாமா பன்ன்ற”
“இரு” என அவள் கழுத்தில் அவள் ஆசைபட்டு தந்தையிடம் சண்டையிடும் அந்த நெக்லஸ் தொங்கியது.
“ஐ எப்ப வாங்குன மாமா”
“நான் வாங்கி பத்து நாள் ஆச்சு! இந்த புடவைக்கு மேட்சா இருக்கும்ல அதான் எடுத்து வச்சேன்”
“அப்போ ஏன் புடவையோட தரல?”
“ஆமா தாலி கட்டுன அப்புறம்தான் நகைதரனும்னு நம்ம ஊரு வழக்கம் தெரியாதா”
“அப்ப இப்ப எதுக்கு கழுத்துல மாட்டி விட்ட”
“ஆங்ங்.. இந்த புடவைல உன்ன பாத்ததும் உன்ன இப்பயே கல்யானம் பன்ன ஆசை அதான் கல்யானம் பன்ன கட்டிவிட்டேன்டி லூசு பச்சகிளி.. இல்ல சிவப்புகிளி”
“அப்ப கல்யானம் ஆகிறுச்சா நமக்கு”
“ம்ம் ஆமா சந்தேகம்னா இந்த கண்ணாடில பாரு” என காட்ட அந்த நெக்லஷில் அழகாக இருந்தாள். அவளே அவளை சைட் அடித்தாள்.
“அப்ப பொண்டாட்டி சொல்றத கேப்பியா இனிமே”
“ஓ ராணியம்மா ராஜியமா சொல்லுங்க கிளி செஞ்சுடுறேன்”
“நீ இனி பைக் வேகமா ஓட்டுவியா” என காதை திருகினாள்.
“ஏய் கிளி ஆஆ! எங்க நீ நெக்லஸ் வாங்காம போயிடுவியோன்னுதான்டி வேகமா வீட்டுக்கு போயி எடுத்து வந்தேன்! மறுபடியும் இந்த புடவை நீ எப்ப போடுவியோ தெரியல அதான்டி”
“இருந்தாலும் நீ பன்னது தப்பு”
“அப்ப தண்டனை”
“தண்டனை…” என காதிலிருந்து கையை எடுத்துவிட்டு யோசித்தாள். அதற்குள் அவன் அவள் கன்னதில் முத்தம் கொடுக்க “ஏய் சீ! இதுதான் தண்டனையா மாமா”
“ஆமா”
“ம்ம் நல்ல தண்டனைதான்”
“ம்ம் உனக்கும் தண்டைனை இருக்கு”
“எனக்கா?”
“ஆமா கீதா கூட சேராதனு உன்ன எத்தன தடவ சொல்றது”
“நான் சேறுவேன்”
“அப்ப உனக்கு தண்டனை இருக்கு”
அவளும் அவனை கன்னதில் முத்தம் கொடுக்க “சேந்துகோ கிளி ஆனா தினம் தண்டனை இருக்கு உனக்கு”
“அதுகாகவே சேறுவேன் மாமா” என இருவரும் சிரிக்க “ஐயோ யாரோ வாராங்க” என கவிதா அவன்  மார்பில் ஒழிந்துகொண்டாள்.
“ஏய் கூட்டு களவானிகலா….. தெரியும்டி அதான் உன்ன தனியா அனுப்புனேன்” என கீதா பார்த்துவிட்டாள்.. கவிதாவோ வெட்கபட்டுகொண்டு சிரித்தாள்.
-ஜெனி.



No comments:

தொகுப்பு...