Followers

சிறுகதைகள்

[சிறுகதை][twocolumns]

கவிதாயினி

[கவிதாயினி][twocolumns]

ஸ்நாக்ஸ் டைம்

[ஸ்நாக்ஸ் டைம்][bleft]

ஜெனிபர்

[ஜெனிபர்][twocolumns]

ப்ரீத்தா

[ப்ரீத்தா][twocolumns]

ஆணாதிக்கம்


"ஏய் எங்கடி இருக்க" அதிகார தோரனையுடன் வந்தான் வசந்த். எல்லாம் தன் மனைவி மீதிருந்த கோபத்தினால்தான். கீர்த்தனா அழகானவள்தான் ஆனாலும் யாரையோ காதலித்தாள் என்பதற்காக வசந்தின் தலையில் கட்டிவைத்தாகிவிட்டது.
இருந்தாலும் முதலிரவு அறையில் அனைத்தையும் கூறி அழுதாள் அவனிடம் அவன் அவளை தொடாமல் இருந்தான். பின் அவளாகவே மனது மாறிகொண்டிருக்க வசந்தின் மனதும் மாறியது கொஞ்சம் கன்டிப்பு தன்மையுடன்.
"ஏய் மாடில என்னடி பன்ற" கோபமாக கேட்டான்.
"அது வந்துங்க துணிகாயபோட வந்தேன்" என கண்களில் கலவரத்துடன் கூறிகொண்டிருக்க "இந்தா வாரேன் இரு" என கோபமாக மாடிபடியில் ஏறி வந்தான். அவளோ நடுங்கிகொண்டே நின்றாள். தவறு தன்மீது இல்லை என்றால் கன்டிப்பாக எதிர்த்து கேட்கும் பாரதி கண்ட புதுமை பெண்தான் அவள் ஆனால் தவறு அவள் மீதள்ளவா இருக்கிறது.
அவன் அவளை நோக்கி வைத்த ஒவ்வெரு அடியும் அவளது நினைவலைகளை தீண்டியது. முதலிரவில் பாலுடன் தள்ளபடவில்லை அவள் மாறாக இருவரும் ஒன்றாகவே அனுப்பிவைக்கபட்டனர் அதுவும் ஊரின் விளிம்பில் இருக்கும் ஒரு வீட்டில் அந்த ஊரின் வழக்கமாம்.
"கீர்த்தி அழகான பேர்ல உனக்கு" அவன் பாசமாக
அவளோ மௌனமாக இருந்தாள்.
"எதுவும் பேச மாட்டீங்களா" வசந்த் கேட்க நிமிர்ந்துபார்த்துவிட்டு மீண்டும் தலைகுனிந்தாள்.
"சரி உங்களுக்கு என்ன பிடிக்கும்" அவன் கேட்டிருக்ககூடாது அவள் அவனைதான் பிடிக்கும் என கூறிவிடுவாள் என்ற பயமிருந்தது அவளுக்கு கண்ணில் வடிந்த நீரை இமையால் தடுத்தாள்.
"சரி என்ன பத்தி சொல்லுறேன் கேளுங்க"
தலையில் அவள் சூடியிருந்த மல்லிமட்டும் பேசிகொண்டிருந்தது அவன் முகம் பார்த்து. "நீங்க வெட்கபடுறத பாத்தா நான் சொல்லலாமா வேண்டாமா"
"சரி நான் ஒரு வாயாடிங்க சொல்லிடுறேன்! இதுவரைக்கும் எந்த பொண்ணையும் தப்பா பாத்தது கிடையாது அதுக்கு காரணம் நீங்கதான்னு நினைக்குறேன்"
கீர்த்தனா நிமிர்ந்து பார்த்தாள் சற்று குழப்பமாகவும் பயமாகவும். "என்ன பாக்குறீங்க உங்களுக்கு வர்ர புருஷன் யாரையும் காதலிக்கு கூடாதுன்னு தவம் பன்னீங்களா என்ன? யாருமே செட் ஆகல ஏன் என்ன பாக்ககூட இல்லங்க"
அவளது கண்ணில் கண்ணீர் வர "ஐயோ படத்துல வர்ர டயலாக் மாதிரி பேசிடேனோ! சரி இனிமே இப்புடி பேசமாட்டேங்க"
"ராகுல்..."
"என்ன?"
"நான் வேற ஒருத்தர காதலிச்சேன்"
வசந்தின் முகத்தில் எந்த உணர்வும் இன்றி அமைதியாக அமர்ந்திருந்தான்.
"ஏய் ஃபோன்ல யாரு"
"அது வந்துங்க"
"ராகுலா!!"
"ம்ம்"
அப்போதுதான் வசந்திற்கு சிறிது கோபம் வந்தது. கையை ஓங்கிவிட இன்றும் கையை ஓங்கினான் கீர்த்தியை பார்த்து. "ஏய் இப்புடி குளிச்சிட்டு ஈரமா நிக்காதனு சொன்னா கேக்குறளியா நீ" என கையை ஓங்கினான்.
அவள் "இல்லைங்க ராகுல் அண்ணா!"
"நல்ல ராகுல் அண்ணா! அண்ணனை தங்கச்சி காதலா"
"சீ போங்க" என அவனது மார்பில் புதைந்து கொள்ள அவனே பேசினான் "ராகுல் உங்க பெரிப்பா நல்ல காரியம் பன்னிடாரு உங்களுக்கு ஒருவேலை பரவாயில்ல புதுபுரட்சினு கீர்த்திய உங்களுக்கு கட்டி வச்சுருந்தா நீங்க ரொம்ப கஷ்டபடனும் சொல்றத கேக்கவே மாட்டேங்குறா"
"ஆமா ஆமா நானும் சொல்லி பாத்தேன் நான் முறை வராதும்மானு அவ கேட்டாளா! அதான் இப்புடி ஆகிறுச்சு"
"விடுங்க அப்புறம் வேலைலாம் எப்புடி போகுது" என ஆரம்பித்துவிட்டனர்.
......
"நான் ஒருத்தர காதலிச்சேன்"
"காதலிச்சீங்க கரெக்டா" என அமைதியை கலைத்து கூறிவிட்டு அவன் அப்படியே உறங்க ஆயத்தமானான். அப்போதுதான் அவளுக்கு புரிந்தது காதலிச்சேன் என கூறியதை ஆம் வசந்த் முழுவதுமாக தன் மனதினுள் வந்துவிட அவனை பார்த்தாள். "கீர்த்தி டைம் எடுத்துகோ ஒன்னும் பிரட்சனை இல்ல நாம காதலிக்கலாம் மறுபடியும்" என கண்களை திறக்காமல் கூறிவிட்டு உறங்கினான்.
அவன் வீனோதமானவன்தான் அவன் மனது மிக புனிதமானது. இன்று ஆனால் சற்று பயமாக உள்ளதே மாடிவரை ஏறி வந்து அடிக்க வருகிறானே.
"ஏய் ஏழு மாசம்டி உனக்கு இப்புடி மாடில துணி காய போடுறேன்னு ஏறி வந்துருக்க அப்புடியே ஒன்னு வச்சா தெரியும்" என கையே ஓங்க "சாரிங்க" என கண்ணை மூடினாள்.
உடனே கன்னதில் ஒரு முத்தமிட்டவன் "ஏன்டி நான் உன்ன எப்படி அடிச்சிருக்கேன்! சரி இனி மாடிலாம் ஏறிவராத என் குட்டி தேவதை இங்க கால் வச்சதுக்கு அப்புறம் நீ சேட்டை பன்னிகோ அதுக்குமுன்னாடி நோ நோ" என கூறி அனைத்துகொண்டான்.
பின் அவளை நீரில் மிதக்கும் தாமரைபோல தூக்கியவன் தன் இரண்டு குழந்தைகளுக்கு முத்தமிட்டு மாடியிலிருந்து இறங்கினான்.அவளும் குழந்தை தானே அவனுக்கு!
-முற்றும்.

No comments:

தொகுப்பு...