கொஞ்சம் நம்ம தளத்ததுல லேசா ஒட்டடை அடிக்குற வேலைலாம் பென்டிங் இருந்துசுப்பா ஏன்னா புது எழுத்தாளர்கள் எல்லாம் எழுத வர்ராங்கள அதனாலதான்.. சோ கவிதா இன்னைக்கு வரலை வியாழகிழமை குடுகுடுன்னு ஓடி வந்துருவாப்பா அது வரை குட்டி கதை வரும் பொருத்து அருளவும்..
ஏய்
யாருப்பா அது தக்காளிய தூக்கி அடிக்குறது..
நீங்க
போய் குருவி கூட்ட பாருங்க நான் அது யாருன்னு
பாத்துகிறேன்)
குருவி கூடு
காலை
முதல் முகமாக முற்றத்தில் பூந்திருந்த ரங்கோலியில் கண்விழித்தான் ராம். ஆனால் என்றும்
சூடாக பல்துலக்காமல் கிடைக்கும் பெட்காபியை மிகவும் தவறவிடுவதாக நினைத்தான்.
“என்ன
பெராக்கு பாத்துகிட்டு நிக்குற தள்ளு” என வாசலினை அடைத்துகொண்டு நின்றிந்த ராமினை தள்ளிகொண்டு
வீட்டினுள் நுழைந்தாள் ஜானவி!
“யாரு
நானா பெராக்கு பாத்துகிட்டு நிக்குறேன் நீதான் எனக்கு தினமும் அம்மா போட்டு குடுக்குற
பெட் காஃபிய நிப்பாட்டிட்ட”
“அது
நீ என்ன கட்டிகிடும்போது யோசித்துருக்கனும்” கழுத்தினை அழகாக வெட்டினாள்.அவள் தலையில்
கட்டியிருந்த துண்டு அழகாக ஆடியது! ஆனால் அதில் அள்ளி முடிந்திருந்த அந்த முடி கீழே
விழவில்லை.
கட்டதெரியாமல்
ஓரளவு பயிற்சியில் கட்டியிருந்த சேலையும் அவளுக்க மட்டுமே எடுப்பாக இருக்கும் என தோன்ற
வைத்தது ராமிற்கு.
“என்ன
கோலம்டி இது”
“ம்ம்
பச்சரிசி கோலம் பாத்தா தெரியல”
“ஹே
அத கேக்கல ஜானு! நீ என்ன இப்டி இருக்க”
அவன்
அருகில் வந்து நின்றாள். “காத குடேன்”
“உன்கிட்ட
குடுத்துட்டு….???”
“காமெடியா?!!”
“ஈஈஈ…”
“காத
குடுன்னு சொன்னா குடுக்கனும்”
“இந்தா
வச்சுகோ” என ராம் குனிந்தான்.
“டேய்
நம்ம வீட்டுக்கு ஒரு புது சொந்தம் வர போகுது!!”
“ஏய்
நிஜமாவாடி சொல்லவே இல்ல” என வயிற்றினை பார்க்க
“ஏய்
லூசு ராம் அது இல்லடா எப்ப பாத்தாலும் அதேதானா?”
“சொந்தம்னா
எந்தமாதிரிடி புரியல”
“உங்க
தம்பியதான் சொல்றேன் மாடி மேல யாருகூடதான் பேசுறாங்களோ பக்கதுல இருக்குற செல்போன் டவர்
தீபிடிச்சிடும் போல”
“என்னது
லவ்வா படிக்குற வயசுலயா” லேசாக சத்தினை கூட்டினான் ராம்.
ஜானவி
லேசாக முறைத்து பார்த்துவிட்டு “சாரு என்ன பன்னி என்ன கட்டிகிட்டீங்களாம்”
“அது
வந்து.. அதுக்குனு.. நாம படிக்கும்போதா லவ் பன்னோம் இல்லைல வேலைக்கு போகும் போதுதான
லவ் அதுமில்லாம எங்க அத்த வேற சொந்தம் விட்டுபோக்கூடாதுன்னு மீனா மனசுல ஆசைய வளத்துகிட்டு
இருக்கு”
“ஓ
சாரு சொல்றத நாங்க நம்பனும்”
“பின்ன
இல்லியாடி”
“ஏய்…
என்ன பாக்காம இருக்க முடியலைனுதான நான் சேந்த கம்பெனிலயே வந்து சேந்த இப்போ எல்லாதையும்
விட்டு நிம்மதியா விவசாயம் பன்ற”
“அப்புறம்
ஏன்டி என்ன கம்பெனில அலையவச்ச”
“லூசு
மாமா! நான் எவ்வளவு சிம்பாலிக்கா சொல்றது? லவ்வர்ஸ் டே அன்னைக்கு எல்லாரும் பொண்ணுக்குதான்
சாக்லட் கொடுப்பாங்க! ஆன்னா நான் உனக்கு தந்தேன்! நீ வாங்கிட்டு ஹாப்பி பர்த்டே டி!
இந்த பூமில நீயும் ஒரு ஜீவன்னு பொறந்துருக்கியே உன்னையும் கடவுள் படச்சுருக்காரேன்னு
காமெடி பன்னிட்டு போற”
“அப்போ
உனக்கு நிஜமா…பொறந்தநாள்..” அவனது வாயினை பொத்தினாள்.
“ஜானவி!!
ஜானவி”
“என்ன
அப்பா?” கோயிலுக்கு போய் வந்த ராமின் தந்தையும் தாயும் வந்துகொண்டிருந்தனர். எல்லாம்
கோலம் சூப்பர் என கூப்பிடதான் இந்த அழைப்பு
“வாம்மா”
ராமினை
டீலில் விட்டுவிட்டு வெளியில் ஓடினாள்.
“கோலம்
அழகா இருக்குமா உன்ன மாதிரியே” ராமின் இல்லை ஜானுவின் தாய் கூற “அம்மா உங்க அளவுக்க
இல்லயே”
“என்
மக போட்டது இதுவே எனக்கு பெருசு ஊரு கண்ணு பட்டுடும்” என கன்னதின் ஓரத்தில் எடுத்து
சொடுக்ககிட்டுகொண்டே “எவ்வளவு கண்ணு பட்டுருக்கு யப்பா!!” மெச்சிகொண்டார் சிவகாமி தன்
மருமகளை இல்லை மகளை பார்த்து மெச்சிகொண்டார்.
“அம்மா
டீ” ராமும் கத்த தவறவில்லை.
“அம்மா
அவருக்கு டீ கிடையாது முதல்ல பல்லுவிலக்கிட்டு வர சொல்லுங்க” முட்டுகட்டை போட்டாள்
ஜானவி! “ஆமா ஜானவி சொல்றதுதான் இங்க போ அவ சொல்றத பன்னு” சோகமாக சென்றுவிட்டான். ஜானவி
பின்னாலிருந்து ஒழுங்கு காட்டி சிரித்தாள். அதற்குள் சிவகாமியும் சன்முகமும் வீட்டினுள்
செல்ல ஜானவி தன் காதல் கனவனுக்கு காஃபி சுடவைக்கும் வேலைக்கு கிளம்பிவிட்டாள்.
என்ன
சுடவைக்கிறாளா?
ஆம்
முதல் காபியை குடித்துவிட்டு அண்ணாவின் பைக்கினை எடுத்துகொண்டு தம்பி ரமேஸ் எங்கே கிளம்பினார்
என தெரியவில்லை. எப்படியும் ராமை எங்கும் போகவிடாமல் பார்த்துகொள்வது ஜானவியின் பொறுப்பு!
இல்லை என்றால் தம்பி மீது கோவபட்டு கத்துவார்.
என்ன
இந்த பொண்ணு இப்டி ஓடிகிட்டே இருக்கு ராம் குடும்பத்துக்கு ஊழியம் செஞ்சே உடம்புல பாதி
போயிடும்போல என்பது பக்கதுவீட்டு பங்கஜத்தின் ஆதங்கம். தன் மருமகள் அப்படி இல்லை அல்லவா
இத்தனைக்கும் அவர் பார்த்துபார்த்து வளர்த்த அண்ணன் பொண்ணு வேற! ஆனால் ஜானவி நகரத்தில
வாழ்ந்த பெண் என்றாலும் காதலனுக்காக இத்தனையும் செய்கிறாள் என்றால் சிவகாமி எடுத்த
சொடுக்கில் பாதி பங்ஜத்தின் கண்தான்போலும்.
ஆனால்
நகரத்தின் ஒரு அனாதை இல்லதில் தங்கி படித்த ஜானவிக்கு குடும்பம் கிடைத்ததே ராமினால்தான்.
அழகானதொரு கூட்டு குடும்பம். அவன் தாலி கட்டிய அந்த தருனத்தில் மொத்தமாய் அவனுடையதாய்
மாறி போயிருந்தாள் கூடவே குடும்பத்தின் சொத்தாகவும் திகழ்ந்தாள்.
“ஏன்டி
ஜானு”
“என்னது”
கையில் கரண்டியுடன் செல்லமாக முறைத்து பார்த்தாள்.
“அது
வந்து என் டீ எங்க ஜானுன்னு கேட்டேன்”
அவனது
கண்களை பார்த்துகொண்டே முறைப்பது போல சிரித்தாள்.
“டீ!!!”
“தோட்டதுல
வேலை இல்லைன்னாலே இதே தொல்லையா போச்சு” சளிப்பதுபோல கூற “டீ ஒருதரம் டீ ரெண்டு தரம்
டீ மூனுதரம்” என அவள் கன்னதினை கிள்ள “உன்ன யாரு கிச்சனுகுள்ள வர சொன்னா?”
“என்
ஜானுவ பாக்க நான் வரகூடாதா”
“ஆங்ங்..அதுக்கு
வேற ஆள பாரு”
“அப்பாடி
ராணியம்ம உத்தரவு குடுத்தா மீற முடியுமா”
“என்னது”
“வேற
ஆள பாக்க சொன்னீயே அதான்”
“அப்டி
யாரைவாது பாத்த” என கழுத்தினை பிடித்தாள்.
“உன்
தங்கச்சிய?”
“எனக்கு
ஏதுடா தங்கச்சி”
“ஓ
இல்லையோ!!”
“அப்போ
உனக்கு தெரிஞ்ச பொண்ண?”
“அப்டினா”
“உன்னோட
பொண்ணதான்டி”
“ஏய்
சீ லூசு! எனக்கு பையன்தான் வேணும்..”
“எனக்கு
பொண்ணுதான் பெத்துகுடு அம்மா கூட அதுதான் சொன்னாங்க”
“ஆனா
அப்பா பையன்தான் கேட்டாரு சோ பையன்தான்! அப்டி”
“இதுல
என்னம்மா சண்டை ஆஸ்திக்கு ஒரு பையன் அழகுக்கு ஒரு பொண்ணு பெத்துகுடுங்க வயசான காலத்துல
நாங்க அவங்க்கூட விளையாடிட்டு போறோம்” என டீவியில் பார்த்த படத்தின் வசனத்தை பேசிகொண்டே
சிவகாமி வர அதுவரை கொஞ்சிகொண்டிருந்த இருவரும் நாக்கினை கடித்துகொண்டு பிரிந்து நின்றனர்.
“இல்லம்மா
தண்ணி குடிக்கலாம்னு வந்தேன்” சிவகாமி தண்ணீரை குடித்துவிட்டு கிளம்பிவிட ராம் ஜானுவின்
காதருகில் வந்து “அம்மா சொன்னத கேட்டீல ரெண்டு ஓகேவா?”
“ம்ம்
ஓகே” அவளும்கிசு கிசுப்பாய் கூற.
“முதல்ல
ஒரு பொண்ணு ஓகேவா” ராமும் கிசு கிசுக்க “ம்ஹூம்.. பையன்” ஜானுவும் விடுவதாய் இல்லை.
“பாக்கலாம்டி
பெட்டா?”
“பெட்டா”
“என்ன
பெட்?”
“ம்ம்…”
“நீயே
சொல்லுடா”
“ஆங்..
மூனா பெத்துகுடுக்கனும் ஓகேவா”
“சீ
போடா!!” அவனது வயிற்றில் தன் முழங்கையினால் ஒரு குத்து குத்தினாள்.
“ஐயோ…
வலிக்கலயே”
“வலிக்கலியா
அப்போ உனக்கு டீ இல்ல”
“அய்யோ
பொன்டாட்டி ப்ளீஸ்டி”
“என்னது”
“ப்ளீஸ்
டீன்னு சொன்னேன்”
“இரு
உன்ன..”
“என்ன”
“உன்ன
பாத்தா பாவமா இருக்கு இந்த பொழச்சு போ” என டீயினை குடுக்க வாயில் வைத்தவன் “என்னடி
இது சீனியவே காணோம்”
“போட்டேனே
தம்பிகூட எதும் சொல்லலியே”
“அவன்
மனுசனா”
“ஐயோ
போட்டேன் நான்கூட குடிச்சு பாத்தேனே கரெக்டாதான இருந்துச்சு”
“என்னனு
தெரியல எனக்கு இனிப்பு பத்தல வேணா நீயே குடிச்சு பாரு” என நீட்ட முறைத்து பார்த்தவள்
“ஏய்
இந்த விளையாட்டெல்லாம் என்கிட்ட வேணாம்… போ போ ஹால்ல உட்காந்து அம்மா அப்பாகிட்ட பேசிகிட்டே
டீ குடி போ போ..”
“போடி
நாம என்னைகாவதுதான் தனியா இருக்கோம்”
“அதுக்கு..”
“ஒரு
கிஸ் குடேன்”
கரண்டியை
அவன் கன்னதில் வைத்து “கிஸ்லாம் ராத்திரிதான் இப்போ போயி டீய குடிச்சிட்டு டம்ளர கொண்டா”
“போ
ஜானு மூனு மாசத்துல நீ ரொம்ப மாறிட்ட”
“ஐயோ
புருசா! அது சிட்டில இருந்தோம்… அப்போ நான் உனக்கு மட்டும்தான் சொந்தம் இப்ப பாரு நான்
அம்மா அப்பா தம்பி எல்லாருக்கும் சொந்தமானவ அதனால உன்னயும் அவங்களயும்என்னால பிரிச்சுபாக்க
முடியலடா”
ராமின்
கண்களில் அப்படி ஒரு மகிழ்ச்சி “தாங்கஸ்டி”
“ஏன்டா?”
“இல்ல
குடும்பத்த விட்டு பிரிச்சுடுவியோன்னு பாத்தேன்”
“ஏய்
சீ வாய முடுடா! நீ இல்லாம என்னால எப்டி வாழ முடியாதோ அதுமாதிரிதான் இந்த குடும்பம்
இல்லாமலும் என்னால வாழ முடியாதுடா”
“ஆமா
தம்பிக்குனு ஒருத்தி வருவாளே அவள என்ன செய்வா? அவ உன்ன மாதிரி இருப்பாளா? இதுல அவன்
வேற போன் பேசுறான்னு சொல்ற”
“அதெல்லாம்
தம்பி என்கிட்ட சொல்லியாச்சு நானும் அந்த பொண்ணுகிட்ட பேசிட்டேன் ரொம்ப நல்ல பொண்ணு
நீங்க கூட ஏத்துகுவீங்க எனக்கு தெரியும்”
“அப்டி
யாருடி அது”
“அது
உங்க தம்பிகிட்டயே கேட்டுகோங்க”
“கேட்டுகிறேன்
தாங்கஸ்டி” என கன்னதில் ஒரு முத்தமிட
“திருட்டு
பூன இப்ப அடிவாங்க போற பாரு நீ” கரண்டியை முன்னால் நிறுத்தினாள்.
“ப்ளீஸ்டி
ஒன்னே ஒன்னு.. நான் போயிடுறேன்”
“நான்
சமைக்கனும்”
“குடுத்துட்டு
சமை”
“அப்பா
பாத்துட போறாங்க”
“அவரு
வர மாட்டாருடி சீக்கிரம் குடு” கன்னதினை காட்டி நின்றான்.
கரண்டியால்
அவன் கன்னதில் லேசாக அடித்தாள்.
“கரண்டிகிட்டயா
நான் கேட்டேன்”
“ப்ச்ச்..
என்னடா நீ”
வாசல்வழிதான்
பார்க்க முடியும் என்றாலும் சுற்றிலும் ஒருமுறை பார்த்துகொண்டாள். சுவர் பல்லிகூட பார்க்க
கூடாது என நினைத்திருப்பாள் போலும்.
“குடுடி..”
“இருடா
யாருனா பாத்துட்டா எனக்குதான் பிரட்சனை.. நீபாட்டுக்கு போயிடுவ என்னதான கிண்டல் பன்னுவாங்க”
“ரொம்பதான்டி
வெட்கபடுற”
மூச்சினை
உள்ளே இழுத்துகொண்டு மெதுவாக அவன் கன்னதின் அருகில் நெருங்கினாள். பட்டென முத்தம் வைக்க
“கீங்ங்ங்.. கீங்ங்ங்” என ஹாரன் சத்தமும் பலமாக ஒலிக்க இருவரும் வெளியில் செல்ல அங்கு
தம்பி மீனாவுடன் பைக்கில் நின்றிருந்தான்.
“ஏய்
மீனு!!” சிவகாமியின் முகத்தில் அப்படி ஒரு பொழிவு
“அத்த..”
மீனாவும் ஓடிவர ராம் ஜானுவை பார்த்தான்.
“நான்தான்
சொன்னேன்லடா அவ ரொம்ப நல்ல பொண்ணுன்னு” கூறிவிட்டு ஜானு சிரிக்க அனைவரின்பின்னாலும்
நின்றதால் கூடுதலாக ஒரு கள்ள முத்தம் கொடுத்துவிட்டு கிச்சனுக்குள் ஓடி ஒழிந்துவிட்டாள்
ஜனு!!
-ஜெனி.
(தவித்து
குடித்தால்தான் சிறப்பு!!. கூட்டுகுடும்ப காதல்!! தவித்து காதல் ருசிக்கும் என்றும்)




No comments: