Followers

சிறுகதைகள்

[சிறுகதை][twocolumns]

கவிதாயினி

[கவிதாயினி][twocolumns]

ஸ்நாக்ஸ் டைம்

[ஸ்நாக்ஸ் டைம்][bleft]

ஜெனிபர்

[ஜெனிபர்][twocolumns]

ப்ரீத்தா

[ப்ரீத்தா][twocolumns]

நான் லீனியர் காதல்


இந்தம கதை முதல்ல கொஞ்சம் குழப்பமா தெரியும் முழுசா படிச்சுட்டு சொல்லங்க முயல்ஸ்...கதைக்கு போவலாம்

********************
“ஏன்டா என்னதான் உனக்குபிடிக்கவே இல்லையே அப்புறம் ஏன்டா என்கூட இருக்க நீ” என கத்திகொண்டிருந்தாள் மஞ்சுளா!
“எல்லாம் என் தலையெழுத்துடி உன்கூட வாழனும்னு பொண்ணாடி நீ பேயி” என சிவாவும் விடுவதாக இல்லை
“அப்படின்னா நான் வீட்டவுட்ட போயிடுறேன் அப்புறம் உனக்கு பிடிச்சமாதிரி சந்தோஸமா வாழு நீ”
“அப்புடியாவது போயி தொலை அப்பதான் நானாவது நிம்மதியா இருப்பேன்”
“ம்ம் நான் ஏன்டா போகனும் உனக்குதான் ஒரு கீப் இருக்கே அங்க போயிக்கோ என்ன டிஸ்ட்ரப் பன்னாத”
“ஏய் அவ தங்கமான பொண்ணுடி உன்ன மாதிரியா! அவள போய் தப்பா பேசுற உன் நாக்கு அழுகிரும்டி”
“போனா போகுது ஆனா நீ என்னவிட்டு போனதும் உன்மேல கேஸ் போட்டு நஷ்ட ஈடுவாங்காம விடமாட்டேன் இந்த தாலிமேல சத்தியம்டா” என மஞ்சுளா கத்த “நான் செத்து தொலையுரேன் நீ நிம்மதியா இரு” என கதவினை டம்மென அடைத்துவிட்டு கோபமாக கிளம்பினான் சிவா
மஞ்சுளா அழுதுகொண்டே “என்ன புரிஞ்சுக்கவே இல்லைல நீ என சிவாவின் புகைபடத்தினை பார்த்து அழுதுகொண்டே! “நான் போயிடுறேன்டா நீ அவகூட சந்தோஷமா இரு” என பெட்டியில் எடுத்து வைத்தாள் துணிகளை.
***********************
“ஏய் பர்பி என்ன ஆச்சு”
“டேய் என் பின்னாடி வராதடா சொல்லிட்டேன்” என அவள் முகம் கோவத்திலும் சிவப்பாக இருக்க அவன் ரசித்துகொண்டே இருந்தான்.
“மஞ்சகாட்டு மைனா ஏன் இந்த கோவம்”
“அத நான் ஏன் உன்கிட்ட சொல்லனும்”
“என் மோலதான கோவமா இருக்க அப்ப சம்மந்தபட்ட என்கிட்ட சொல்லிதான ஆகனும்”
“யாரு சொன்னா உன்மேல கோவமா இருக்கேனு”
“அப்ப ஏன் என்கிட்ட பேசாம போற”
“ஐயோ இவன் மறுபடியும் ஆரம்பிச்சுடானே” என நினைக்கும்போது “சொல்லு பர்பி டார்லிங்”
“இங்க இருந்து போய் தொலைடா” என ஓடிவிட்டாள் சிறிது வெட்கம் கலந்த சிரிப்புடன்.
********************
என்னதான் அவள் நம்மை காதலிக்கிறாள் என்றாலும் இப்புடி திடீரெனு அவ வீட்டுக்கு போயி பொன்னு கேக்குறது முறையா என அவன் மனது அடித்துகொள்ள “பரவாயில்ல மஞ்சுளாக்காக என்ன வேணாலும் பன்னலாம்” என நினைத்துகொண்டு போக அழகான குடும்பன் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆம் சிறுவயதிலேயே தந்தை தாயை இழந்த குடும்பம் அதிலும் ஒரு அண்ணனாக தன் தங்கையை பாடுபட்டு வளர்ப்பது என்பது அரிதுதான் ஆனால் ஊர் பேர் தெரியாத எனக்கு கட்டிவைப்பாரா அவள் வேறு நீ வந்து கேளுடா எங்க அண்ணா எதுவும் சொல்லாது என மனதினை உசுப்பேற்றிவிட்டுவிட்டாள்.
சரி போவோம் என்ன பன்னிருவாங்க என கிளம்பினான். ஆம் தலைவர் தீவிர வடிவேலு ரசிகர் வே அதனால் பேச்சிலும் சிறிது தொனி தெரியும். மஞ்சுளாவுக்கும் அதே டேஸ்ட்தான். அவளும் வடிவேலு பிரியைதான்.
“சார் நீங்க யோசிக்குறது புரியுது ஆனா அவளும் என்ன லவ் பன்றா நீங்க சொல்றதுலதான் இருக்கு” என மஞசுளா குடுத்த காஃபியை குடிக்காமல் வைத்துகொண்டு அண்ண்னின் வாயிலிருந்து வரபோகும் அந்த வார்த்தைகாக காத்திருந்தனர்.
அவரோ தன் தங்கையை பார்த்துவிட்டு “ஏன்மா உன் ஆசைக்கு மாறா நான் நடந்துருக்கேனா”
“இல்ல அண்ணா”
“ஆனா இந்த விசயத்துல எனக்கு தப்பா படுது உன்ன என்னால பிரிய முடியல”
“வேணும்னா வீட்டோட மாப்ளையா வச்சுகோயேன்” என அவனது கைபேசி டோன் ஓலிக்க “சொப்பா முடியலடா இந்த கொசு தொல்லை” என அதை அனைத்தான்.
“என்ன இது விளையாட்டு தனமா இருக்கான் நம்ம தங்கச்சிய நல்லாபாத்துபானா” என மனதில் கேள்வி ஓட சட்டென தரையில் மன்டியிட்டு அமர்ந்தவன் அவரின் கைகளை பிடித்துகொண்டு “சார் நான் கன்டிப்பா நல்லா பாத்துபேன்சார் என்ன நம்புங்க” என கூற மஞ்சுளாவும் அவனை ஏக்கமாக பார்க்க “சரிம்மா உன் விருப்பம்” என கூற அவன் அப்படி பன்னியிருக்க கூடாது எளிமை என்று சொல்லிகொண்டு ஒரு நாளில் நாள் கிழமை பார்க்காமல் கோவிலில் சென்று தாலிகட்டிகொண்டு நிற்க எந்த அண்ணன்தான் அதை பொறுத்துகொள்வான் உடனே சண்டையிட்டு “என் மூஞ்சில முழிக்காதமா” என திட்டி அனுப்பிவிட்டான்.
***************
தன்னை நம்பி அண்ணனை துறந்து வந்தவளை கண்ணும் கருத்துமாக காத்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்ற விதி இந்த காதலுக்கும் பொருந்தியதோ என்னமோ வழக்கமாக சண்டை மூண்டுகொண்டது.
“நான் சொல்லுற எதையுமே கேக்க வேணாம்னு முடிவு பன்னிட்ட நீ அப்புடிதான”
“ஆமா அப்புடிதான்”
“எப்புடியும் கெட்டுபோ”
“நீ முன்ன மாதிரி இல்லடா சிவா எப்ப பாத்தாலும் எரிஞ்சு விழற! உனக்கு என்ன பிடிக்கலையா”
“ஆமா போ” என கோவமாக சென்றுவிட “நாங்கலாம் சரியான கோவகாரய்ங்க” என வடிவேலுவின் வசனம் ஓடிகொண்டிருந்த டீவியை நிறுத்திகொண்டு அழுதாள் அவள்.
********
“சரிடி உன் லவ் மேட்டர் என்ன ஆச்சு என்ன சொன்னான் அவன்”
“அது ஒரு அர லூசுடி” என இரு தோளிகளின் அந்தரங்க விசயங்கள் ரகசியமாக பறிமாறிகொண்டிருந்தாக நிர்பந்தம்.
மஞ்சுளாவுக்கு சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள கிடைத்த ஒரே தோழி கீர்த்தனாதான். சுருக்கமாக கீர்த்தி. கூட மஞ்சு.
மற்ற அனைவரையும் கிட்டயே சேர்ப்பதில்லை இவர்கள். நாமிருவர் நமக்கு எதற்கு இருவர் என இருந்துவர புதிதாக இருவருக்குள்ளும் நுழைந்தவன்தான் ராஜா!
பேருக்கு ஏற்ற அழகுதான்.
ஆனா அவன் “நான் சிங்கிளா சாக்கூடாது” என முடிவு செய்திருப்பான் போல இருவருக்கும் ஒன்றாக புரபோஸ் செய்ய இரண்டு தோளிகளும் சிரித்தே விட்டனர்.
“ஆமாடி அவன் ஒரு லூசு” என அவர்கள் பகிர்ந்துகொண்டதற்கு இந்த சம்பவம்தான் உதாரனம். ஆனால் அவன் தினமும் பின்னாலயே சுற்றுவான். அடிக்கடி கிண்டல் வேறளு செய்வான் அதனால் மஞ்சுளா சிறிது ஆத்திரமடைந்தாள்.
“ஐயோ என்ன விட்டுடுமா” என அவளின் கண்களை பார்த்து ஓடியவன்தான் இன்னும் திரும்ப வரவே இல்லை.
*******
ஆனால் கீர்த்திக்கு அவன் மேல் காதல் பற்றிகொள்ள முடிந்த அளவிற்கு தன் தோழி மஞ்சுவிடமிருந்து விலகினாள். “ஏய் என்னபா இப்பலாம் என்கூட பேச மாட்டேங்குற”
“ம்ம் ஒன்னுமில்லையே”
“என்னடி சொல்லு எனக்கு அழுகையா வருது”
“எதுவுமில்லடி”
“லவ் பன்றியா?” என மஞ்சு கேட்டுவிட அந்த நேரம் பைக்கில் வந்தவன் ஹெல்மட்டை கழற்றிகொண்டு மஞ்சு ஏறு என கூற “என்னடா இது நம்ம இவன காதலிச்சா இவன் நம்ம பிரண்ட ஏத்திகிட்டு சுத்துறான் அப்ப நாம வீனா ஆச பட்டோமா” என அழுகையாக வந்தது.
மஞ்சுவோ தன் தோழி ஏன் முன்னமாதிரி இல்ல என்ற தயக்கதில் கண்கள் சுருங்க பார்த்துகொண்டே மறைந்தாள் அவனை கட்டிபிடித்துகொண்டு பைக்கில் சென்றாள்.
*****
மண்டபத்தில் ஓசைகள் முழங்க அந்த மஞ்சள் புடவையின் அழகில் கவரபட்டு அதை மறக்க முடியாமல் ஏற்கனவே கல்யானம் ஆகியிருந்தாலும் பாலோ செய்தான்.
“ஏய் ஏன் என்பின்னாடி வர்ர என் வீட்டுகாரருக்கு தெரிஞ்சா என்ன நடக்கும் தெரியுமா” என முறைத்தாள்.
“சாரிங்க அப்பளம் அந்த இலைக்கு கேட்டாங்க அத நீங்க வச்சுருக்கீங்க அதான் கேக்கலாம்னு வந்தேன்” என சமாளிக்க அவள் கையிலிருந்த அப்பள கூடையை வாங்கிகொண்டு நடந்தான்.
“ஏம்பா தம்பி இப்புடி அப்பளத்த வச்சுகிட்டே நடந்தா போதுமா போயி வச்சாதான திங்கமுடியும் கொண்டா” என ஒரு பெரியவர் வாங்கிகொண்டு செல்ல கடுமையான கோவகார்போல என நினைத்துகொண்டான்.
****
பைக் வீட்டின் வாயிலில் நிறுத்த ஒரு பதுமைபோல இறங்கினாள் மஞ்சுளா! ஆமா உன் பிரண்டு ஏன் அப்புடி பாத்தா” என கேட்க “அவ உன்ன சைட் அடிக்குற”
“ஓ சரி சரி அப்ப உன்கதி அதோகதிதானா” என சிரித்தான்.
“ஏய் என்னவிட்டு போகலாம்னு நினைச்ச உன்ன கொண்ணுடுவேன்” என மஞ்சு முறைக்க “அம்மா தாயே அப்புடிலாம் ஒன்னும் ஆகாது” என சிரித்துகொண்டு ஹெல்மட் மாட்டிகொண்டு பைக்கில் விரைய மஞ்சு கதவினை திறந்து தன் அண்ணனுக்கு பிடித்த ரசத்தை சமைக்கும் வேலையில் இறங்கினாள்.
*****
“நீ என்கூட வர்ரியா இல்லையாடி”
“எனக்கு எங்க அண்ணாதான் முக்கியம் அவர விட்டு அமெரிக்காவுக்கு நான் வரல”
“ஏய் நான் போகலைனா நம்ம லைஃப்பே ஸ்பாயில் ஆகிடும்டி”
“பரவாயில்ல அண்ணன் கஷ்டத்துல இருக்கு நான் விட்டு வரமாட்டேன்”
“நான் சொல்லுற எதையுமே கேக்ககூடாதுன்னு முடிவு பன்னிடியா நீ”
“ஆமா”
“எக்கேடாவது கொட்டு போ” என தூக்கிவீசினான் மஞ்சுவின் காதலன் அன்னைக்கு தன் அண்ணாவிடம் வந்து தைரியமாக “அவள நான் பத்திரமா பாத்துகுவேன்சார்” என கூறியவன் இன்று இப்படி பேசுகிறானே ஒருவருசத்துல நீ ரொம்ப மாறிட்டடா என நினைத்துகொண்டு கண்ணீருடன் தன் அண்ணாவின் வீட்டிற்கு வந்துவிட்டாள்.
ஆனால் அண்ணாவின் வீட்டில் அன்னிதான் இருந்தார். “ஹலோ மேடம் எங்க வர்ரீங்க”
“நான் அண்ணன்கிட்ட பேசனும்”
“ஏற்கனவே நாங்க சண்டைல இருக்கோம் இப்ப நீவேறயாமா”
“அன்னி நான் கொஞ்சநாள் தங்கிட்டு” என மஞ்சு இழுக்க
“ஒன்னும் தேவையில்ல கிளம்பு எங்கயாவது போயி சாவு”
“அன்னி” என அள் கூறிகொண்டிருக்கும்போது தன் அண்ணன் அப்படி நடந்துகொண்டு இப்போதுதான் பார்கிறாள் மஞ்சு ஆம் அவன் தன் மனைவியை அடித்துவிட்டான்.
“என்ன அடிச்சுடேல நான போறேன்” என அவள் தன் புகுந்த வீட்டுக்கு போய்விட்டாள்
****
மேளங்கள் ஓய்ந்து நின்றிருக்க “அன்னி அண்ணாவுக்கு ரசம் ஊத்துங்க கொஞ்சம் சூடா இருக்காரு” என கீர்த்தியின் தோளில் சாய்ந்துகொண்டு தன் அண்ணன் சிவாவை கிண்டல் செய்தாள்.
“ம்ம் அவருக்கு அப்பளம்தான் வேணுமாம்” என மஞ்சள் புடவையிலிருந்த கீர்த்திகூற
“நான் சும்மா லேசா கோவபட்டதுக்கு விட்டுட்டு போன யாரும் என்கூட பேசவேணாம்” என சிவா திரும்பி நிறக “அண்ணா என்ன மன்னிச்சிடு! நீ என் நல்லதுக்ககுதான திட்டுன நான் அவர்கூட இருந்தாதான நல்லா இருக்கமுடியும் அதனாலதான திட்டுன அதை புரிஞ்சுகாம கேஸ்போடுவேன அது இதுன்னு சொலிட்டேன்”
“ஆமா சார் உங்கள நான் புரிஞ்சுகிட்ட அளவுக்குகூட இவ புரிஞ்சுகல! உங்கள பத்தி எனக்கு நல்லா தெரிஞ்சதாலதான் உங்க்கிட்ட வந்து மஞ்சுவ பொண்ணு கேட்டேன். நீங்க மஞ்சுகேட்டு இதுவரைக்கும் இல்லைனு சொன்னது இல்ல ஆனா நீங்க அவள என்கூட அமெரிக்கா அனுப்புறதுக்குதான் திட்டுனீங்கனு அவளுக்கு புரிய வச்சுட்டேன்! அதான் அவ பிரண்ட் மேரேஜ்க்கு கூட்டி இந்தியா வந்தேன் உங்கள பாத்தா கொஞ்சம் புரிஞ்சுகுவா அதான்” என பீட்டர் சிரித்துகொண்டே நின்றான்.
“நல்லா பேசுறடா நீ! நீ யாரு எங்க ரெண்டு பேருக்கும் ஒன்னா ரோஸ் குடுத்து புரபோஸ் பன்னவன்ல” என மஞ்சள் புடவை அணிந்து சிவாவின் தாலியை கழுத்தில் மாட்டிகொண்டு நின்ற கீர்தித தன் தோழி மஞ்சுவை அனைத்துகொண்டு தன் பழைய நண்பர்கள் கூடும் விழாபோல ஆகிவிட்டது அந்த திருமனவீடு.
“கீர்த்தி நீ மட்டும் என்ன சாதாரன ஆளாடி! என்கூட இருந்துகிட்டே எங்க அண்ணா பைக்ல ஏத்த வரும்போது சைட் அடிக்குறது அது இதுன்னு பன்னின அப்புறம் நீ என்கிட்ட சரியா பேசாம போனதாலதான் பார்த்தேன் அவரு என்ன ஏத்திகிட்டு போகும்போது என் லவ்வர்னு நினைச்சேல? நல்ல வேலை அடுத்தநாளே உன்கிட்ட விசாரிச்சு எங்க அண்ணாகிட்ட சொன்னதால சிவா லவ்ஸ் கீர்த்தினு மாறிடுச்சு”
“ஆமா ஆமா ஆனா உங்க அண்ணன் சிவாவ நீ எப்புடி சமாளிச்சியோ தெரியலடி நீ உன் புருஷன் வீட்டுல இருந்த கோவிச்சுகிட்டு வரும்போது “ஏய் அவ ஃபாரின் போனா நல்லா இருப்பா நீ அவள வாசல்ல வச்சு திட்டி அனுப்பிரு அப்புடின்னு சொல்லிட்டு நான் உன்ன எங்கயாவது போயி சாவுன்னு சொன்னதுக்கு ஒரு அரைவிழுந்துச்சுபாரு எனக்கு இன்னும் வலிக்குதுடி நினைச்சா அதான் கோவிச்சுகிட்டு வந்துட்டேன எங்க அம்மாகிட்ட”
“ஆனாலும் நல்லா நடிச்சுருக்கீங்க ரெண்டுபேரும்” என மஞ்சு சிரிக்க
“வாலுங்களா ஒன்னா சேந்துட்டீங்களா இனி என் தங்கச்சியையும் என் பொன்டாட்டியையும் பிரிக்க முடியாது மச்சான் வாங்க நாம போயி சாப்புடுற வேலைய பாக்கலாம்” என பீட்டரை கூட்டிகொண்டு சாப்பிட அமர மஞ்சுதன் கனவனான பீட்டருக்கு பறிமாற “ஏய் உங்க அண்ணனுக்ககு ஊத்துடி ரசம்” என கீர்த்தி கத்த
“ம்ம் அதுக்குதான்டி உன்ன அவருக்கு கட்டிவச்சுருக்கேன்” என மஞ்சு கூறிவிட்டு “ சாரி அன்னி இனி நீ வா போன்னு சொல்லமாட்டேன்னு சத்தியம் பன்னேன்ல” என நாக்கை கடித்தாள்.
-நீண்ட நாட்களாக மனகசப்பில் இருந்த இந்த அண்ணன் தங்கைகள் இந்த திருமனத்தில் ஒன்றாக இனைந்து அன்பை பறிமாறினர்.
-முற்றும்

No comments:

தொகுப்பு...