Followers

சிறுகதைகள்

[சிறுகதை][twocolumns]

கவிதாயினி

[கவிதாயினி][twocolumns]

ஸ்நாக்ஸ் டைம்

[ஸ்நாக்ஸ் டைம்][bleft]

ஜெனிபர்

[ஜெனிபர்][twocolumns]

ப்ரீத்தா

[ப்ரீத்தா][twocolumns]

வேட்டையன்


ரங்காவின் மனதில் அந்த பழைய நினைவுகள் ஆட்டோகிராப் படம்போல ஓடிகொண்டிருக்க பின்னனி இசையும் மனதில் ஓடியது என்பதில் எந்த ஐயமும் இருக்கவாய்ப்பில்லை. அவனது மூளையில் அசை போட்டாலும் கைகள் தனது வேலையை செய்துகொண்டிருக்க அருகில் தன் பால்ய நண்பர்கள் சேதுவும் ரமேஷும் அவனுக்கு கூடுதல் பலத்தை கொடுத்தனர். ஆம் ரங்காவிற்கு தனியாக ஒரு கதை உள்ளது.
“சார் இந்த பஸ் வேங்கபட்டி போகுமா” என தனது கையில் இருந்த சிகெரெட்டில் அந்த எரிந்த கொண்டிருந்த நாடாவின் நுனியிலிருந்த தீபிளம்பை ஏற்றிகொண்டிருந்த ஒருவனிடம் கேட்க. அவன் வாயிலிருந்த சிகரெட் கீழே விழுந்தது.
“டேய் ரங்கா நீ உயிரோடதான் இருக்கியா! உங்க ஐயா உன்க்கு திவசமெல்லாம் பன்னிட்டாருடா”
“நீங்க?!!” என ரங்கா இழுக்க
“ம்ஹூம் அதுக்குதான் இந்த தாடிய எடுக்க சொல்லி வள்ளி கத்திகிட்டு இருக்கும் மாமா பூதம் மாதிரி இருக்க மாமான்னு”
“டேய் சேது” என கண்டுகொண்டான் ரங்கா.
“அப்பாடா கண்டுபிடிச்சுட்டடா”
“டேய் வீட்டுல எப்புடி இருக்காங்க”
“எங்க இருக்காங்க இருக்கோம் நானும் வள்ளியும் அவ்வளவுதான்”
“மாமா அத்தைலாம் என்ன ஆனாங்க”
“அவங்க தீப்பட்டி ஆபிஸ்ல பயர் ஆக்ஸிடன்ட்ல இறந்துட்டாங்கடா”
“என்னடா சொல்லுற அந்த மலை ஆபிஸ்தான?”
“அட ஆமாடா நாமகூட அங்க முயல் வேட்டைலாம் ஆடி அந்த வாட்ச்மேன்கிட்ட வாங்கி கட்டிருக்கோமே உன்னகூட எல்லா டிரஸ்ஸையும் அவத்து விட்டு ஊருக்குள நடக்க வச்சானே” என சேதுகூற அங்கு அருகிலிருந்த ஒருபெண் ரங்காவை சைட் அடித்து கொண்டிருந்தாள். அந்த வார்த்தையை கேட்டதும் அது வெட்கமா இல்லை ஏளனமா தெரியவில்லை வெட்கம்தான் சிரித்துகொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
“யாருடா இது லூசு மாதிரி” என மனதில் நினைத்தாலும் ரங்கா பதினைந்த வருடத்திற்கு பிறகு தன் நண்பனை பார்கிறானல்லவா அந்த பூரிப்பில் விட்டுவிட்டான். அந்த வார்தையை ரங்கா கூறியிருந்தாள். அந்த பெண் நிச்சயம் சேதுவிடம் அடிவாங்கியிருப்பாள்.
ஆம் ரங்கா ஊரைவிட்டு போன அந்த நாள் நடந்த சம்பவம். வேங்கைபட்டி என்றகிராம்ம் மக்களுக்கு சொந்தமென்றாலும் அதில் உட்கார வைக்கபாடாத ஏஜமான் அந்த தேசிங்கு ஜமின்தார்தான். வெள்ளையர்களுக்கு பிறகு ஊரை ஆண்டுகொண்டிருக்கிறார்.இல்லை இல்லை கொத்தடிமைகளை மேய்த்துகொண்டிருக்கிறார்.
அதிலும் தன் அக்கா காலரா காய்சலால் பாதிக்கபட! அவளுக்கு பதிலாக வேலை செய்த தன் நண்பன் சீனுவை அந்த ஜமின்தார் தன் பெல்டால் கழுத்தை நெறித்து “ஏன்டா பொடி பயலே உங்க அக்கா எங்கடா! என் ரூம் குள்ள என்ன தவிர ஆம்பளை வரகூடாதுனு உனக்கு தெரியாதா” என அவன் கால்கள் துடிக்க தனது நண்பனின் மரணத்தை ஒழிந்துருந்துபார்த்த ரமேஷும் சேதுவும் மௌனம் காக்க ரங்கா உணர்ச்சிவசபட்டுவிட்டான். ஆம் தன் கையில் வேட்டைக்கு வைத்திருந்த உண்டிவில்லிலிருந்த கல் ஜமின்தாரின் கண்ணில் பட்டு (அடுத்த நிலையை ஊகித்துகொள்ளுங்கள்)
“ஆஆ கண்ணு ஏய் அந்த பொடிபயல பிடிங்கடா” என்று ஒற்றைகண் ஜமின்தார் குரல்கொடுக்க அப்போது சிட்டாக பாய்ந்தவன்தான் இந்த ரங்கா. பின் பதினைந்த வருடம் பூமியை சுழற்றிவிட்டு இப்போதுதான் வந்த சேர்ந்திருக்கிறான். அதுவம் தன் ஊருக்கு தன் நண்பனிடமே வழிகேட்கும் அவலம் வேறு.
“ஆமாடா ரமேஷ் என்ன பன்றான்”
“அவன் என் தங்கச்சியதான கட்டிருக்கான்”
“யாரு பர்வதமா?!!” என்று ரங்காவின் குரல் குழறியது. ஆம் ரங்கா திரும்ப வந்ததற்கு பர்வதம் முக்கியமான காரணம் (எல்லாம் காதல்தான்! ஐயா கனவின் பர்வதம் வந்ததால் இங்கு வந்துள்ளான்) ஆனால் இந்த செய்தி ஏமாற்றம்தான்.
“ஆமாடா அவதான்! ஆமா உன் பொஞ்சாதி எங்க”
“அந்த ஏன்டா கேக்குற எனக்கு இன்னும் அந்த மாதிரி பாசகயிறெல்லாம் வீசலைடா” எனகூற “ம்ம் வீசிடுவோம் சித்திபொண்ணு மேகலா இருக்குள்ள”என ரமேஷ்கூற இருவரும் சிரித்தனர்.
“சரிடா வா போகலாம் பஸ் எடுத்துருவான் போல இருக்கு” இது ரங்கா கையில் சிங்கார சென்னையின் பொருட்கள்.
“இல்லடா உன் தங்கச்சி அதான் வள்ளி காய்கறி வாங்கிட்டு வரலைனா எங்க மணிகூட கட்டி போட்டுருவா”
“யாருடா மணி மணிமேகலையா” என ரங்கா சிரித்தான்.
“டேய் நாம நாய்க்கு எப்பவும் மணின்னுதான்டா பேரு வைப்போம். இப்ப என்ன புதுசா கேக்குற”
“ஆமாடா நீங்க இன்னும் அத மறக்கலையா” என பூரித்தான்.
“சரி போ கிளம்பு சாயங்காலம் வீட்டுக்கு வா! முதல்ல நாட்டமைய பாத்து ஒரு புக்கிங் போட்டுரு” என்ன சேதுகூற பையிருந்த ரம்மை எடுத்து காட்டியவன் “புக் பன்னிட்டுதான் வந்துருக்கேன்” என கூற அந்த பஸ்ஸில் ஏறினான்.
அனைவரும் பஸ்ஸில் குறுகுறுவென அவனை பார்க்க ஏற்கனவே பார்த்தமுகம்போலதான் தெரிந்தது அவனுக்கு ஆனால் தன் நண்பனையே அவனுக்கு அடையாளம் தெரியவில்லை இதில் இவர்கள் எப்புடி. என நினைத்தவன். அட ஜமின் என்ன ஆனான்னு கேக்காம வந்துட்டேனே! சரி விடு இருந்தாலும் கிளபோல்டா இருப்பான் இல்லைனா என்ன மறந்துருப்பான் சோ பிரட்சனை இல்ல. என மனதை தேற்றினான்,
அந்த பஸ் மலைமீது ஆடி ஆடி மெதுவாக சென்று ரங்காவை ஒரு இடத்தில் உமிழ்ந்துவிட்டு செல்ல “கடைசி ஸ்டாப் கரிமருந்துகுடோன்தான்” என்று கூற அங்கிருந்த பாதிபேர் அங்கு வேலைக்கு செல்கிறார்கள் என்பது தெரிந்தது.
சரி என தன் ஊரின் வாசனை அவனை வரவேற்றது சென்னையின் அந்த இடஞ்சல் நாற்றம் என அனைத்தையும் கடந்து இன்று சுதந்திரம் தூய்மையான் காற்றுடன் அந்த குருவிகளின் இசையும் சேர அவனை பல பான்டு வாத்தியங்கள் வரவேற்பதாக நினைத்தான். பின் ஊரில் சென்று அந்த அப்பத்தா அப்புறம் சொந்தங்கள் சித்தப்பா வாயாடி தங்கச்சிகள் அப்புறம் தனது டாவுகள் என அனைவரிடமும் தன்னை அறிமுகம் செய்துவிட்டு அவர்களுக்கு வாங்கி வந்த பொருட்களை கொடுத்துவிட்டு தனது வீட்டை பார்க்க முத்துராசு அண்ணன் அந்த புது டீசர்ட்டை அணிந்துகொண்டு.
“என்னப்பா ரங்கா உங்க அப்பத்தாவா”
அவன் மௌனமாக நின்றான்.
“அது சாகலைடா உங்க தாத்தாவ முழுங்கிடுச்சு அப்புறம் உங்க அப்பன் ஆத்தா அது சாகாதுடா ஆயிசு கெட்டி இன்னைகு காலையிலகூட தண்ணிபிடிக்க வந்த சண்டைய நீ பாக்கனுமே” என மெச்ச மகிழ்ச்சாயாய் ஓடி சென்று தன் அப்பத்தாவை கட்டிகொண்டு அழுதான். அவரும் தன் பேரனே உணர்ந்துகொண்டு.”ரங்கா பேராண்டி இந்த அப்பத்தாவுக்கு கொள்ளி வைக்க வந்துட்டியாப்பா” என பூரித்து அழுதார்.
பின் என்ன வழக்கமான கவனிப்புகள் அவனுக்குபிடித்த முட்டைகுழம்பு! அவன் அதை எவ்வளவு சாப்பிட்டாலும் வயிறு நிறையாது அப்பாத்தா  இன்னும் போடு என கேட்பான். அவரது கை பக்குவம் அப்படி. இன்றும் அப்படியே சாப்பிட கும்பகர்னன் போல அவனுக்கு புது வயல்தான் பராமரிக்க வேண்டும்.
நல்ல வேலையாக ரமேஷ் வந்து காப்பாற்றிவிட்டான். “டேய் பங்காளி எப்படா வந்த” என கூற ரங்கா கையை கழுவிவிட்டு நடந்து வந்து “என்னடா பர்வதத்த கட்டிகிட்ட” என கிண்டல் தொனியில் கேட்க “டேய் நீ ஏன் அப்புடி கேக்குறேன்னு புரியுதுடா! பின்ன என்னடா அவ உன்ன நினைச்சுகிட்டே வாழ முடியுமா சொல்லு அம்பளை அப்படி இருந்திடலாம் ஒரு பொண்ணா என்ன பன்னுவா சொல்லு அதான்டா” என இழுத்தான்.
“அடேய் சாமி நான் சும்மாதான்டா கேட்டேன் நீ ஏன் சீரியஸா எடுத்துகிற! சரி அவ கண்ணுல கண்ணீர் வராம பாத்துகோடா!”
“அந்த ஈர வெங்காயத்த நாங்க பாத்துகிறோம் நீ வா”
“அட பாவி ஒரு குற்ற உண்ர்ச்சியை இல்லடா உனக்கு” என இருவரும் சிரித்தனர்.
பின் ரங்காவின் பதினைந்துவருட சென்னை சர்வைவல் லைப் கிஸ்டரி ஓட்டபட்டது. அதை மூச்சுமுட்ட முடித்தவன்.
“சரிடா நீ எங்க வேலை செய்யுற”
“நமக்கு என்னடா இருக்கு இந்த ஊர்ல எல்லாம் அந்த ஜமின்தாரோட கரிமருந்து குடோன்தான்”
ரங்கா சறிது பயந்துகொண்டு “ஜமின்தார் உயிரோட இருக்கானாடா”
“ஆமாடா” என்றான் புன்னகை மாறாமல்.
“என்னடா சொல்லற”
“அடேய் விட்டா இப்பவே பஸ் ஏறி பட்டனம் போயிடுவ போலியே! அந்த ஒத்த கண்ணன் செத்துட்டான்தா இப்ப அவன் மகன் பூபதி சின்ன ஜமின் பேர்லதான் மில் ரன் ஆகிட்டு இருக்கு”
“அப்பாடா” என்ற வார்த்தைகள் ரங்காவின் வாயிலிருந்த வந்து விழுந்தன.
“என்ன மாப்ள ரெண்டுபேரும் என்ன பேசிகிட்டு இருக்கீங்க” என சேது சேர்ந்துகொண்டான்.
“வந்துட்டாரு என் மச்சான்! எல்லாம் உன் தங்கச்சிய பத்திதான் போயிகிட்டு இருக்கு” இது ரமேஷ்.
“உனக்கு வாய் கொழுப்பு அதிகம்டா பர்வதத்திற்கு என்னடா குறை! எப்ப பாத்தாலும் அவள குறை சொல்லறதே வேலையா போச்சு! உனக்க பிடிக்கலைனா என் மாப்ள ரங்காவுக்கு கட்டிவச்சிடுடா” என்றான் சேது.
“சரிப்பா என்ன விட்டா சரி” என மூவரும் சிரித்து முடிய ரங்காவிற்கு அப்படி நடந்தால் மிகுந்த மகிழ்ச்சிதான் என்பது அந்த சிரிப்பு சத்ததில்ஐ குறைவான சத்தம் இவனுடையதுதான். அதில் ஊர்ஜிதம் ஆகியது.
மூவரும் தோட்டத்தில் சென்று சிறிது நேரம் தன் நண்பன் கொண்டுவந்த வெளியூர் சரக்கை மூச்சுமுட்ட குடித்தனர். ரமேஷ் அந்த யோசனை திடீரென வந்தது. “என்னடா சரக்கு இருக்கு சைடிஸ் எங்கடா”
“ஆமா இவரு சைடிஸ் இல்லாம கிழிக்க மாட்டாரு! ஊறுகாய தின்னுகிடடு இருந்தவனுக்கு கொழுப்ப பாத்தியா” இது சேது.
“இப்ப என்னடா சைடிஸ்தான பிரட்சனை நாம வேட்டைக்கு போயி முயல் பிடிச்சு ராத்திரி பொறிச்சு தண்ணி அடிக்கலாம்டா” என்றான் ரங்கா. சரி மாப்ள சூப்பர் இது சேது.
நீண்ட நாட்களுக்கு பிறகு தன் நண்பர்களுடன் பேசிகொண்டு நினைவுகளை அசைபோட்ட ரங்காவின் கைகள் தீவிரமாக அந்த முயல் கன்னியை பின்னிகொண்டிருந்தன. ஆம் இன்று இரவு வேட்டைதான். ரங்கா அளவிற்கு கன்னி தயாரிப்பதில் அந்த ஊரில் ஆட்கள் இல்லை. ஆனால் பதினைந்து வருடம் அவன் இதை தொட்டதில்லை.
“என்ன மாப்ள இவ்வளவு வருசம் ஆகியும் உன் வேகம் குறையலடா” என்று வியந்தான் சேது “கூடையே பிறந்தது போகாது” என முடியை கோதிவிட “ஆமா இவரு பெரிய கழட்டி அப்புடியே கிழிச்சுபுட்டாரு நானேல்லாம் கன்னி கட்டுனா முயல் இனமே அழிஞ்சுடும் ” என ரமேஷ் அரை போதையில் உளற ரங்கா சிரித்துகொண்டே அந்த வேலைகளை முடித்தான்.
ஒரு வழியாக அவற்றை எடுத்துகொண்டு மலைமீது ஏறினர். சற்று தூரம்தான் எல்லாம்அந்த மருந்துகுடோனை நோக்கிய நடைதான். ஆம் அங்கு வேலை செய்யும் ஆட்கள் நேரமில்லாமையாலும் அந்த மருந்தின் நெடியாலும் இசரியாக சாப்பிடாமல் சென்றுவிடுவார்கள். பாவம் அந்த நெல்மணிகள் வீனாக தரையை அடையும். அந்த மலை சற்று வறட்சிகண்டிருந்ததால் முயல்கள் இரவில் அந்த மிஞ்சிய சாதங்களை நம்பியே இருக்கும். அந்த முயல்களை பிடிக்கதான் இந்த நடை.
சூரியன் மேற்கில் கன்னிவைத்துகொண்டிருந்த நேரம் மலையேற துவங்கியவர்கள் சரியாக இரவு எட்டமணியை சிறிய முள் முத்தமிட்ட நேரம் அடைந்தனர்.தூரத்தில் அந்த குடோனில் விளக்குகள் எரிய அதில் நிறையபேர் வேலை செய்வது தெரிந்தது.
“என்னடா நைட்டும் வேலைதானா?”
“ஆமாடா நைட்டும் வேலை இருக்கும் சாவடிக்குறானுக” என்று சேது கூற “சரி ஆளுங்க இருந்தா முயல் வருமா” என்றான் ரங்கா.
“பத்து மணிக்கு எல்லாரும் கிளம்பிடுவானுகடா”
“அப்ப சரிடா பன்னிரண்டு மணிக்கு கன்னிய பாத்துகலாம்” என கூறிவிட்டு அந்த குடோனை சுற்றி ஆங்காங்கே கன்னி வைத்துவிட்டு அந்த ஆலமரத்தடியில் படுத்துகொண்டனர்.
“என்னடா ரங்கா அப்புறம் இந்த லவ் எதுவும்” என பேச்சை ஆரம்பித்தான் சேது. “உன் தங்கச்சிய லவ் பன்னிக்கிட்டு அப்புறம் எப்புடிடா” என கேட்க ஆசைதான் ஆனால் அவளது கனவன் ரமேஷ் போதையிலிருந்தாலும் சுயநினைவுடன் இருக்கிறான் அல்லவா அதனால் “ஆமாடா என்னதான் வந்து தேடிதேடி வந்த லவ் பன்ன போறாளுக சும்மா இருடா”
“சரி வள்ளிய எப்புடி பிக்கப் பன்னுன அவங்க அப்பன் ஸ்டிரிக்ட் ஆச்சே! சின்ன வயசுல மாங்கா திருடுனதுக்கே உன்ன எறும்பு புத்துகிட்ட கட்டி வச்சான். இப்ப அவரோட பொண்ண எப்புடி கரெட் பன்ன”
“ம்ம் அது பெரிய கதைடா அத எப்புடி சொல்லுறது! இன்னொரு நாள் சொல்லுறேன்டா” என வானத்தை பார்த்தான்.
“யப்பா என பிளாஸ்பேக்கா?! அது எங்களுக்கும் தெரியனும் இப்புடி உனக்கு மட்டும் ஓடகூடாது சரியா!” என கூற சேது தன் கனவில் ஆழ்ந்தான்.
நட்சத்திரங்கள் இடமாற்றத்தை தொடங்கின.கூடவே மாடுகளை மேய்த்த கிருஷணன் போல அந்த வின்மீன் கூட்டங்களை மேய்த்துகொண்டு நகர்ந்தான் சந்திரன்.
மிகமெதுவாக ஓடும் அந்த காட்சியை மட்டும் பார்த்துகொண்டிருந்தால் யாருக்குதான் தூக்கம் வராது. ஆம் ரங்காவும் உறங்கிபோனான். ரமேஷ் சொல்லவே வேண்டாம் ஆல்ஹகால் ஆலகால விஷமாக வேலை செய்ய இந்த ஜென்மத்தில் அவன் எழுந்திரிக்க வாய்பில்லை. சேது வள்ளியை நினைத்துகொண்டு அங்கிருந்த ஆலமர விழுதின் மீது காலை போட்டுகொண்டு தூங்கிகொண்டிருந்தான்.கூடவே ரங்காவின் கண்களும் உத்தரவு போட்டன.
சரி கனவிலாவது நல்ல ஹீரியின்கூட ஆடலாம் என ஆவலாக தூங்கினான். ஆம் பர்வதம்தான் ரங்காவிற்கு இல்லையென ஆகிவிட்டாளே அப்புறம் என்ன கட்டுபாடு.  ஆனால் அந்த ஊரின் ராசி அப்படி அவனுக்கு கனவில் அந்த ஜெமின்தார் சாட்டையை எடுத்துகொண்டு “டேய் படவா பொடிபயலே என் கன்னுல கல்ல அடிச்சிட்டா ஓடுற. இப்ப வந்து மாட்டிகிட்டியேடா உன்ன” என கழுத்தறுத்துபோடுவதுபோல கனவு வந்து மறைய மூச்சுவாங்க எழுந்தான். பழக்கமான கனவுதான் ஆனாலும் இன்று ஊரின் வாசம் அல்லவா அதனால் கொஞ்சம் ரியலாக இருக்க ரங்காவிற்கு வேர்த்துவிட்டது. அதிலும் இறந்த ஜமின்தார் கனவில் வருகிறார் என்றால் இந்த காட்டில் யாருக்குதான் பயம் வராது.
நெற்றியிலிருந்து வியர்வை கழுத்தை அடைய அருகில் பார்த்தான் சேது இல்லை. திடுக்கிட திரும்ப அருகில் ரமேஷ் போதையில் படுத்திருந்தது சற்று ஆறுதல் தந்தது. மணியை தனது ரேடியம் வாட்சில் பார்த்தான். சரிதான் சிறிய கனவெனறாலும் அதிக நேரத்தை பிடித்துவிட்டது. ஆம் இப்போது பன்னிரண்டு எப்படியும் இரண்டு முயலாவது சைடிஸ்க்கு உண்டு.
சரி இந்த சேது எங்க போனான். என பார்க்க சற்று தூரத்தில் நின்று சிகரெட்டை பற்றவைத்துகொண்டிருந்தான். ‘இவனுக்கு இந்த சிகரெட்டுலதான்டா சாவு” என நினைத்துகொண்டு எழுந்து நிற்க அவன் உருவம் தெரியவில்லை. ஆனால் புகையின் நெடி ரங்காவின் நாசியை துளைத்துசென்றது.
“டேய் சேது என்ன போலாமா” என ரங்காவின் குரல் அவனை அடையும்முன் அந்த க்கமாக திரும்பிகொண்டு கையை மட்டும் ஆட்டியது.
“என்ன ஆச்சு அம்மாவாசை அன்னைக்கு இப்புடி ஆகிடுவானா?” என தனக்குளை கேட்டுகொண்டு “டேய் ரமேஷ் தனியா இருக்கான்டா” சத்தமிட்டான் ரங்கா.
அந்த சேது தன் மச்சான எனகூட பாக்காமல் மீண்டும் கிளம்பி வா எனபது போல கையை காட்டி அசைத்தான். “சரி இவன் எந்திரிக்க வாய்பில்ல” என அவன் பின்னால் நடந்தான் ரங்கா!
சேதுவம் நடக்க துவங்கினான். அதேவேகத்தில் ரங்கா நடக்க சிறிது மூச்சுவாங்கிதான் போனது ரங்காவிற்கு. தனது முட்டியில் கைகளை வைத்துகொண்டு மூச்சுவாங்கினான்.
ஆனால் சேது நின்றுகொண்டு மீண்டும் கையை ஆட்டினான். “டேய் நின்னு கூட்டிபோடா” இது ரங்கா
அதற்கு எந்த பதிலுமில்லாமல் மீண்டும் கையை ஆட்டியது அந்த உருவம். ஆம் இது ரங்கா என்றால் அந்த ஆலமரத்தில் ரமேஷின் அருகிலிருப்பது யார்?
இல்லை அதுவும் சேது இல்லை. உறங்கிகொண்டிருந்த ரமேஷின் பினத்தை அந்த ரத்தம் தாடையில் வடிய ரோட்டில் அடிபட்ட ஓநாய் தின்றுகொண்டிருநதது. பினமே பினத்தை தின்ன இந்த சேது யார்?
ஆம் அந்த உருவத்தின் பின்னால் நடந்துகொண்டிருந்தான் ரங்கா! காரிருலில் விளக்கும் உள்வாங்கிகொள்ளும் அந்த நடு நிசி!.
வானத்தை பார்த்தான் ஆம் அங்கே நிலா காவலனை மேகங்கள் தங்களது லஞ்சத்தால் மறைத்துவிட்டுது. அந்த சிறு வெளிச்சத்தில் பார்க்க சேதுவின் முகம் லேசாக தென்பட்டது. ஆனால் புகை தலையின் உச்சியில் வருவதாக ஒருபிம்பம் ரங்காவிற்கு.
“என்னடா இது” மனதில் சிறு பயம்தான்.உள்ளூர வியர்த்துவிட்டது. டேய் நில்லுடா” என சத்தமிட்டான்.
ஆனால் அந்த உருவம் மீண்டும் கையை ஆட்டவே இன்னும் பத்தடி தூரம்தான் இருக்கும். “இருடா உன்ன” என ஓடினான். அவனது காலடிக்கு ஏற்ப அந்த உருவமும் வழக்கமான வேகத்துடன் நடக்க.
சிறிது நேரத்தில் அந்த தூரத்தில் நூலளவுகூட மாற்றமில்லை. ரங்கா குழம்பிபோனான். “நீங்க யாரு” என குரல் குழம்ப அந்த உருவம் மீண்டும் கையை ஆட்ட “சேது” என ஒரு வித்தியாசமான குரல் அழும் குரலுடன் சேர்த்துகேட்டது.
“சேதுவா!!”
“ம்ம் ஆமா உன் பிர்ண்டுதான்டா! நீ மட்டும் எங்கள விட்டுட்டு இருக்க உன்னால எப்புடிடா முடியுது” என அந்த உருவம் திரும்பாமல் கூறும்போது அதன் கை எரிந்திரிந்தது. தோல்கள் இல்லாமல்கரி பூசியது போல ஒரு தோற்றம். இல்லை இல்லை எலும்புகள் ஆங்காங்கே தெரிந்துகொண்டிருந்தன.
ஆம் அந்த புகை சிகரெட்டலிருந்த வரவில்லை. அவனது உடல் எரிந்த்தால் வந்த வாசம் அது. கரிமருந்துடன் வீசியது. சட்டென அந்த உருவம் அந்த கரிமருந்த குடோனுக்குள் ஓடி மறைய “அம்மா ஐயோ எரியுதே வலிக்குது! ஐயோ போயிட்டியே ஆஆஆ அம்மா” என பலரின் அழுகுரல் கேட்டது.
சற்று திரும்பி பார்த்தான். மூளையின் கட்டுபாட்டில் இதயம் இல்லை ரங்காவிற்கு. கால்கள் நடுங்க திரும்பி பார்க்க அந்த பேருந்து எரிந்த நிலையிலிருந்தது.
அந்த குடோனும் முழுதாக தீரற்றி இருக்க நரிகள் ஊழையிடும் சத்தமும் கூடவே அந்த அழுகுரலும் கேட்க சில வெள்ளை உருவங்கள் அலறிகொண்டு வெளியே ஓடிவருவது போன்ற காட்சி தென்படவே பயத்தில் மயங்கிவிட்டான். இல்லை இறந்துவிட்டான்.
காலையில் ஆதவன் வர தன் பினத்தினருகே அமர்ந்திருந்தான் ரங்கா. அவனால் தான் இறந்ததை உணரமுடியவில்லை.
“சார் ஏன் இவனுக இப்புடி இங்க வந்து செத்து கிடக்கானுக”
“அதுவா ஏட்டு இங்க முன்னாடி ஜமின்னு ஒருத்தரு இருந்தாரு அவரு கொஞ்சம் கொடுமை காரர்தான் ஆனா என்ன பன்றது வேலை வாங்கனும்ல! அவருமேல கோவபட்டு அவர் குடோன் வர்ர நேரமா பாத்து கொழுத்திட்டானுக! ம்ம்ம்(என யோசித்துவிட்டு) அவன் பேரு சேது! ம்ம் ஆனா அன்னைக்கு வேலை செஞ்ச எல்லாரும் செத்துட்டாங்க! மிச்சமிருந்த ஊருகாரனுக ஊர காலிபன்னி போய் நகரத்துக்கு போயிட்டானுக! இப்ப ரெண்டு வருசமா என்னனு தெரியல ஊரவிட்டு போனவங்க எல்லாரும் செத்துகிடக்கானுக இங்க வந்த அனாதை பினமா” என அந்த இன்ஸ்பெக்டர் கூற அருகிலிருந்த ரங்கா அதை கேட்டுகொண்டே இன்ஸ்பெக்டரின் பெயரை பார்க்க அதில் பூபதி என இருக்க சேது கூறியது நினைவுக்கு வந்தது.
“ஜமினுக்கு ஒரு மகன் இருக்கான்டா பூபதி” என மனதில் ஓட தன் உடலுக்குள் நுழைந்தான். ரங்காவின் உடல் லேசாக மூச்சுவிடவது போல தோன்ற பூபதி அதை கவனித்துவிட்டு கையிலிருந்த கர்சீபை அந்த ரங்காவின் மீது போட மூச்சு அடங்கியது.
“சரி ஏட்டு இந்த பினத்த போஸ்மாட்டம் பன்ன அனுப்ப வேண்டாம்! பக்கதுல இருக்குற ஆலமரத்துக்கு அடியில புதைச்சிடலாம் இல்லைனா நம்மல கழுத்தருப்பானுக மேல இருந்துகிட்டு”
“சார் வழக்கம்போலதான பன்னிகலாம் சார்” அந்த பினத்தை இழுத்துகொண்டு இருவரும் அந்த ஆலமரத்தை நோக்கி நடந்தனர்.
ரங்கா இந்த மருந்து குடோனில் சென்று தலைகீழாக தொங்கினான். சேதுவின் அருகில் ஆவியாக “என்னடா நீயும் செத்துட்டியா” இது சேது….
-முற்றும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

தொகுப்பு...