Followers

சிறுகதைகள்

[சிறுகதை][twocolumns]

கவிதாயினி

[கவிதாயினி][twocolumns]

ஸ்நாக்ஸ் டைம்

[ஸ்நாக்ஸ் டைம்][bleft]

ஜெனிபர்

[ஜெனிபர்][twocolumns]

ப்ரீத்தா

[ப்ரீத்தா][twocolumns]

தங்கக்கடல் 2



“மேரி அன்டர்ஸ்டேன்ட் ப்ளீஸ்”
“நோ ஸ்டீவ் யூ ஆர் மேட் தென் ஒய் யூ பீ லைக் தெட்”
(இருங்க சப் டைட்டில் போட்டுடலாம் எனக்கும் ஒன்னும் புரியல”
“நான் பைத்தியமா.. ஏன் அப்புடி சொல்ற எல்லாம் நம்ம நல்லதுக்காக தான சொல்றேன்”
“எது நல்லது நீங்க போறதா?? அந்த ஆபத்தான கடல நோக்கி போறதா?”
“மேரி ஏன் புரிஞ்சுகிட மாட்டாங்குற நீ… அந்த தங்கம் பல வருசமா சும்மா கடலுகுள்ள கிடக்கு அத எடுத்து வந்தா நம்ம குடும்பம் நல்லா இருக்கும்ல… நீ இப்புடி ஒருத்தனுக்கு கீழ அடிமையா இருக்கனும்னு அவசியம் என்ன இருக்கு?”
“ஓ அந்த அளவுக்கு ஆயிட்டியா எனக்கு இந்த அடிமை வாழ்கைதான் பிடிச்சுருக்கு நீ வேணும்னா போயிட்டு வா”
“மேரி நீ இல்லாம நான் எப்புடிடி வாழ்றது”
“அங்க போனா நீ திரும்ப வரமாட்ட அதனால என் வயித்ததுல வளர்ர பாப்பாவுக்காகவாவது நான் வாழனும். நீ புதையல தேடி போறதால போயிட்டுவா நான் கிளம்புறேன் குட் பாய்” என கிளம்பிவிட்டாள் மேரி இங்கிலாந்தின் அந்த பிராதான சாலைகளில் நல்ல உயர்ந்த ஹீல்ஸ் போட்டுகொண்டு…
ஸ்டீவ் அவளை சமாதானம் செய்ய முடியாமல் அங்கிருந்த சோபாவில் சாய்ந்து அமர்ந்தான். அவள் சிறிது கோவகாரிதான். என்ன இருந்தாலும் சமாதானமாகிவிடுவாள். ஆனால் கோவபட்டு போவதற்கு முன் ஸ்டீவினை கட்டிபிடித்துவிட்டு குட் பாய் என கூறுவாள் ஆனால் இந்த முறை அப்படி எதும் நடக்கவில்லை அதனால்தான் ஸ்டீவ் மிகவும் வருத்தமாக உணர்கிறான்.
சோபாவில் சாய்ந்தபடி சுவறில் மாட்டியிருந்த ஓவியத்தினை பார்க்கிறான். நல்ல கம்பீரமான ஒரு உருவம் வளர்ந்த தாடி மீசையுடன். மிகவும் முதிர்ந்த மூளைதான். இல்லையேல் அந்த ஓவியத்தின் பின்னால் இருக்கும் புகைபடத்தில் அவ்வளவு பெரிய கப்பலினை இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையில் ஓட்டிவ வந்திருக்க முடியுமா அதுவும் போர் சமயத்தில்.
மிகபெரிய வணிக கப்பலினை ஓட்டிய குடும்பம் அது. ஆனால் இன்று இப்படி பணத்திற்காக வேலைக்கு போகின்றபடி ஆக்கியிருந்ததுவிதி… எல்லாம் அந்த ஒருநாள் இரவு நடந்த கொடுமைதான்.
“கேப்டன் கேப்டன்” பதட்டமாக வந்தான்.
“சொல்லுங்க”
“கனவாய் வழியா போர் கப்பல்கள் நம்ம தாக்க வந்துகிட்டு இருக்காம்”
“அப்போ நாம கொஞ்சம் தாமதமா கிளம்பலம்”
“ஆனா இங்க இருக்குற இந்தியாகாரணுக நம்மல விடனுமே”
“அவங்க வந்தா சுட்டு தள்ளுங்க”
“கேப்டன் அதுவுமில்லாம..”
“ஏன் இழுக்குற சொல்லு”
“இது எல்லாம் புனிதமான கோயில்ல இருந்து எடுத்து வந்த நகைங்க கூடவே கப்பல் பிளிம்சால் கோட்ட தாண்டி பில் பன்னிட்டு இருக்கோம் இடையில கடல் நீரோட்டம் மாறுச்சுனா நாம எல்லாம்…”
“இங்க பாரு டேவிட்… இப்போ எடுத்துகிட்டாதான் உண்டு அடுத்து நாம இந்தியா வரபோறது இல்ல இதுவரைக்கும் கவர்மென்டுக்கு வேலை பாத்தோம் இன்னைக்கு ஒருநாள் நமக்காக வேலை பாக்கலாம். எவ்வளவு முடியுது அவ்வளவு ஏத்துங்க…. அப்புறம் என்ன சொன்னீங்க புனிதமான கோயில்ல இருந்து கொள்ளை அடிச்சு வந்ததா?... ஹா ஹா அப்புடி பாத்தா நம்ம கவர்மென்டதான் அந்த சாமிங்கல்லாம் சேந்து தண்டிக்கனும். பின்ன அவங்கதான பல ஆயிரகணகான கோயில இடிச்சுகூட உள்ள இருந்த நகைய கொள்ளை அடிச்சுட்டு போயிருக்காங்க”
“ஆனாலும் கேப்டன்..”
“நண்பா நம்ம தலைமுறை நல்லா இருக்கனும் அத யோசிச்சுகோ  இதகேப்டனா சொல்லல ஒரு நண்பனா சொல்றேன்”
“ம்ம் நீ எது பன்னாலும் ஒரு அர்த்தம் இருக்கும் பாத்து பண்ணு….ம்ம் ஏத்துங்க ஏத்துங்க” என பெரிய பெரிய பெட்டிகளில் தங்கமும் வைரமும் ஏத்திகொண்டிருக்க இடமில்லாமல் கப்பலின் மேல் தளத்திலேரே கொட்டி வைத்தனர்.
“என்ன நினைச்சுகிட்டு இருக்காங்க அந்த மீரட் கப்பல் காரங்க..”
“என்ன ஆச்சு மேயர்”
“இங்க இருந்து நகையெல்லாம் கவர்மென்ட் உத்தரவு இல்லாம எடுத்துகிட்டு போறதா உத்தரவு வந்துச்சு”
“கரெக்டாதான் பன்றாங்க.. அவங்களுக்கு சேர வேண்டிய பங்க நாம தரலியே அதான் அப்டி பன்றாங்க மேயர்”
“என்ன உளற்ற”
“அந்த கப்பலோட சிப்மென்டுக்கு நாமு இருபது சதவீதம் தர்ரதா சொல்லிருந்தோம்… அதுவுன் அடுத்த ஊட்டுகாரன் பணத்த அள்ளிகுடுக்குறதுக்கு கூட யோசிச்சா எப்புடி அதான் அவங்களே எடுத்துட்டு போறாங்க மேயர்”
“சரி அங்க ராணிக்கு தகவல் குடுத்துருங்க வரின்னு சொல்லி பாதி வாங்கிகட்டும்”
“சரிங்க மேயர்…”
“இருந்தாலும் நான் ஒரு நோட்டிஸ் எழுதி குடுக்குறேன் நீ அத எடுத்துகிட்ட அந்த கப்பல்ல குடுத்துரு..நீ போறதுக்கு முன்னாடி அவங்கள பிடிச்சுட்டா அந்த கப்பல சீஸ் பன்னிடு”
“நீங்க பெரிய ராஜதந்திரி மேயர்” என கூற மேயர் எழுதி கொடுத்த அந்த பத்திரத்தினை வாங்கிகொண்டு ஓடி வந்தான். ஆனால் அதற்குள் அந்த மீரட் கப்பல் கிளம்பி போயிற்று.
“பாய் மரத்த விரிங்க… கரிய நிறைய அள்ளி போடுங்க நம்மலால முடிஞ்ச அளவுக்கு வேகமா போயிடனும்.”
“கேப்டன்..” என கூற கப்பலில் சக்கரத்தினை கையில் பிடித்திருந்த கேப்டன் திரும்பினான்.
“கடல்கொள்ளையர்கள் வர்ரதா தகவல்”
“தெரியும் நாம ஆப்பிரிக்காவ நெருங்கும்போது கன்டிப்பா வருவாங்க”
“அவங்கள எப்புடி சமாளிக்குறது?”
“பீரங்கிலாம் ரெடியா வச்சுகோங்க…. மத்தத எல்லாம் நான் பாத்துகிறேன்..”
“ஆனா அவங்க கப்பல்ல ஊடுருவிதான் தாக்குதல் நடத்துவாங்க..”
“அதுக்குதான் என் கத்தி இருக்கே இது பதில் சொல்லும்”
“அதும் சரிதான் கேப்டன் மடில கனம் இருந்தா வழில பயம் இருக்கதான செய்யும் நம்மலோட கனம் ஒரு கப்பல்நிறைய இருக்கு”
“ஹா ஹா” என இருவரும் சிரித்தனர்.
“ஆனா டேவிட் நம்ம அந்த கொள்ளையர்களோட இடத்த அடைய இன்னும் பல நாட்டிகல் இருக்கு அப்புறம் என்ன கவலை இப்போ வாங்க ஒயின் எடுத்து கொண்டாடலாம்”
“சரிங்க கேப்டன்…. ஏய் தி பார்டி பிகின்ஸ்.. வேர் இஸ் த ஒயின்” என கூற ஒருவன் ஒரு பேரலினை உருட்டிகொண்டு வந்தான்.
 அதை திறந்து ஒரு கோப்பையில் ஒயினை அள்ளிகொண்ட கேப்டன் காலுக்கு கீழே மலையென உயர்ந்துகிடக்கும் தங்கத்தினை அள்ளி மேலே உயர்த்திகாட்டினான் ஒருகையால்.
“இது யாரோடசொத்து?
“நம்மலோடது…” என கப்பலின் மாலுமிகள் சத்தமாக பாடினர்.
நன்றாக குடித்துவிட்டு மீண்டும் ஒரு குவளையில் ஒயினை எடுத்து குடிக்க போனான். அந்த நேரம் கண்ணாடி குவளை பட்டென உடைய ஏதோ ஒன்று அவன் உதட்டில் உரிச செல்வதனை உணர்ந்தான்.
அவன் முகத்தினை திருப்பு பார்க்க பக்கதில் இருந்த மரகம்பத்தில் ஒரு அம்பு பொதிந்து நின்றது.
அம்பு வந்த திசையினை நோக்கி பார்க்க அங்கு ஒரு சிறய படகில் கடலின் இளவரசனான பாண்டியவீரன் நின்றிந்தான்.
“புல் சிட்… ப்ளடி டாக்ஸ்.. பீரங்கிய வச்சு அவன சுட்டு தள்ளுங்க” என கூறியதும்.
கேப்டனின் உத்தரவுக்கு இனங்க பீரங்கிகள் முழங்கின டேவிட் ஓடி வந்தான்.
“கேப்டன் இந்த பொடியன கொல்றதுக்கு பீரங்கி இயக்கனுமா… நாம இன்னும் கடல் கொள்ளையர்ங்கள எல்லாம் பாக்க வேண்டியிருக்கு”

“தள்ளு… அதெல்லாம் எனுக்கு தெரியும் இவன்தான் நான் கரையில இருக்கும்போதும் வம்புக்கு வந்தான் இப்போவும் வம்புக்கு வாரான் இவன கொண்ணாதான் நான் ஒருவீரனாக முடியும்” என டேவிட்டினை தள்ளிவிட்டுகொண்டு முன்னேறினான்
வரிசையாக பீரங்கி குண்டுகள் மலையாக பொழிய அந்த கடல் இளவரசனின் கப்பல் ஆட்டம் கண்டது…
மேலே பார்த்த இளவரசன்… “கஜா…..” என பெரிதாக சத்தமிடும் தருனம் ஒரு குண்டு அந்த இளவரசனின் கப்பலை இரண்டாக பிளந்த நீரில் மூழ்கடித்தது.
“ஹா ஹா கடல்ல நாமதான கிங்.. பொடியன்.. நீங்க கப்பல ஓட்டுங்க” என கேப்டன் திரும்ப கப்பலில் ஏதோ மோதுவதை போன்ற ஒருசத்தம் கப்பல் ஒரு அடிகூட நகரவில்லை.
“நிறைய கரி அள்ளி போடுங்க”
தங்களது ஆட்கள் அனைவரும் சேர்ந்து கரி அள்ளி போட்டனர் பதிலுக்கு அந்த கப்பலின் இன்ஜின் பகுதி தின்றியதே தவிற ஒரு அடிகூட நகரவில்லை.
“என்ன இது” என கேப்டன் தண்ணீருக்குள் எட்டி பார்க்க ஒரு நாட்டிகல் தூரத்தில் ஏதோ ஒரு பெரிய துடுப்பு தெரிந்தது அது தண்ணீருக்கு மேலே தெரியும் உயரம் இந்த கப்பலின் உயரத்திற்கு சம்மாக இருக்கும்
கேபப்டன் நடுங்கினான்.
அப்படியே கப்பலின் கீழே பார்க்க ஒரு பெரிய கண் தென்பட்டது. சரியாக அதன் கண் மட்டும் கப்பலின் பாதி இருக்கும்.
ஆம் இரண்டரை கிலோமீட்டர் நீலமான ஒரு ராட்சத மீன் அந்த கப்பலை கவ்வியிருக்க கேப்டன் என்ன செய்வது என்று திகைத்து நின்றான். அடுத்த நொடி அந்த துடுப்பு முழுவதும் தண்ணீருக்கு மேலே வந்து சடாரென தண்ணீரை அடிக்கவும் அதன் தலைபகுதி கப்பலினை அழுத்தவும் சரியாக இருந்தது. கப்பல் கீழ்தளமே பிளந்த வேகத்தில் தண்ணீருக்குள் மூழ்கியது அழகான தங்க நகைகளுடன்.
இளவரசன் வரும்வரை அந்த தங்கத்தினை பாதுகாக்க அந்த ராட்சத மீன் அங்கேயே காவலுக்கு நின்றது..
ஸ்டீவ் தன் பூர்வீக சொத்தான அந்த தங்கத்தினை எடுக்க காத்திருந்தான்..

No comments:

தொகுப்பு...