Followers

சிறுகதைகள்

[சிறுகதை][twocolumns]

கவிதாயினி

[கவிதாயினி][twocolumns]

ஸ்நாக்ஸ் டைம்

[ஸ்நாக்ஸ் டைம்][bleft]

ஜெனிபர்

[ஜெனிபர்][twocolumns]

ப்ரீத்தா

[ப்ரீத்தா][twocolumns]

ஸ்நாக்ஸ் டைம் 8



ஸ்நாக்ஸ் டைம் 8
“ஏக் காடிவாலா……..”
“இவனுங்க வேற எரிச்சல கிளப்பிகிட்டு சே…” காதில் ஹெட்செட்டினை மாட்டிகொண்டு பிளாட் பார்மின் இறுதி எல்லையில் அமர்ந்திருந்தான் சித்தார்த்
தம்பி உங்க மொபைல்ல கொஞ்சம்தான்பா சார்ஜ் இருக்கு பாத்து ஊரு வரைக்கும் போனும்ல என ஃபோன் காட்ட இனையத்தை எல்லாம் மூட்டைகட்டிவிட்டு பையில் வைத்துவிட்டு தனது மடியில் கனமாக இருந்த தோள் பையினை இறக்கி கீழே வைத்தான்.
“ஏம்பா நீ எந்த ஊருக்கு போவனும்?”
“தம்பி உன்னதான்பா” என தோளினை தொட சுய உலகிற்கு வந்தான்.
“ம்ம் சொல்லுங்க ஐயா”
“இல்ல நீ எந்த ஊருக்கு போற?”
“நான் மதுரை போகனும்”
“நானும்தான்பா”
“அப்போ ஓடுங்க இந்த ட்ரைன்ல ஏறுங்க இன்னும் ரெண்டு நிமிசத்துல கிளம்பிடும்”
“நீ வரலியா”
“அடுத்து இன்னும் மூனு ட்ரைன் இருக்கு ஐயா”
“ஏன்பா அதுலதான் கூட்டம் இல்லாம இருக்குமா?”
“ஐயோ நீங்க வேற இதுதான் கூட்டம் இல்லாம போகும்… அடுத்து வர்ரது எல்லாம் கூட்டமாதான் வரும்”
“ஏன் அப்புடி?”
“இந்த ட்ரைன்ல ஸ்டாபிங்க் அதிகம் ஆனா ஜன்னல் சீட்டு கூடகிடைச்சுரும் அடுத்து வர்ரது அப்டி இல்ல நிக்க கூட இடம் இருக்குமான்னு தெரியல”
“சரிப்பா என் வயசுக்கு நிக்குறதெல்லாம் கஷ்டம் நான் கிளம்புறேன்” என அந்த பெரியவரை ட்ரைனில் ஏற்றிவிட்டு அமர்ந்துகொண்டு பாடல் கேட்டு மனதினை ஆத்தி கொண்டிருந்தான்.
அடுத்ததாக ஏக் காடிவாலா என ஒரு ட்ரைன் கிளம்ப அதையும் பார்த்துகொண்டே கோட்டைவிட்டான். அடுத்ததாக தூரத்தில் பளிச்சென்று விளக்கொளி வர பையினை எடுத்து தோளில் போட்டுகொண்டு ஆயத்தமானான். முதல் பெட்டியிலேயே கூட்டம் அலைமோதியிருந்தது.
அடுத்ததாக பதிவு செய்த பெட்டிகள் ஏசி பெட்டிகள் என அவனை கடந்து செல்ல அவற்றை பெறுமையாக பார்துகொண்டிருந்தான். இறுதியாக ஊர்ந்துகொண்டு அவன் முன்னே வந்து நின்றது பதிவு செய்யபடாத அந்த பெட்டி.
பார்க்கும்போதே தலைசுற்றுவது போல இருக்க ஒரு பெருமூச்சுவிட்டுகொண்டு  உள்ளே இடித்து புடித்து ஏறினான்.
எவ்வளவுதான் கம்பீரமான மனிதனாக இருந்தாலும் ஒருமுறை ரயிலில் நீண்டதொரு பயனம் போனால் அவனது பலம் சோதித்து பார்த்துவிடபடும். அதிலும் விழாகாலம் என்றால் நன்கு அரைத்த காஃபி கொட்டை போலதான் அந்த ரயில் வெளியில் துப்பும்.. அப்படி ஒரு பயணத்தில் எல்லாம் மாட்டிகொள்ளவில்லை என்றாலும் நடைபாதையில் படுத்து உறங்கும் சில பயண தோழர்கள் மற்றும் அமர முடியாமல் நின்றுகொண்டு வரும் சிலர் கூடவே படிகட்டினை சீட்டுகளாக அலங்கரித்துகொண்டு அபயா பயணமிடும் காதலர்கள் என அந்த ரயில் நிரம்பி வழிய. சித்தார்த்தின் தோள் கனமாக தோன்றியது.
அதற்கு காரணம் தோள் பை என்பதனை உணர்ந்துகொண்டான். கழற்றி ஒரு இடத்தில்வைக்க தேடினான் ஆனால் இடம்தான் இல்லை.
கீழேயும் வைக்க முடியவில்லை காலடியில் அமர்ந்திருக்கும் சக பயணிகளின் இம்சை வேறு.. லேசாக சுற்றிலும் திரும்பி பார்க்க ஜன்னலின் ஓரமாக ஒரு பெண் அமர்ந்திருந்தாள். இல்லை இல்லை ஜன்னல் இருக்கையினை விட்டுவிட்டு அவள் அருகில் அமர்ந்திருந்தாள்.
ஜன்னல் இருக்கையில் அவளது தோள் பை அமர்ந்துகொண்டிருந்தது. சுற்றி இருந்தவர்கள் எல்லார் முகத்திலும் “ரயிலே கூட்டமா வருது இந்த ராணியம்மா மட்டும் ஒன்னுக்கு ரெண்டு சீட்டுல உட்காந்துகிட்டு வருவாங்களாம்” என சிடு சிடுவென இருப்பது தெரிந்தது.
சற்று முன்னர்தான் ஒரு பெரியவர் அந்த பெண்ணிடம் வாங்கி கட்டிருந்தார். “ஏன் பாப்பா பேக் எடுத்து மடில வச்சுகிட்டு இடம்விட்டா நாங்க உட்காருவோம்ல”
“யோவ் போயா எனக்கு தெரியும்”
அவ்வளவுதான் அந்த பெரியவர் வாயினை மூடிகொண்டு நின்றுகொண்டார்.
“இந்த பொண்ணு என்னலாம் பேசுது பாத்தீயா கலிகாலம்பா” ரயிலே சலசலத்து நிற்க “இந்த பொண்ணலாம் தட்டிகேக்க ஆளே இல்லியா”
“பொண்ணா பெத்துவிட்டுருக்கானுக”
அடுத்து அடுத்து காதில் விழாமல் இல்லை. ஆனால் திமிர் பிடித்த அந்த பெண்ணோ சிலையாக அமர்ந்திருந்தாள். அடுத்தவர் பேசுவது கேட்காமல் இருக்க காதில் அந்த இசைப்பான் வேற் அழகான தோடுகளுக்கு இனையாக தொங்கிகொண்டிருந்தது. அந்த நேரம்தான் ரயிலும் நிற்க சித்தார்த்தும் அமர இடம் தேடிகொண்டிருந்தான்.
இவளை பார்த்தான் அதைவிட அருகிலிருந்த இடம்தான் அவன் கண்ணில் பளிச்சன்று பட்டது.
“ஆண்டி கொஞ்சம் தள்ளிகோங்க”
“ஏன்பா?”
“அங்க ஒரு இடம் இருக்குள”
“தம்பி அந்த பொண்ணு திமிரு பிடிச்சவ மாதிரி தெரியுதுப்பா வயசுக்கு ஒரு மரியாதை கூட குடுக்காம பொசுக்குனு எடுத்து எரிஞ்சு பேசிருச்சு”
“ப்ச்ச்.. ஆண்டி நான் இப்போதான் வேலை முடிச்சு ஊருக்கு போலாம்னு ரொம்ப கஷ்பட்டு இந்த ட்ரயின பிடிச்சுருக்கேன் கால்லாம் வலிக்குது உட்காரலைனா முடியாது மலையே சரிஞ்சாலும் பரவாயில்லை”
“அப்போ உன் இஷ்டம்பா” என அந்த அம்மா நகர்ந்து அமர அந்த கிடைத்த இடத்தில் காலினை வைத்துகொண்டு அந்த பெண்ணின் எதிரில் போய் நின்றான்.
அவள் நிமிர்ந்து பார்த்து முறைத்தாள். அவன் அவளை கண்டுகொள்ளாமல் அங்கு இருந்த அவளது பையினை எடுத்து அவள் மடியில் வைத்துவிட்டு அந்த இடத்தில் அமர்ந்தான்.
கோவமாக ஹெட்போனே கழற்றினாள்.
“என்ன இப்போ? என் பேக் எதுக்கு எடுத்த அப்டின்னு கேக்க போற” அவளை பேசவிடாமல் அவனாக பேசினான். ரயிலே ஏதோ இன்று நல்ல என்டர்டயின்ட்மென்ட் இருக்க போகிறது என ஆனந்த கூத்தாடியது.
அவள் முறைத்துகொண்டு அவனை பார்க்க “என்ன ஒரு பொண்ணு பக்கதுல்ல என்னடா தைரியமா வந்து உட்கந்துருக்கன்னு கேக்க போற அதுதான?”
அவள் அனலாக பார்க்க பற்களை கடித்து முறைத்தாள்.
“என்னடா இந்த பொண்ணு லூசா இருக்கும்போல இது ஒரு பெரிய விசயமா பாக்குது. அங்க பாரு அந்த தாத்தா உட்காந்துருக்குற அந்த குட்டி பொண்ண இடிச்சுகிட்டே வந்துகிட்டு இருக்கான்.. அந்த பொண்ணும் தள்ளி தள்ளி உட்காந்துபாக்குது அவங்க அம்மா பக்கதுலதான் இருக்காங்க ஆனா பொண்ண ஒரு பார்வைகூட பாத்துகாம தூங்குறதுல குறியா இருக்காங்க.. இப்புடி எல்லாரும் இடைஞ்சலான ட்ரைன என்னம்மா பன்ன முடியும்…” என  அந்த பெண் சிறிது நேரத்திற்கு முன்னால் திட்டிய அந்த பெரிய மனுசனை இந்த முறை சிறய பூச்சியாக மாற்றினான் சித்தார்த். அங்கு இருந்த பெண்கள் அந்த பெரியவரை முறைத்து பார்க்க அவராக மரியாதையாக அடுத்த நிலையத்தில் இறங்கிகொண்டார்.
“ஆனா அவரு மாதிரிலாம் நான் இல்லம்மா ரொம்ப ஜெனியூன் அதனால என் கூட தைரியமா உட்காரலாம்..” ஏன பேசிகொண்டே ஜன்னலின் மீது தலையினை சாய்த்தான்.
“அவன் பக்கமாக அவள்திரும்ப பார்த்து முறைக்க “ஹலோ மேடம்.. என்ன சைட் அடிக்குறத நிறுத்துங்க அப்புறம் ஹாரஸ்ட்மென்ட்ல கம்ப்ளைன்ட் பன்ன வேண்டியிருக்கும்” என கூறிவிட்டு அவன் மறுபடியும் சிரிக்க அவளும் லேசாக சிரித்துவிட்டாள் என்றுதான் கூறவேண்டும்.
“அப்பாடா மேடம் சமாதானம் ஆகிட்டாங்க…அந்த சமாதானத்தோட கொஞ்சம் தள்ளி உட்காந்தீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும் என் மேல உங்க ட்ரஸ் படுது” நக்கலாக அவன்கூற “ரொம்பதான் திமிரு பிடிச்சவன்” என மனதில் நினைத்துகொண்டாள்.
இருந்தாலும் தன்னை குறுகுறு என்று பார்த்துகொண்டே வந்த அந்த பெரியவரை மிக அழகாக தன் பேச்சு திறமையால் இறக்கிவிட்டதுமில்லாமல் அங்கு அம்மாவிற்கு பயந்துகொண்டு வெளியில் சொல்லாமல் இருக்கும் அந்த பெண்ணை மிக அழகாக காப்பாற்றிய அந்த குணத்தினையும் ஒரு சிறு தூசிகூட அவள் மீது படாமல் அமர்ந்துகொண்டு வரும் அந்த குணத்தினை கண்டு வியந்தாள்.
அவனோ மிக மகிழ்ச்சியாக உறங்கிகொண்டு வந்தான். அடிக்கடி தூக்கத்தில் ஏதோ உளறிகொண்டிருந்தான்.
“வே..ணு..ம் வேணும்..” அவன் உளறுவது அந்த குலுங்கலான ரயிலிலும் அவளுக்கு தெளிவாக கேட்க “சே இது என்னடா எரிச்சலா போச்சு நாம பாட்டுக்கு நிம்மதியா தூங்கிட்டு வந்தோம் இவன் வந்து இடைஞ்சல் பன்றான் உளறிகிட்டே வர்ரானே என்னதான் வேணுமோ இவனுக்கு” என அவனை திட்டிகொண்டே அவளும் உறங்கிபோனாள்.
ரயிலும் ஆடி ஆடி போக தாலாட்டாக உணர அனைவரும் கவலை மறந்து துயில்கொள்ள தயாராகினர். உறங்கிவிட்டனர் என்பதுதான் உண்மை.
சிறிது தூரம் போக அவனோ சோர்வாக கண்களை திறந்தான். மீண்டும் தோளில் ஏதோ ஒரு கணம்.
“என்னடா இது பை மடிலதான் இருக்கு இங்க என்னடா கனமா இருக்கு” என நிமிர்ந்து பார்க்க அவள்தான் அவன் தோளில் சாய்ந்துகொண்டு உறங்கிகொண்டிருந்தாள்.
“சே இந்த பொண்ணுங்களுக்கு இதே வேலையா போச்சுடா” என நினைத்துகொண்டு எழுப்பினான் “மேடம் மேடம் எந்திருக்குறீங்களா என் தோள் ரொம்ப வலிக்குது”
அவள் பதறிகொண்டு எழுந்து சுற்றிலும் பார்த்தாள் நல்லவேலையாக யாரும் கவனிக்கவில்லை. வாயில் நீர் வடிந்திருக்க கைகுட்டையினை தேடினாள்.
“இந்தாங்க” என அவன் கையிலிருந்து கொடுத்தான்.
அவள் வாங்கிகொண்டு துடைக்க ரயிலும் மெதுவாக ஒரு ஸ்டேசனில் நின்றது. “இன்னும் ரெண்டு ஸ்டேசன்தானா? அண்ணா ஒரு டீ… மேடம் உங்களுக்கு டீ?” அவளை பார்த்து கேட்க
அவள் பதில் கூறும் முன் “ஒன்னு போதும்னே மேடம் ரொம்ப ரிச்சான ஃபேமிலி போல போன்வீட்டா காஃபிதான் குடிப்பாங்க நம்ம கடைல அதெல்லாம் வச்சா கடைக்கு நட்டம்தான”
அவள் உதட்டினை சுளித்துவிட்டு அவனுக்கு எதிர்புறமாக திரும்பி கொள்ள “திரும்பிகோ யாருகு நட்டம்?” என அவனும் டீயில் கவனம் செலுத்தினான். இன்னும் இரண்டு ஸ்டேசன்தான் என்பதால் கூட்டம் குறைந்து அனைவரும் சீட்டில் அமர்திருந்தனர். இவர்கள் இருக்கும் இருக்கையில் இருவர் மட்டுமே இருக்க “இப்போவாவது அங்க போயி உட்காரலாம்ல”
“ஏன் மேடம் உட்கார மாட்டீங்களா?”
“எரும மாடு” என கூறிவிட்டு எதிரில் போய் அமர்ந்தாள். அவன் அவள் கூறியதை நினைத்து சிரித்துகொண்டே டீயில் கவனம் செலுத்தினான்.
ஒருவழியாக டீ கப் காலியாக மதுரையும் வந்து சேர்ந்தது. அவளோ வேகமாக பையினை தூக்கிகொண்டு விறுவிறுவென நடந்தாள். அவள் பின்னாடியே நடந்து சென்றவன்… “ஏன்டி இவளோ வேகமா போற?”
“எரும மாடு பேசாம வாடா?”
“வேணும்மா.. ச் சீ சீ வேணிம்மா நில்லுடி” அவள் வேகத்திற்கு ஈடுகுடுத்து வேகமாக நடந்தான்.
“ஏன்டி எனக்கு வாங்குன டீயும் நீ புடுங்கி குடுச்சுபுட்டு ஒரு பச்ச புள்ளய வெறும் வயித்துல நடக்கவிடாதடி”
“டேய் எரும நீதான் வரலைனு சொன்னீல அப்புறம் ஏன்டா வந்த?”
“ஒரு மனுசன் கேட்டா எந்த ட்ரையின்ல வர்ரேனு சொல்லனும் அதவிட்டு நீயே கண்டுபுடிச்சுகோன்னா கடுப்பாகுமா இல்லியா உனக்கு போன் போடகூட சார்ஜ் இல்லாம என் ஃபோன் சுவிட்ச் ஆப் ஆகிடுச்சுடி”
“அதான் வந்து சேந்துட்டீள”
“ஆனா நீ எனக்காக இடம் போட்டு வச்சது எல்லாம் அல்டி மேட்டி”
“டேய் எரும நீ வராம மட்டும் இருந்தா உன்ன கொல பன்னிருப்பேன்”
“ஆமா பேக்க கட்டி பிடிச்சுகிட்டு போயிருப்ப என்ன உன் வாய் தொடைச்சுவிட கர்சீப் இருந்துருக்காது..”
“சீ சீ”
“என்ன சீ சீ உனக்காக ஒரு கர்சீப் குடோனே வச்சுருக்கேன்டி நானு என் பேக்ல பாக்குறியா?...ஏய் நில்லு நீ இவ்ளோ வேகமா நடந்தா நான்எப்புடி காட்டுறது?”
“ஏய் மூச்சு வாங்குதுடி மெதுவா போ”
“எல்லாரும் காலையில வாக்கிங் போவாங்க… என் தங்கம் என்ன மாரத்தான் ஓடவிடுறா… ஐயோ ஆண்டவா”
“என்னடி வேகமா வந்த இப்போ திடீர்னு எலக்ட்ரிக் ரயில் மாதிரி ப்ரேக் போட்டு நிக்குற?”
“அங்க பாரு..”
“டீ டீ ஆர் அதுக்கு என்ன?”
அவளோ நாக்கினை கடித்தாள்.
“ஏய்ய் ரவுடி பொண்ணு இங்கயும் சிக்கனமா? டிக்கட் எடுத்தியா இல்லியா?”
குழந்தை போல அவள் சிரிக்க “ஐயோ ஐயோ இந்த போ என் டிக்கட் இத காட்டிட்டு போ” என கொடுக்கக நீ எப்புடிடா வருவ?”
“எனக்கு ஏசி கம்பார்ட்மென்ட் டிக்கட் இருக்குடி… நீ எப்புடியும் எடுத்துருக்க மாட்டேன்னு தெரியும் அதான் உனக்கு எடுத்துட்டு வந்தேன்டி” என டிக்கெட்டினை கொடுத்துவிட்டு வெளியில் செல்ல
“மாமா பிசிக்குதுன்னு சொன்னீல வா ஒரு டீ குடிடா”
“வித் ஸ்நாக்ஸ்டி… முயலு…” என அவள் விரலுடன் விரல் கோர்த்துகொண்டு அருகிலிருந்த நவீன கபேக்குள் நுழைந்தனர்…
-ஜெனி
(ஹேவ் குட் டே அன்ட் நைஸ் காஃபி பிரண்ட்ஸ்)
(கவிதா வேணி அக்காவையும் சித்தார்த் மாமாவையும் அனுப்பி வச்சுட்டு லேட்டா ரயில் பிடிச்சு வந்துகிட்டு இருக்கா 12 மணிக்குள்ள வந்து சேந்துடும் புள்ள... அதுவரை கீழ போயி கமென்டில் திட்டிக்கிட்டு இருங்க)

No comments:

தொகுப்பு...