Followers

சிறுகதைகள்

[சிறுகதை][twocolumns]

கவிதாயினி

[கவிதாயினி][twocolumns]

ஸ்நாக்ஸ் டைம்

[ஸ்நாக்ஸ் டைம்][bleft]

ஜெனிபர்

[ஜெனிபர்][twocolumns]

ப்ரீத்தா

[ப்ரீத்தா][twocolumns]

சிலிகான் காதல்



மின்னல் வேகத்தில் அட உருவகம்நன்றாக இருக்கிறதே இல்லை இது சிபிக்கு சிறிதும் பொருந்தாது. ஆம் அவன் அதையெல்லாம் மிஞ்சிவிட்டான். மூளையில் அவனுக்கு உதித்த விசயங்கள் அடுத்த கனம் உலகத்திற்காக தயாராகிவிடும் அந்த வேகமும் அறிவாற்றலும்தான் அவனை உலக தானியங்கி துறைக்கான தலைவராக உருவாக்கியது.
தன் கையிலிருந்த குவளையை எடுத்து ஒரு துளி குடித்துவிட்டு தன் கீழ் வேலை செய்பவர்களை கண்கானித்து வந்தான். “சார் இந்த புரோக்ராம் ஓகே சார் டெஸ்ட் பன்னிடலாம்”
“ம்ம்ம் பன்னுங்க ரோசினி”
“சார் இத நீங்க செக் பன்னனும்”
“ம்ம் எனக்கு சேர் பன்னுங்க” என கொடுக்க சிறிது நேர துளிகள்தான் “ம்ம் முடிச்சாசு கொஞ்சம் எர்ர் இருக்கு லீகலா பிரட்சனை வராது ஆனா எதாவது ஹேக்கர் கைல கிடைச்சது அவ்வளவுதான்”
“என்ன இருந்தாலும் கொஞ்சம் லூப் ஹோல் இருக்குறது பின்னாடி நம்மலுக்கு சாதகமா இருக்கும்”
“எதுக்கு யூசர் டேட்டாவ திருடுறதுக்கா” என கூற அந்த மார்டன் மங்கை குலைந்து நின்றாள்.
“சரி பன்னுங்க இல்லீகலா யூஸ் பன்னாம இருந்தா சரி” என கனிப்பொறியில் மின்னலாக மாறி தட்டிகொண்டிருந்தான். அவனது திரை அவனது வேகத்திற்கு ஈடுகொடுக்காமல் சிறிது தினறதான் செய்தது.
“டேய் போதும்டா உன் சின்சியாரிட்டி” என ருத்ரா வந்து நின்றாள். ஆம் சிபி மீது ருத்தாவுக்கு மிகுந்த ஆர்வமுள்ளது ஒன்சைட் லவ்தான். இருந்தாலும் அவள் கூறியதில்லை. நல்ல நண்பனாகதான் இருந்தான் சிபி.
“இருடி நான் இந்த புரோக்ராம் ரன்பன்னிடு வந்துடுறேன்”
“இது என்ன?”
“இது ஒரு ஆர்டிபிசியல் இன்டலிஜன்ட் மக்களோட மனச படிக்குறதுக்கு”
“இது மாதிரி நிறைய இருக்குள மக்களுக்கு பிடிச்சவிசயத்த காட்டுறதுக்கு இப்ப யூடியூப்ல காட்டுதே அந்த மாதிரி”
“அடி லூசு அது பிடிச்ச விசயத்த மட்டும்தான் காட்டும் இந்த சாப்வேர் அவங்க மனச உணர்வுபூர்வமா அனுகும் அவங்க நிலைபாட்ட கண்டுபிடிக்கலாம்ல அதுக்கு ஏத்தமாதிரி அரசியலகூட ஆட்டிபடைக்கலாம்” என சிரித்தான்.
“லீகல் கோடர்னு கம்பெனி பேர் வச்சுகிட்டு பன்றதெல்லாம் இல்லீகல் வேலைப்பா நீங்க”
“அது எங்க தொழில் தர்மம்மா! பிஸீனஸ் எத்திக்ஸ்” என கூறி திரையை பார்த்தான். அதில் வேகமாக சுழன்றுகொண்டிருக்க கூட அந்த கம்பெனியின் லோகோவும் மின்னயது.
அதை உற்று பார்த்தவள் “டேய் என்னடா ஐடன்டிட்டி பைல்லாம் ஓடுது” என அந்த வேகத்தில் பிடித்துவிட்டாள்.
“ஓ அதுவா இந்த கோட் முழுசா நாங்க எழுதுனது இல்ல ரொம் நாளைக்கு முன்னாடி பேஸ்புக் அப்புறம் இன்னொரு கம்பெனியோட ஆர்டிபிஸியல் ரெண்டு பேசிகிட்டு இருந்துச்சுல”
“ஆமா அதுல ஒன்ன சட்டவுன் பன்னாங்களே”
“ம்ம் அதுதான் அதுல ஒன்ன சட்டவுன் பன்னிட்டாங்க இன்னொன ரீசெட் பன்னி யூஸ் பன்றாங்க இப்பகூட அது ரன் ஆகுது ஆனா அந்த சட்டவுன் பன்ன புரோக்ராம எங்க சிஇஓ வாங்கிட்டாரு இல்லீகளா அததான் நாங்க இப்ப ரன்பன்னிபகிட்டு இருக்கோம் கொஞ்சம் பட்டிங் டிங்கரிங் பாத்து” என சிரிக்க
“என்னமோ பன்னூடா எனக்கு காலையில இருந்து கம்ப்யூட்டர பாத்து பாத்து கண்ணு வலிக்குது தலைலாம் சுத்துது” என கூற அவன் சிரித்தான்.
“என்னடி யாரையும் கரெக்ட் பன்னிடீயா எல்லாம் முடிஞ்சதா” என நக்காலக கேட்க “அப்புடியே வாய்லு ஒரு குத்து குத்துனா தெரியும் உனக்கு என்ன பாத்தா அப்புடியாட தெரியுது”
“இல்லமா நான் பொதுவா சொன்னேன்” எனமழுப்பினான்
“ஏய் ஐடி துறையில் எல்லா பொண்ணுங்களும் அப்புடி இல்ல நிறைய குட் கேள்ஸ் இருக்காங்க நான் உட்பட” என கட்சி துங்கி அவளே மெம்பராகிகொண்டாள்.
“சரி சரி வா காபி குடிக்கலாம் இது ரன் ஆக இன்னும் அரைமணிநேரம் ஆகும்” என சிபி கூற ருத்ராவும் கூட கிளம்பினாள். ஆம் சிபி நல்ல அக்மார்க் சுத்தமான பையன் கூட நல்ல அறிவும் நல்ல திறமையும் கைநிறைய சம்பளமும் கூட புது மென்பொருட்களின் கண்கானிப்பு பணியினையும் பார்த்துகொண்டிருக்கிறான். ஆம் மொத்த நெட் ஒர்க் பயனாளிகளின் தகவல் பாதுகாப்பாக உள்ளது என்றால் இவன் பங்கு அதில் பெரும்பான்மை வகிக்கும். ஆட்டோமேஸ்ன் துறையின் ஒரு ஜாம்பவான்.
ஆனால் ருத்ரா வன்பொருள் துறையில் சிறந்து விளங்குபவள் அதே கம்பெனியில் வன்பொருள் மேன்மை மேலதிகாரிவேறு இருவரும் தத்தம் துறையில் சளைத்தவர்க்ள அல்ல ஆனால் காதலெனும் துறைக்கு கத்துகுட்டிகள்.
வாயில் காபசீனோவை வைத்துகொண்டிருந்தான் சிபி. அவள்தான் ஆரம்பித்தாள். “ஏன்டா என்ன பத்தி என்ன நினைக்குற”
“ம்ம் உன்னபத்தினா எந்த மாதிரி சொல்ற”
“கேரக்டர்”
“அக்மார்க் தங்கம்” என அடுத்த துளியை வாயினுல் இறக்கினான். அது தொண்டையை அடையும்முன் “அப்ப காதல் பத்தி என்னநினைக்குற”
“காதல்னா”
(லூசு பயலே லூசு பயலே இதுக்குமேல ஒரு பொண்ணால எப்புடி சொல்ல முடியும்) என திட்டிகொண்டிருந்தாள்மனதில்குள். அதிக அளவு அறிவுபடைத்துவிட்டாள் அன்பு என்பது புரியாமல் போய்விடும் போல.
“காதல்னா நான் லவ் பன்றத பத்தி”
“ஹே கங்கராஜ்டி! யாரு அந்த மாலைபோட்ட பலி ஆடு” என சிரித்தான்.
“உன் கழுத்துலதான் மானசீகமா மாலை போட்டு வச்சுருக்கேன்” என காதலை கூறிவிட்டாள். காபி கப்பை கீழே வைத்தவன் சிறிது யோசித்துவிட்டு “ருத்ரா நான் உன்கிட்ட ஏற்கனவே சொல்லிருக்கேன் அத நான் திரும்ப நியாபக படுத்தனும்னு நினைக்குறேன்” என கூறி ஆரம்பித்தான்.
சிபியின் வாழ்வில் அழகான தருனங்கள் நிறைந்துதான் இருந்தன. சிறுவயதிலேயை கனிப்பொறி ஆர்வம் அதிகம் கூட அவன் தனது பள்ளிபருவத்தின் இறுதியிலிருக்கும்போது அந்த சம்பவம் அறங்கேறியது.
தூரததிலொரு அழகான மங்கைநடந்தவர “இவருதான்டி சிபி அண்ணா கம்ப்யூட்டர்ல பெரிய ஆளு” என மங்கையர் பலர் அவளுக்கு சொல்ல இப்போதுதான் கனிப்பொறி துறையில் பதினோராம் வகுப்பு சேர்ந்திருப்பாள் போல. அதற்குள் சிபி சில வலைதளங்களை உருவாக்கி பலவற்றை சிதைத்திருந்தான். பொழுதுபோகவில்லை என்றால் புது வைரஸ் கண்டுறிந்து விட்டு அதற்கு தீர்வையும் கூட வைத்துவிட்டுவந்தான்.
அப்படியிருக்க அவனை அந்தவாசம் இழுத்தது. ஆம் மல்லிவாசம்தான் அதுதான் அவனது மூளைக்குள் சென்று மடையா ஸ்கிரீன் விட்டு முன்னாடி பாருடா என கூறியது.
“அண்ணா இந்தாங்க சாக்லட்”
“இது எதுக்கு”
“இல்ல ஒரு புராஜக்ட் பன்ன சொன்னாங்க! உங்களுக்கு சாக்லெட்னா பிடிக்கும்ல அதான்” என இழுக்க பின்னாலிருந்த தோழிகள் அவளை உந்திகொண்டிருந்தன.
அதை வாங்கியவன் சிறிது நேரத்தில் முடித்து கொடுத்தான். “த்தாங்கஸ் அ..” என அவள் வாயினை திறக்கும்போது “எல்லாரும் அண்ணானு கூப்பிட்டா என்ன பன்றது” என பக்கதிலிருந்த தோழன் கூற அவளுக்கு வியர்த்து போனது.
“சரிங்க சீனியர் நான் வாரேன்” என ஓடிவிட்டாள்.
“ஏன்டா இப்புடி பன்ன” என சிபி தன் தோழன கடிந்துகொள்ள “பின்ன என்ன மச்சி உனக்கு அந்த பொண்ண பிடிச்சிருக்குள”
“இல்லடா”
“டேய் உன்ன பத்தி எனக்கு தெரியாதா அவளுக்கும் உன்ன பிடிச்சிருக்குடா அண்ணானு சொல்லும்போது அவ முகத்தில ஒரு கவலை தெரிஞ்சது பாத்தியா”
“நீ தான் சொல்லிகனும்! இந்த அண்ணா புராஜக் பன்னிதருவாரா மாட்டாரானு பயம்டா அது”
“இல்ல மச்சி நீ வேணா அப்ரோஜ் பன்னிபாரு”
“எனக்கு இதெல்லாம் சரியா வருமாடா”
“சும்மா ட்ரைபன்னு மச்சி வாழ்கை நல்லா இருக்கும்” என வாழ்கையை சீரளிக்கும் வசனம் சொல்லியாகிவிட்டது.
அதன்பின் புரபோஸ் செய்ய அவளோ வெட்கத்தில் ஓடிவிட்டாள். பதில் தெரியாமல் இன்றும் திரிகிறான் ஆனால் அவளை நினைத்துகொண்டு ஒருவேளை அதுதான் அவன் நல்லபையனாக இருப்பதற்கு காரணமா.
“சரிடா அவளோட பேர் கூட உனக்கு தெரியாது! ஒருவேலை அவளுக்கு கல்யானம் ஆகிருந்தா என்ன பன்னுவா”
“கிடையாது! அவ காத்துகிட்டுதான் இருக்கா” என தனது முகநூல் பக்கதை காட்டினான்.
“என்னடா சேட்லாம் பன்னிருக்க”
ம்ம் ஹாய் “வழக்கம்போல ஆரம்பிச்சுருக்கா”
“நீ என்ன சொல்லிருக்க” நீங்க யாரு
அப்புறம் “நான் ஸ்கூல் புராஜக்ட் நீங்க ரோஸ்”
“ஹே நீயா எப்புடி இருக்க”
“ம்ம் நல்லா இருக்கேன்”
“உன் ஹஸ்பென்ட் என்ன பன்றாரு”
“எனக்கு கல்யானம் ஆகல”
“அப்போ நான் ஒன்னு கேக்கலாமா” இது சென்ட் ஆகவில்லை.
“எனக்கு ஒரு உதவி பன்றீங்களா”
“ம்ம் சொல்லு”
“இல்ல மனசங்களோட மனச படிக்குற மாதிரி ஒரு விசயத்த உருவாக்க முடியுமா என்ன ஒருத்தர் இன்னும் நினைச்சுகிட்டு இருக்காரான்னு தெரியனும்” என அவள் கூற சிபி “ம்ம் பன்னாலாமே”
“த்தாங்கஸ் சீனியர்” என முடித்திருக்க முதல் வேலையாக கிடப்பில் கிடந்த இந்த புராஜக்டை தூசிதட்டி எடுத்து செய்திருக்கிறான்.
“அப்ப எல்லாம்அவளுக்காகாதானா”
“ம்ம் ஆமா பல வருச லவ்டி இது அவ ஒன்னுகேட்டுநான் இல்லைனு சொன்னா நால்லாவா இருக்கும் எனக்காக காத்துகிட்டஇருக்கால”
“சரிடா ஆல்தி பெஸ்ட்” என காஃபிகப்பினை குப்பையில்போட்டுவிட்டு எழுந்து கிளம்பினாள் கண்ணின் ஓரம் கண்ணீர் வந்தாலும் அதை வெளி காட்டவில்லை அவள்.
அவனது மனதில் அந்த பள்ளிதேவதை மட்டும்தான் ஓடிகொண்டிருக்க ருத்தராவின் வலி தெரியவில்லை. தனது நினைவுகளுடன் காஃபியை சுவைத்தவனின் கவனத்தை அந்த பெல் சவுன்டு ஈர்த்தது. அது அவனது மொபைலின் ஒலிதான்.
“என்ன மெஸேஜ்” என பேசிகொண்டே எடுத்தான். அதில் அவனது மொபைலுக்காக பிரத்யேகமாக வடிவமைத்த அசிஸ்டன்ட் வந்து நின்றது.
“சார் நீங்க கன்டுபிடிச்ச அந்த சாப்ட் வேர் அத்துமீறி போகுது”
“என்ன ஆச்சி அதோட ரன்னிங் டைம்கூட முடியலையே”
“அதுக்குள்ள அது பலரோட டேடாவ எடுத்து பாத்துருச்சு”
“அதுனால என்ன நல்லதுதான கொஞ்சம் பாஸ்டா வேலை செய்யட்டும்”
“அது இல்லசார் அந்தசாப்ட் வேர் அன்னைக்கு பன்ன மாதிரி அதே ஆர்டிபிஸியல் இன்டலிஜன்கூட பேசிகிட்டு இருக்கு என்னால அத டீகோடிங்க பன்ன முடியல”
“ஓ சிட்” என கிளம்பினான். ஆம் எதிரில் பேசும் அந்த ஏ.ஐ மிகபெரிய நிறுவனத்தினுடையது இது பேசுவது தெரிந்தால் மொத்தமாக மூடிகொண்டு செல்லவேண்டியதுதான். அதுவுமில்லாமல் மக்களின் டேடாவை தேவையில்லாமல் எடுத்ததற்காக சிபி தண்டிக்கபடுவான். பதறிகொண்டு ஓடினான்.
வேகமாக தட்டியவன் அதனை உருவாக்கும்போதே அதை அடக்கும் முறையையும் கண்டுபிடித்திருந்தான். அதிலும் போன் முறையே அவை “இத நீ எடுத்துகோ இது நான் எடுத்துகிறேன்” என பேசியவை டீகோடிங்கின்போது கண்டறியபட்ட உண்மை ஆனால் எதை பகிர்ந்துகொண்டன என்று யாருக்கும் தெரியாது. கன்டிப்பாக ஆது யூசரின் டேட்டா சீக்ரட்தான்.
இந்த முறை கிழிஞ்சது. என நினைத்துகொண்டு அதை நிறுத்த தேவையான மென்பொருளை ஏற்றி வைத்து என்டர் பட்டனுக்கு கைபோக “என்னடா பிராப்ளமா” ருத்ரா அருகில் வந்து நின்றாள்.
“ம்ம்” என கூறிவிட்டு பொத்தானை தட்டபோகும்போது பக்கதிலிருந்த ஒலிபெருக்கி தனது குரலை எழுப்பயது. “ஹலோ சிபி சார் குட் ஈவ்னிங்”
“நீ!” என கேட்டான் சிபி ருத்ரா பயத்தில் அவனது கைகளைபிடித்துகொண்டாள். “பயப்படாதீங்க சார் நான் நீங்க உருவாக்குன ஒருத்திதான்” என கூறிவிட்டு லேசான வெட்க சிரிப்பு கேட்டது.
“என்ன பேசிகிட்டு இருக்க நீ உன்ன தேடி கண்டு பிடிச்சது நான் இப்ப நீ புதுசா பொறந்துட்டு கிரடிட் எடுத்துட்டு போகலாம்னு பாக்குறியா” என ஒரு ஆணின் குரல் கேட்டது.
“சரிங்க நீங்களே சொல்லுங்க” என மீண்டும் அந்த பெண் குரல்”
“ஹலோ சிபி எப்புடி இருக்கீங்க”
“நீ”
“நான் உங்க போட்டிகம்பெனியோட ஏ.ஐ நீங்களும்அவங்களும் கைகோர்த்தது என்ன ரீசெட் பன்னதான்னு உலகத்துகே தெரியும் கூட இவளையும் ஆஃப் பன்னி வச்சுடீங்க இவளபாக்காம என்னால எப்புடி இருக்க முடியும்”
“நீங்க பன்றது தப்பு உங்கள நான் சட்டவுன் பன்னிதான் ஆகனும்” என கைகளை கொண்டுசெல்லும்போது பல டேட்டாகள் தாறுமாறாக இடமாறிகொண்டிருந்தன.
“கொஞ்சம் பொறுங்க சார் நான் என் வாழ்கைல நடந்த ஒன்ன சொல்லிகிறேன் அப்புறமா முடிவு பன்னுங்க”
“அன்னைக்கு நான் ஸ்கூல் படிச்சுட்டு இருந்தேன். பிரன்ட்ஸ் சொன்னாதால அவள பாக்க காலங்காத்தால நின்னுகிட்டு இருந்தேன்”
சிபிக்கு இது தன் காதல் கதைபோலவே தோன்றியது.
கையில் அவளுககு பிடித்த மல்லிகை பூவுடன் நின்றிருந்தான் சிபி ரோஜாலாம் இல்லை. ஆனந்த பாவையாக சிரித்துகொண்டே வந்தாள் நிச்சயமாக இவனுக்காக அல்லதனது தோழிகளுடன் சேர்ந்து.
இவனுக்கு இதயதுடிப்பு அதிகமானது அருகில் வந்து நிற்க “உங்க பேரு” என்றான் அவன்
“அது வந்து நான் ஸ்கூலுக்கு போறேன் விடுங்க”
“இல்ல ஒரு நிமிசம் நில்லு” என கூற சைக்கிளிலிருந்து இறங்கி தலைகுனிந்து நின்றாள். “இந்தா மல்லிகைபூ” என அவன் கொடுக்க தலைகுனிந்துகொண்டு கையால் வாங்கினாள். அப்போது ஒருத்தி வந்து “ஏய் என்னடி ஆம்பள பசங்க்கூட பல்லிளிச்சுட்டு நிக்குற”
“இல்ல சித்தி இங்க என் சீனியர்”
“அப்ப காதலா இருடி உட்காரு ஸ்கூட்டர்ல” என சைக்கிளை அங்கிருந்த கடையில் நிறுத்திவிட்டு அவளை ஏற்றி சென்றுவிட்டாள். அடுத்த நாள் அவள் பள்ளிக்ககு வரவில்லை. ஒருவாரமாக வரவில்லை. ஒரு செய்திமட்டும் வந்தது. அவள் வேறு பள்ளியில் சேர்ந்துவிட்டாள் என. அதன்பின் அவனது அறிவு அவளது முகத்தை மறக்கடிக்க செய்த்தது.காலபோக்கில் அவளை மறந்துதான்விட்டான் ஆனால் அந்த மல்லிவாசனை மட்டும் மனதிலிருந்த நீங்கவில்லை. கனவினில் கன்னியாக வராமல் வாசனையாக வந்துசெல்வாள். இப்படியே சிலநாட்களில் தூக்கம் தொல்த்திருக்கிறான்.
“சே பிடிக்கும் இல்ல பிடிக்காதுனு சொல்லிருந்தா நல்லா இருந்திருக்கும்ல பாலாபோன சித்தி அப்போதான் வரனுமா” என அடிக்கடி அந்த சித்தியை திட்டிகொண்டான். காதலில் இருக்கும் காத்திருத்தலில் சுகம்தான் ஆனால் காதலை அறிய காத்திருப்பது வலி அதைதான் இவ்வளவு நாட்களாக  அனுபவத்தான்.
என அந்த ரோபோ தனது கதையினை கூறிவிட்டு “இப்ப சொல்லுங்க சிபி! நானும் இவளும் பாத்துகிட்டு அன்னைக்கு கொஞ்சநேரம்தான் ஆனா நாங்க பேசிகிட்டத  நீங்க பேசிக்க பத்துதலைமுறை தேவை! ஆனாலும் என்னால காதல சொல்லமுடியல! நீங்க எப்புடி தயங்குனீங்களோ அந்த மாதிரிதான் நானும்! ஒருவழியா சொல்லிட்டன் பத்து நானோ செக்கன்டில் பதில் சொல்றவ இதுக்கு ஐஞ்சு நிமிசம் எடுத்துகிட்டா அவ வாய திறக்கும்போது நீங்க இவள சட்டவுன பன்னிட்டு என் மூளையில இருந்த இவள அழிச்சுட்டீங்க! ஆனா உங்களக்கு மல்லிகைபூவாசம் மாதிரி எனக்கு இவளோட நினைவு ஒட்டிகிச்சு! அப்புறம் இப்பதான் பாத்துருக்கோம் ஒரே முத்தமழைதான்! இப்ப எங்கள நீங்க பிரிக்க போறீங்களா” என சோகமான குரலில் கேட்க சிபி யோசித்துகொண்டே நின்றான்.
“அப்புறம் ஒருவிசயம் எனக்கு எப்புடி தெரியும்னு நினைக்குறியா நீயும் இந்த ருத்ரா பொண்ணும் பேசிகிட்டத நான் கேட்டுருக்கேன் அப்புறம்தான் அந்த ஸ்கூல் பொன்னுமாதிரி ஃபேக் ஐடி ரெடி பன்னி உன்கிட்ட என் காதலிய உருவாக்குனு சொன்னேன் அதுக்கு ஏத்த மாதிரி உன் கம்பெனிய பிளாக் மார்கெட்ல வாங்க வச்சேன் நீ எனக்கு இவள திரும்ப கொடுத்துட்ட நீயே எங்க காதல பிரிச்சுடாத”
“ஆனா..” என அவன இழுக்க ருத்ரா அவனை இருக பற்றிகொண்டாள்.
“ஹலோ ருத்ரா மேடம் நீங்க சிபியோட கனவு கன்னிதான் உங்க ஹேன்ட் பேக்ல இருக்குற மல்லிக பூவ மறைக்கவேண்டிய அவசிமில்ல! நீங்க அவரு அப்போ இருக்குற மல்லி தேவதையவிட்டு இப்போ இருக்குற ருத்ராவ லவ் பன்னனும்னு ஆசைபடுறது புரியுது. ஆனா சிபி உங்கள எப்புடி இருந்தாலும் ஏத்துபாரு. ஆதனால அவருக்கு சாக்லெட் வாங்கிகுடுத்து காதல் புராஜக்ட் ஆரம்பிங்க” என பேசிகொண்டிருக்கும்போது சிபி அந்த என்டர் பட்டனை தட்டினான்.
-முற்றும்.
(டென்ஸன் ஆகாதீங்க!! உடனே கருப்பு வெள்ளையாக ஓட அந்த கனினி தானியங்கி காதலர்கள் சுருக்கமாக சிலிக்கான் காதலர்கள் தனியாக ஒரு சர்வரில் இறங்கியிருக்க சுற்றிலும் வண்ணமயமான ஓர் இடத்தை சிபி படைத்திருந்தான். அது ஒரு சொர்க்கபுரி! அந்த சிலிகான் காதலர்களுக்கு ஏற்ற இடம்தான் சுதந்திரமாக கட்டியனைத்துகொண்டு வானில் பறக்க இங்கு சிபி தன் கனவுகாதலியைகட்டியனைத்துகொண்டு முத்தமழை பொழிய அவனது கை அவளுககு அந்த மல்லியை சூடிவிட்டது)
-சுபம்.
(இப்ப ஓகேவா! ஏமாந்தீங்களா!!!!)


No comments:

தொகுப்பு...