Followers

சிறுகதைகள்

[சிறுகதை][twocolumns]

கவிதாயினி

[கவிதாயினி][twocolumns]

ஸ்நாக்ஸ் டைம்

[ஸ்நாக்ஸ் டைம்][bleft]

ஜெனிபர்

[ஜெனிபர்][twocolumns]

ப்ரீத்தா

[ப்ரீத்தா][twocolumns]

ஸ்நாக்ஸ் டைம் 3



ஜானவி மிக ஆர்வமாக காத்திருந்தாள். தன் மாமன் வருகைக்கு! இவர்கள் புதுமன தம்பதியினர் அதுவும் திருமனமாகி மூன்று மாதங்கள்தான் சென்றுருந்தது. ஒரு இருபதுவயது புதுமனைவிக்கு இருக்கும் இயல்பான எண்ணம்தான். அதிலும் தன் அத்தை மகனையே திருமனம்  திருமனம் செய்துள்ளாள் அல்லவா. ஆசை அத்தான்தான் காத்திருந்தாள்
அன்றும் அப்படியே ஆம் முதல்நாள் தன் மாமனுடன் தனியாக இருக்கபோகும் முதல்நாள் ஆவளுடன் காத்துகொண்டிருந்தார். அமைதியாக வந்தான். அவளோ ஆசையுடன “மாமா சாப்பிட வாங்க” என்றாள்.
“இல்லமா எனக்கு வேணாம் நீ சாப்பிடு எனக்கு அசதியா இருக்கு” என்றான் கூடவே அந்த மதுவின் சாயலும் அந்த காற்றில் கலந்து வந்தது. மாமாவின் கண்ணை பார்த்துகூட பேசியதில்லை. பின் எப்படி அவரை “ஏன் மாமா குடிக்குற” என கேட்க தைரியம் இல்லை.
ஆனால் இவர்களின் திருமனம் அரங்கேறியது இந்த ஒரு காரணத்துகாகதான்.
“மதினி மூர்த்தி ஏன் இப்புடி சுத்துறான் கன்டிச்சு வைங்க. நீங்கதான் கெடுத்து வைக்குறீங்க” என்று அக்கறை செலுத்தினார் அந்த கிராமத்துபெண்ணான ஜானவியின் தாய்.
“ஆமா மதினி அவன் நா சொன்னா எங்க கேக்குறான் அவங்க அப்பாவும் எதுவும் கன்டிக்காம வெளியூர்லயே இருக்காரு” என்று தன் பக்க நியாயத்தை கூறினார்.
“அண்ணன் எப்போ மதினி அவன கன்டிச்சிருக்கு? அவன் பயந்தது எல்லாம் உங்களுக்குதான் இப்போ நீங்களும் சும்மா இருந்தா எப்புடி அதான் ஆடுறான்”
“நான் என்ன செய்றது மதினி நல்லா படிச்சான் அவரு அப்பா மில்ல நல்லாதான் பாக்குறான். ஆனா இந்த காலிபயலுக்கூட பொழுது சாஞ்சதும் சேந்துகிட்டு இந்த பாலாபோன தண்ணிய குடிச்சு உடம்ப கெடுத்துகிறான்” என அழும் குரலில் கூறியவர் தன் முந்தானையால் கண்ணை துடைத்துகொண்டு “ஆனா சத்தம் எல்லாம் போடாம படுத்துகிறான் மதினி” என்று முடித்தார்.
“மதினி நான் ஒன்னு சொல்லவா அண்ண்ன்கிட்டகூட கேட்டுட்டேன்” என்று கொக்கிபோட்டார். அதற்கு காரணம் தன் மருமகனின் போட்டோவை தனது அறையில் யாருக்கும் தெரியாமல் ரசித்துகொண்டிருந்த மகளை “ஏனடி என்னடி பன்னுற” என ஒரு அறை அறைய அவள் அழுதுகொண்டே தன் மாமனின் போட்டோவை பாதுகாத்தாள். அவள் தூங்கியபின்தான் அந்த போட்டோவை பார்க்க அது மூர்த்தி. பின் உறங்கிகொண்டிருந்த தன் மகளை பாசமாக தடவிகொடுத்து இன்று கிளம்பி வந்துவிட்டார். என்ன இருந்தாலும் சொந்தம விட்டுபோக்கூடாது அல்லவா.
“அதான் மதினி மூர்த்திக்கு ஒரு கல்யானம்” என இழுத்தாள்.
“அதான் மதினி நானும் கேக்கனும்னு நினைச்சேன் ஜானவிய என மகனுக்கு தருவீங்களா.” என்றார் அதற்கும் காரணம் தன் மகனின் மொபைலில் இருந்த ஜானவியின் புகைபடம். அதில் ஜானவியின் சிறுவயது புகைபடம் முதல் இறுதியாக அவளுக்கே தெரியாமல் திருவிழாவில் எடுத்த அந்த சிரித்துகொண்டிருந்த புகைபடமும்.
“நானும் அதான் மதினி கேக்க வந்தேன்” என ஜானவியின் தாய் இல்லை மூர்த்தியின் அத்தை கூற பதிலுக்கு மூர்த்தியின் அம்மா “ஜானவி வந்தாவது அவளை திறுத்தனும்” என கூற
“ஜானவி நல்ல கருத்தான பொண்ணுமா அவ மூர்த்திய மாத்திடுவா” என கூற திருமணம் முடிந்தது மிகவம் விமர்சையாக.
மூர்த்தியும் தன் கனவு நனவு தேவதையை நன்றாகவே பார்த்துகொண்டான். அதில் எந்த குறையும் இல்லை. ஆனால் குடித்து உடம்பை கெடுத்துகொள்வதைதான் அவளால் எற்கமுடியவில்லை.
தன்னவன் சாப்பிடாமல் உறங்க்குவதால் சாதத்தில் தண்ணீரை ஊற்றிவிட்டு பட்டினியாக அவனுருகில் வந்துபடுத்துகொண்டாள்.
“ஜானு சாப்புட்டியா?”
“இல்ல மாமா எனக்கு பசிக்கல”
“மாமன் நம்பிட்டேன்! ஒழுங்க சாப்புடு போ” என அவன்கூற எதுவும் பேசாமல் இருந்தாள். “என்னமா ஆச்சு”
“இல்ல மாமா நீங்க சாப்பிடாம நான் எப்புடி சாப்புடுவேன்” என்று லேசாக அழுதாள்.
“அடி கிறுக்கி இதுக்குபோயிட்டு ஏன் அழற” என அவள் கன்னத்தை கிள்ளியவன். அந்த சாதத்தில் நீரை வடித்து அவளுக்கு எடுத்துவந்து ஊட்டிவிட்டான்.
அன்றிலிருந்து இன்றுவரை இவனும் சாப்பிட்டு அவள் சாப்பிடுவதை தான் பார்த்தபின்தான் இவனுக்கு ஒரு திருப்தி. ஆனால் இந்த குடியைவிட முடியவில்லை.
மூன்று மாதத்திற்கு பிறகு இன்றும் தன் மாமனுக்காக அதே ஏக்கத்துடனு காத்துகொண்டிருக்கிறாள். அதிலும் டீவியில் வந்த அந்த மது ஒழிப்பு வழிப்புணர்வு விளம்பரம் அதில் வந்த அந்த ரத்த வாந்தி எடுக்கும் மனிதன் என அவளை குழப்பிகொண்டிருந்தது. அதனால் ஒரு ஏற்பாடு செய்தாள்.
ஒரு காலியான பாட்டிலை எடுத்து நன்றாக கழுவினாள். அதில் தண்ணீரை நிரப்பினாள். நடுவீட்டில் அமர்ந்துகொண்டாள். அவன் வரும்போது தானும் குடிப்பதுபோல நடிப்பது. ஆமா தன் ஆசை காதலி இப்படி சிறிது சிறிதாக விஷம் குடித்து சாவது யாருக்குதான் பிடிக்கும். இதை வைத்து மாமனை திருத்துவது என்பது ஏறுபாடு.
எல்லா குடிமக்களின் ஒரே தாரக மந்திரம் “எவன்டா எனக்கு இந்த குடிய பழக்கிவிட்டது” என்பது மட்டும்தான். அந்த மணி அண்ணாவை பார்த்துவிட்டான் மூர்த்தி. “அண்ணே எப்புடி இருக்கீங்க வாங்க ஒரு கட்டிங் போடலாம்” இது மூர்த்தி
“இல்லப்பா நான் குடிய விட்டுட்டேன்”
“என்ன அண்ணா சொல்றீங்க நீங்க பேசுன டயலாக்குக்கு” என இழுத்தான்.
“அட ஏன்பா நீ வேற” இது மணி அண்ணன் கையில் மல்லிகை பூவுடன்.
“என்ன அண்ணா மதினி அடி பின்னுராங்களா”
“அடிச்சாலூம் பரவாயில்லடா அவ வாயும் வயிறுமா இருந்துட்டு கழுத்துல கத்திவச்சிகிட்டு செத்துடுவேன்னு சொல்லுறாடா அதான் அவளவிட்டா எனக்கு என்ன இருக்கு உலகத்துல அதான் விட்டுட்டேன். இப்போ குழந்தை புறந்துடுச்சு அதான் மல்லி வாங்கிட்டு அவளை வீட்டுக்கு கூட்டிவர போறேன்” என நடக்க மூர்த்தியோ தன் கையிலிருந்த மிக்ஸர் சைடிஸ் பாக்கெட்டை எடுத்துகொண்டு நடந்தான்.
தன் மாமன் வண்டி சத்தம் கேட்டதும் தனது செட்டிங்கை சரிபார்த்தாள். டம்ளரில் நீரை ஊற்றினாள். அவன் உள்ளே நுழைந்தான். அவளது திட்டத்தை பார்த்து சிரிப்பு வந்தது.
தன் கையிலிருந்த மிக்ஸரை அவளருகில் வைத்துவிட்டு “இந்தாடி ஜானுகுட்டி சைடிஸ் அப்புறம் விக்கிக்க போகுது குடும்பத்துல யாரவது ஒருத்தர் கவர்மன்டுக்கு தினமும் டாக்ஸ் கட்டுனா நல்லதுதான” என அவள் கன்னத்தில் முத்தம் வைக்க அதில் ஆல்கஹாலைவிடுத்து ஆழமான காதலும் அவன் கையிலிருந்த மல்லியின் வாசமும் மட்டுமே இருந்தது.
தன்னை அறியாமல் எழுந்தவள் தன் உயிரானவனை இருக்கமாக கட்டிபிடித்தாள். “த்தாங்க்ஸ் மாமா ஐ லவ் யூ” மகிழ்ச்சியும் வெட்கமும் கலந்த குரலில்.
-ஹேவ குட் டே அன்டு நைஸ காஃபி மை லவ்லி சொந்தங்களே!!!


No comments:

தொகுப்பு...