வசந்தி!!
வசந்தி!!... மழைதூரலுடன் சேர்ந்துகத்திகொண்டிருந்தார் வசந்தியின் தாய்
“என்னம்மா…”
“ஏன்
ரொம்ப ஒரு மாதிரி இருக்க நீ”
“இல்லியேமா
நல்லாதான இருக்கேன்” வசந்தியின் குரல் கூறினாலும் முகத்தில் கலவரம் தொற்றிதான் இருந்தது
அதை இத்தனை வருடங்களாக கூடவே இருந்ததாய் கவனிக்கவில்லை என்றால் அது அபத்தம்தான்.
“இல்லியேமா
உன்கிட்ட ஏதோ மாத்தம் இருக்கு எதுக்கும் சாயந்தாரம் வந்து பெரிப்பாகிட்ட மந்திரிச்சி
கயிறு கட்டிடலாமா”
“அம்மா….!!!”
சளிப்பாக கூறினாள் வசந்தி.
“சாமி
விசயம்டி அப்டி சொல்லாத..”
“ஏம்மா
காலங்காத்தால சாமின்னு சொல்லி என் மூட் ஸ்பாயில் பன்ற”
“என்னடி
பேசிகிட்டுருக்க நீ சாமி இல்லைனா நீ இருப்பியா இல்ல நம்ம குடும்பம்தான் இருக்குமா?”
“ஆமா!!
ஆமா… சரிம்மா நான் கிள்புறேன்” என நடந்து கிளம்பினாள் அவள் கட்டறுந்துவிட்ட கன்றாக
சுற்றிதிரிந்து தான் பார்த்து பழக்கம் ஆனால் அந்த துள்ளல் அடங்கியிருந்தது.
அதிலும்
கடவுள் என்றால் சுத்தமாக ஆகாது சாமி என்று வார்த்தையில் எரிமலை குழம்பு இருக்கும் போல.
ஆனாலும் அவள் தாயோ நேத்தி எடுத்து வேண்டிய பிறகுதான் நீ பொறந்த என சொல்லும் போது வசந்திக்கு
ஆத்திரமாக வரும். பின்ன தந்தையை சிறுவயதிலேயை ராணுவத்திற்கு தாரை வார்த்துவிட்டு இளமையில்
மிகவும் கஸ்படுகிறாள் என்றால் என்ன செய்வது அதனால்தான் இந்த கோவம்.
“சாயந்தாரம்
வந்து பெரிப்பாகிட்ட கயிறு மந்திரிச்சு கட்டிலமா” என மூளைக்குள் ஒலித்துகொண்டிருக்க
அந்த குண்டும் குலியுமான சாலையில் நடந்து சென்றாள். அட்டா ஆச்சரியமாக அந்த குழிகளில்
யாரோ புன்னியவான் மணல்களை போட்டு மெப்பியிருந்தான். ஆமாம் அவளுக்கு புன்னியவான்தான்
பின்ன நேற்று இடறிவிழுந்து கையல் ஏற்பட்ட சிராய்ப்பின் வலி இருந்துகொண்டுதானே இருந்தது.
“ஹலோ
மேடம்! வசந்தி மேடம்”
புத்தகத்தினை
இறுக பற்றிகொண்டு வேகமாக நடந்தாள்.
“ஒரு
நிமிசம் நிக்கலாமே”
கையிலிருந்த
பென்சிலை இரண்டாக முறித்தாள். ஆனால் ஆறுசாமி வேகமாக ஓடி வந்த அவள் முன் நின்றான்.
“என்ன
மாமா வேணும் உனக்கு?”
“பார்டா
மரியாதைலாம் இருக்கா?”
“மாமா
உங்கள மதிக்காமலாம் இல்ல மாமா இப்புடி ரோட்டுல நிறுத்தி பேசுறதுதான் சரியா இல்ல யாராவது
பாத்தா என்ன பன்றது”
“சரிங்க
மேடம் இந்தாங்க இத படிச்சு பாத்துட்டு ஒருமுடிவு சொல்லுங்க” என கையிலிருந்த லட்டரை
நீட்டினான்.
அவள்
குழப்பத்துடனும் தயக்கதுடனும் நிற்க “இந்தா தேனு பிடி சும்மா பிகு பன்னாத” என கையில்
தினித்துவிட்டு வழக்கமாக வெட்டி சங்கம் கூடும் இடத்தில் போய் அமர்ந்தான்.
அதை
அரை மனதுடன் பிரித்தாள். அந்த கவரினை கிழிக்கும் ஒவ்வொரு அசைவிலும் அவனது குணம் வெளிபட்டது.
அதிலும் சாமியே பிடிக்காது என்றிருக்க பேரை பார் ஆறுசாமியாம். ஒன்னுக்கே நர்த்தன் ஆடிடுவா
இதுல ஆறுனா கோவம் வராதா.
“ஏய்
உன் ஆளு வர்ரார்டி” தோழிகள் வழக்கம் போல ஏற்றிவிட அவர்களை முறைத்துவிட்டு “உனக்கு ஆசையா
இருந்தா போயி கட்டிகோ என்ன சாக்கா வச்சு நீ சைட் அடிக்கலாம் வேணாம்”
அவன்
மெதுவாக அவளிடம் நடந்துவந்தான். “தேனு!!..” அழைத்தான்
“ம்ம்?”
என கனைத்தாள் கேள்வியாக.
“வா
நான் வேணா உன்ன காலேஜ்ல விடுறேன்”
“எவ்வளவு
ஆசையா கூப்புடுறாங்க” என தோழிகள் சீண்டினாலும் இவன் ஒவராக அட்வான்டேஜ் எடுத்துகிறானோ
என தோன்றும் வசந்திக்கு. பின்ன அப்ப இறந்தபின் வசந்திகுடும்பத்தினை தாங்கும் பொறுப்பினை
எடுத்துகொண்டவன் அல்லவா! கொஞ்சம் அரசியலில் இருந்தான் ஆனால் எதிர்கட்சியாய் போய்விட
இப்போது அவனது குரல் பலமாக இல்லை. இருந்தாலும் பணவரவிற்கு குறைவில்லை. சொந்தமாக தொழில்
ஓடிகொண்டிருக்கிறது என்பதை விட பத்து பேருக்கு வேலை கொடுக்கிறான் என்பதுதான் உண்மை.
என்னதான்
மாமா பையனாக இருந்தாலும் வசந்திக்கு ஏனோ ஒருவெறுப்புஇருந்துகொண்டுதான் இருந்தது. பின்ன
தந்தையின் சடலத்தினை வைத்துகொண்டு அவனது தந்தை “என்னம்மா வசந்திய இதுக்கு மேல படிக்க
வைக்கனுமா எவனுக்காவது பிடிச்சு குடுத்துடலாம்ல”
“இல்லங்க
அண்ணே என்னத்த சொல்றது அவரோட மனசு நிறைஞ்ச ஆசை பொண்ணு கலக்டர் ஆகுறத பாக்குறதுதான்”
“என்னமோ
அடுத்தவீட்டுல அம்மி அரைக்க போற பொண்ணுக்கு வெட்டி செலவு பன்றன்னு நினைக்குறேன்” என
எழுந்துசென்றுவிட்டார். அப்போது அவரையும் அவரின் சாயலில் இருந்த அறுசாமியையும் வெறுப்பதில்
ஐயமில்லை.
“இல்ல
மாமா நான் பைக்ல வரல… பஸ் வந்துடும்”
“சரி
தேனு”
“பச்ச்!!
ஏன் என்ன அப்டி கூப்புடுறீங்க”
“தெரியல
ஏன் நான் கூப்ட கூடாதா..”
“என்ன
ஆட வெட்டுறதுக்காவே வளக்குற மாதிரி என்ன படிக்க வச்சு மாமா சொன்ன மாதிரி அம்மி அரைக்க
விடலாம்னு பாக்குறீங்களா” என அந்த பேருந்து நிறுத்ததில் அனைவரும் குழுமி இருக்கும்
போது கத்திவிட்டாள்.
அவன்
தலையை குனிந்துகொண்டு நிற்க அவனுகென ஊருக்குள் நிறைய நல்ல பெயர்தான் இருந்தாலும் அவன்
நிற்பதை பார்த்து.”ஏம்மா உன் மாமா பையன்தான இப்புடி எடுத்து எரிஞ்சு பேசற நீ”
அவள்
தலையை குனிந்துகொண்டு நின்றாள். கூடவே மழைதூரலும் விழ அதில் நனைந்துகொண்டே நின்றாள்.
அதனால்தான் எனவோ அவன்அவளை அழைத்திருக்கலாம்.
“இந்த
மழை வேற காலங்காத்தால பேஞ்சு வேலையகெடுக்குது இத சாக்காகாட்டியே இந்த பஸ் காரன் லேட்டா
வருவான் இந்த புள்ளைங்களுக்கு பரிட்சை இருந்தா என்ன பன்னுங்க”
“ஆமாக்கா
இந்த ரோட்டுல பஸ் போயி நான் செக்கப் பன்றதுகுள்ள” என அழுத்துகொண்டாள் தன் குழந்தைகளை
சுமந்துகொண்டு நின்றாள்.
“ஏம்மா
நீ எதும் ஆட்டோ பிடிச்சி போகலாம்ல”
“நம்ம
ஊரு ரோடு இருக்குற நிலமைக்கு ஆட்டோகாரன் எங்க அக்கா வாரான்; ஃபோன் போட்டா வாரேன்னு
சொல்றான் ஆனா வரவே இல்ல நேத்துகூட இப்டிதான் ஆகிறுச்சு”
என்று
பேசிகொண்டிருக்கும் போதே மழையின் அளவு தீவிரமாக அவனோ ஒரு ஏக்கமான பார்வை பார்த்துவிட்டு
வண்டியை நிறுத்திவிட்டு அந்த அவளது கண்ணில் படாதவாறு கூட்டதில் ஒழிந்துகொண்டு மழையிலிருந்து
மறைந்துகொண்டான்.
வின்னிலிருந்த
மழைதுளி வந்த ரோட்டின் நடுவிலிருந்த குளத்தில் விழ அங்கு கிடந்த நீர் துளிகள் துள்ளி
குதித்து எழுந்தன. தலைவனை கண்டு ஆர்பரிக்கும் தொண்டர்களாய் அந்த நீர்குமிழ்கள் தாவி
குதிக்க, சிறு குழந்தைகள் அதை பார்த்து “ஏன் அக்கா இப்டி குதிக்குது” என பதிலில்லாத
கேள்வியை கேட்டுகொண்டிருந்தனர்.
“ஏய்
பாத்து!!!” என வசந்தியின் வாயிலிருந்து குரல் வந்த நேரம் புத்தம் புதிதாய் அரைகுறையாய்
காயந்த ஆடையை அணிந்துகொண்டு அந்த சைக்கிளில் அரைபெடல் போட்டுகொண்டு சைக்கிளில் தனது
பள்ளிக்கு விரைந்துகொண்டிருந்தாள். அப்போதுதான் அந்த இடர் ஆம் அந்த ஆர்பரிக்கும் தொண்டர்
துளிகளின் நடுவில் சைக்களுடன் சேர்ந்து விழுந்தவிட ரோட்டில் அரைஅடிக்கு ஆழமாக இருக்க
முற்றிலும் நனைந்துவிட்டாள்.
வசந்தியோ
“ஐயோ!!” என கத்த ஆறுதான் வேகமாக ஓடிசென்று அவளை தூக்கிவிட்டு புத்தக பையினை நனையாமல்காப்பாற்றினான்.
“பாப்பா மழை நின்னதும் போகலாம்லப்பா”
கையிலிருந்த
சீராய்ப்பினை துடைத்தவள் “இல்ல அண்ணா பரிட்சை இருக்கு அதான்”
“அதுக்குனு
மழைகுள்ளயா பாப்பா போவ”
அந்த
பாப்பாவினை பிடித்துகொண்டு நின்ற வசந்தி “உங்கள மாதிரியே எல்லாரும் இருப்பாங்கனு நினைக்கு
கூடாது” என ஒற்றைவரியில் கூறிவிட “நீ இந்த ஊருக்கு என்ன செஞ்ச” என்பது போல கேட்டது
அவனது காதில்.
சிறிது
நேரத்தில் அனைவரும் கலைந்த பின் வசந்தியின் அருகில் நின்றான். “அப்ப நான்தான் காரணம்னு
சொல்லுறியா தேனு”
“ஆமா
நீதான் காரணம்! கையல பவர் இருக்கும் போது விட்டுட்ட இப்ப போய் தூக்கவிட்டு அனுசரனை
படுறியா”
“இப்ப
நான் என்ன செய்யனும்னு நினைக்குற”
“நீ
என்னவேணாலும் பன்னிகோ என்ன தொந்தரவு பன்னாத”
“ஏய்
நான் உன்ன விரும்புறது உனக்கு புரியலயா” மெதுவாக கூறினான்.
‘நானும்தான்டா
உன்ன விரும்புறேன் அதுக்கு என்ன செய்றது ஆனா நான் ஊருக்காக வாழனும்னு நினைக்குறேன்
எங்க அப்பா மாதிரி’ என மனதில் நினைக்க கையை இருக்கமாக மூடியிருந்தாள்.
அவளது
பதிலுக்காக காத்திருந்தான்.
“போ
உங்க வீட்டுல மண்ண அள்ளிகிட்டு வந்து இந்த குழிய நிரப்பிடு” வேற எந்த குழந்தையும் விழாம
இருக்கும் என தன் கையிலிருந்த சிராய்ப்பினை மறைத்தாள்.
“சரி
தேனு” என கிளம்பியவன் இப்படி செய்வான் என எதிர்பார்க்கவில்லை.
ஆம்
அந்த கவரினை பிரித்து எடுத்து படித்து பார்த்தாள். அதில் ஒரு கடித்ததின் கூட கலக்டரின்
ஒப்பதலும் இருந்தது.
உயர்திரு
ஆட்சியர் அவர்களுக்கு எங்களது சேவா அமைப்பு சார்பில் எங்களது ஊருக்கு பலமுறை சாலை சீரமைத்து
தருமாரு கோரிக்கை கடிதம் அனுப்பபட்டாகவிட்டது. மேற்படி எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை.
அதனால் வரும் திங்கள் அன்று அரையடி நீர்தேக்க ரோட்டில் ஊர் மக்களுடன் சேர்ந்து நெல்நாற்று
நடும் திருவிழா நடைபெற இருக்கிறது தாங்கள் அதில் வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.
என
கடைசி வரியில் எழுதியிருக்க மாவட்ட ஆட்சியர் பதில்கடித்ததுடன் சாலை சீரமைக்கும் உத்தரவும்
பிறப்பிதுள்ளார் அதானால்தான் வசந்தி காலையில் விழந்த குழியில் ஏதோ ஒரு புன்னியவான்
மண்ணள்ளி போட்டுருக்கிறார்.
“மாமா!!”
என அவள் அழைக்க வேகமாக ஓடிவந்தவன் “என்ன தேனு?” என ஓடிவந்தான் அப்போது சாலையிடும் வாகனங்கள்
ஊருக்குள் நுழைய அனைவரின் கண்களும் அதை பார்த்துவியக்க “ரொம்ப தாங்கஸ் மாமா!” என அவன்
கன்னத்தில் முத்தமிட்டு ஓடிவிட்டாள்.
-ஜெனி
-ஹேவ்
நைஸ் காஃபி சொந்தங்களா!!




No comments: