Followers

சிறுகதைகள்

[சிறுகதை][twocolumns]

கவிதாயினி

[கவிதாயினி][twocolumns]

ஸ்நாக்ஸ் டைம்

[ஸ்நாக்ஸ் டைம்][bleft]

ஜெனிபர்

[ஜெனிபர்][twocolumns]

ப்ரீத்தா

[ப்ரீத்தா][twocolumns]

காஃபியும் காதலும்



“ஏய் இப்ப நீ எந்திரிக்குறியா இல்லியா?”
ஓரகண்ணால் அவளை பார்த்துவிட்டு மீண்டும் கண்களை மூடிகொண்டு போர்வையினையும் முழுவதுமாக போர்த்திகொண்டான் ரகு.
“ஒருவாட்டிதான் சொல்லுவேன் நான் பாத்துகோ” மீரா குளித்து முடித்துவிட்டு ஈரகூந்தலுடன் நின்றிருந்தாள் தலையில் ஒரு துண்டினை சுற்றிகொண்டு.
“முடியாதுடி இன்னைக்கு லீவுதான போ”
“முடியாதா உன்ன?” என அருகிலிருந்த தலையனையை எடுத்து அவனை அடித்தாள்.
“ஆ!! பொண்டாட்டி வயித்துல அடிச்சிட்டியே!” என கத்திவிட்டு குப்புற படுத்துகொண்டான்.
“ஆனா நல்லா நடிக்குறடா நீ! இரு இன்னைக்கு உன்ன” என மறுபடியும் தலையனையை உயர்த்தினாள். வேகத்தில் முதுகில் ஒரு அடி அடித்தாள்.
“இந்த பொண்ணு என்ன டார்ச்சர் பன்னுதே கேக்குறதுக்கு ஆளே இல்லியா”
“ஆமா இங்க யாரும் இல்ல நீதான தனியா வீடு கேட்ட இப்ப அடிவாங்கு”
“உன்கிட்டதானடி வங்குறேன் சந்தோஸம்தான்”
“அப்ப நல்லா வாங்கு இந்தா” என மொத் மொத் என அடிவிழ “போதும்டி உன் பாசத்த ரொம்ப பொழியாத அப்புறம் மாமா அழுதுடுவேன்” அவன் திரும்பாமலேயே கூறிகொண்டிருந்தான்.
“ஐயோ கடவுளே யாருதான் இந்த ஞாயித்து கிழமைய கண்டு பிடிச்சதோ! இவன் என்ன பாடா படுத்துறானே” என செல்லமாக அழுத்துகொண்டாள்.
“யாருடா நானா படுத்துறேன்! நீதான் எந்திரிக்காம என்ன பாடா படுத்துற”
“இப்ப என்னடி எந்திரிக்கனுமா?”
“வேணாம் உனக்கு எப்ப பிடிக்குத்தோ எந்திரிச்சுகோ நான் வீட்ட அடிச்சுட்டு கோயிலுக்கு போறேன்”
“சந்தோஸமா போயிட்டுவா பொண்டாட்டி”
“நீயும் வாடா”
“நான் வரலடி! விபத்து நடந்த இடத்த மறுபடியும் யாராவது பாக்க விரும்புவாங்களா?”
“என்ன????....” என லேசாக முறைத்தாள்
“ஆமா ஆமா அன்னைக்கு நீ கோயிலுக்கு வரமா இருந்திருந்தா எங்க அம்மா உன்ன பாத்துருக்காது கட்டுனா இவளதான் கட்டனும்னு டார்சர் பன்னிருக்காது இப்புடி உன்கிட்ட அடிவாங்காம இன்னாரம் பிரண்ட்ஸ்கூட ஜாலியா சரக்கு…”
“என்னடா என்ன சொன்ன இப்ப”
“ஒன்னுமில்லயே” பயத்தில் வெடுக்கென எழுந்து அமர்ந்துகொண்டான்.
“டேய் சரக்குனுதான சொன்ன”
“விடுடி இப்ப ஏன் அது! என்னோட காஃபி எங்க”
“சீ போடா” என அவள் வெட்கபட்டாள்.
ஆம் அது ஒரு முத்த ஒப்பந்தம், தினமும் காபி குடிக்க குடுக்கும் போது முத்தம் கொடுக்க வேண்டுமாம். எப்புடிதான் இப்படி யோசிக்கிறானோ!
“என்னடி வெட்கமெல்லாம் படுற! கடைசியா பொண்ணு பாக்கவரும் போது நீ வெட்கபட்ட! அப்புறம் நான்தான் வெட்கபட்டுகிட்டு இருக்கேன்டி! சரி காஃபி… ஐ வான்ட் காஃபி…”
“முதல்ல நீ பல்ல விளக்குடா”
“முடியாது” சிறுகுழந்தையாக அடம் பிடித்தான்.
“போடி நான் ஸ்டைரைக் பன்னுவேன் வரமாட்டேன் போ எனக்கு பெட் காஃபிதான் வேணும்”
‘ஐயோ இவனோட ஒரே ரோதனையா போச்சே’
“செல்லம் நீ யோசிக்கிறது எனக்கு தெரியுதே”
“எங்க சொல்லு பாப்போம்”
“இவன் வேற இம்சைபன்றான்னுதான யோசிச்ச”
“இல்ல! இததான் யோசிச்சேன்” என அவனது இருகைகளையும் பற்றிகொண்டு இழுத்தாள்.
“எந்திரிடா எரும மாடு”
“எரும மாடு அதுவா வராதுடி நீதான் இழுத்துட்டு போகனும்”
அவள் தனது ஒல்லிகுச்சி தேகத்தினால் இவன் இழுக்க முயன்றாள். அவன் சிரித்துகொண்டே பெட்டில் நன்றாக பொதிந்துகொண்டான்.
“மாமா முடியலடா…” என சிரித்தாள்.
“எனக்கு தெரியாதுப்பா நீதான் எழுப்பனும்”
“போடா கைவலிக்குது..”
“இழுடி நல்லா”
“ம்ஹூம்..” என சிணுங்கினாள்.
“மத்த நாள் மாதிரிலாம் மாமா விட்டுகுடுக்க மாட்டேன் நீதான் இழுக்கனும்”
“நீ நல்லா திண்ணுபுட்டு தடிமாடு மாதிரி இருக்கடா”
“லூசு கழுத! கல்யானத்துக்கு முன்னாடி ஒன்னமாதிரிதானடி இருந்தேன் நல்லா வாய்க்குருசியா சமைச்சு போட்டு நீதான இப்புடி ஆகிட்ட இப்ப யாரு கஸ்டபடுறா நீதான நல்லாபடு” என அவளது கையினை இழுத்தான். அவளோ தெம்பில்லாமல் அவன் மீது வந்து விழுந்தாள்.
அவள் தலையிலிருந்த துண்டு அவிழ்ந்து கேசமது அவனது கன்னதினை வருடியது.
“ஏய் என்னடி சீகைக்காயா?”
“ம்ம்”
“அதுதான் என் மனைவியுன் கூந்தல் ரகசியாமாடி”
“ம்ம்”
“சரிடி காஃபி…” என கிசுகிசு வென கேட்டான்.
“இன்னைக்கு உனக்கு காஃபி கட்” அவளும் அஸ்கிகுரலில் கூற
“ஐயோ ஏன்டி! நான் பாவமில்லையா”
“நைட்டு புல்மீல்ஸ் ஓகேவா” அவள் மிக மெதுவாக கூறினாள்.
“அதெல்லாம் அப்போ அக்ரிமென்ட்ல இருக்கு! இப்ப காஃபி வேணுமே”
“முடியாது போடா” என எழுந்திரிக்க முயன்றாள். ஆனால் அவன் கையோ அவளை பற்றிகொண்டு இருக்க அவளால் முடியவில்லை.
“விடுடா” நெஞ்சில் குத்தினாள்.
“முடியாதுடி! மாமாவ எழுப்ப சொன்னா அதுமுடியல சரி நீயாவது எந்திரிச்சு போ பாக்கலாம்”
“ம்ஹூம்! ம்ஹூம் விடு மாமா” சிணுங்கிவிட்டு “எங்க அம்மா ஏன்தான் உனக்கு என்ன கட்டிவச்சுச்சோ பாடா படுத்துறியே”
“ஆமா என் செல்ல ராட்சசிய பாடா படுத்துவேன் உனக்கு என்னடி”
“அந்த ராட்சசி நான்தான”
“வேற யாருடி தங்கம் நீயேதான்” என கன்னதினை கிள்ளினான்.
“உன் தங்கம் ரொம்ப கோவமா இருக்கா”
“என் தங்கத்துக்கு என்னடி கோவம்” கன்னதில் முத்தமிட்டான்.
“இதுகெல்லாம் மாமாக்கு குறைச்சல் இல்ல!”
“வேற என்ன செல்லம் கோவம் சொல்லு மாமா மேல”
“போனவாரம் நான் அம்மாவீட்டுக்கு போனதுக்கு அப்புறம் குடிச்சீல பிரண்டுகூட சேந்துகிட்டு”
“ஐயோ சத்தியமா இல்லடி உன் கன்னத்து மேல சத்தியம்” என மீண்டும் முத்தம் கொடுத்தான். அவள் துடைத்துவிட்டு “பொய் சொல்லாதடா! மாடில நான் சுத்தம் பன்னும் போது பாத்தேன் பாட்டில் கிடந்துச்சு ரெண்டு பியர் பாட்டில் ஒரு காலி பாட்டில் எனக்கு தெரியகூடாதுன்னு அந்த மாடில ராக்ல ஒழிச்சு வச்சுருக்க”
‘ஐயோ கண்டுபிடிச்சுட்டாளே’
“தங்கம் மாமா உன்மேல சத்தியம் பன்னிருக்கேன்டா அப்புறம் எப்டி குடிப்பேன்”
“மாமா நான் உன்ன குடிக்க வேணாம்னு என்னைகாவது சொன்னேனா! உனக்கு லிமிட் தெரியும் மாமா ஆனா என்கிட்டசொல்லிட்டு எந்த தப்புனாலும் பன்னு சரியா! என்கிட்ட சொல்ல முடியாத அளவுக்கு ஒரு தப்பு இருக்குனா அத பன்னாதடா” சோகமான முகத்துடன் கூறினாள்.
“சாரமா குட்டி”
“ம்ம் விடுடா மாமா”
“செல்லம் சிரிக்க நான் என்ன பன்னனும்”
“ஒன்னும் வேணாம் போ”
“அப்ப எதாவது பன்னனுமே” என இடுப்பில் கூச்சமூட்டினான் அவளோ “ஏய் லூசு கூசுதுடா விடு ஆவ்வ்வ்…” என கத்தினாள்.
“ஐ சிரிச்சுட்டா”
“போடா நான் சிரிக்கல இப்டிலாம் சிரிக்க வச்சா அது கண்க்குல கிடையாது”
“சரி வேற எப்டி சிரிக்க வைக்கனும்”
“அத நீதான் கண்டுபிடிக்கனும்”
“கண்டுபிடிக்குறேன்”
“மாமா நான் ஒரு தப்பு பன்னிருகேன்டா” என மெதுவான குரலில் ஆரம்பித்தாள்.
“என் பொண்டாட்டி கண்டிப்பா தப்பு பன்ன மாட்டா எனக்கு தெரியும்”
“உன் பொண்டாட்டி ஆகுறதுக்கு முன்னாடிடா”
“ஐயோ அப்ப கண்டிப்பா கேக்கனுமே என்ன சொல்லுங்க தங்கம்”
“இல்ல காலேஜ்ல படிக்கும் போது நானும் என் பிரண்ட்ஸும் சேந்து ஒருவாட்டி…”
“ஒருவாட்டி…?”
“ஒருவாட்டி டூர் போயிருந்தோமே”
“சரி போயிருந்தீங்க….”
“அப்ப..”
“அப்ப?...”
“அது…”
“பீர் குடிச்சுருக்கீங்க அதுதான தங்கம்” அவன் முடித்துவிட்டான்.
அவள் அதிர்ந்து போய் அவனை பார்க்க
“லூசு உங்க வீட்டுல எல்லாருக்கும் தெரியும்டி ஒருவாட்டிதான குடிச்ச அதுவும் டெஸ்ட் பன்றதுக்கு”
“ம்ம் ஆமா அவங்களுக்கு எப்புடி தெரியும்”
“அதான் கத்திரிக்காய்க்கு கைகால் முழச்ச மாதிரி எனக்கு ஒரு கொழுந்தியா இருக்கே அதான் உன்தங்கச்சி ஸ்வேதா”
“அடி பாவி அவளா சொன்னா!”
“சொல்லல தங்கம் போட்டோவ எடுத்து காட்டிட்டா”
“ஐயோ அம்மா என்ன நினைச்சிருப்பாங்க”
“அவங்க ஒன்னும் நினைக்கல தங்கம் என்கிட்ட எல்லாம் சொன்னாங்க! உன் இன்னசன்ட் ஆன குணம் எனக்கு பிடிச்சிருக்கு அப்புறம் மாடில ஒருபாட்டில்தான் காலியா இருந்துச்சு இன்னொரு பாட்டில் உனக்குதான் வாங்குனேன்! அதுல ஆச்சரியமா உனக்குனு வாங்குனது நல்ல கூலிங்கா தந்தான்” என கன்னதினை கிள்ளினான்.
“போடா சீ கருமம் அத போயி எப்புடிதான் குடிக்குறியோ” என எழுந்து ஓட
“சரிடி இனி குடிக்கல ஒரு காஃபி குடு” என கத்துவது காதில் கேட்டாலும் அதற்குள் சமையலறையில் ஒழிந்துகொணாடள். ரகு சிரித்துகொண்டே பிரஸினை எடுத்து பல்லை துலக்கவிட்டு வெளியே வந்தான்.
“லூசு மாமா இந்தாடா காஃபி” என நீட்ட அவளை பார்த்துவிட்டு
“சக்கரைலாம் கரெக்டா போட்டீல?”
“போட்டாச்சு போட்டாச்சு”
“எனக்கு நம்பிக்கை இல்ல கொஞ்சம் டேஸ்ட் பன்னி செக் பன்னிட்டு சொல்லுடி” என நீட்டினான்.
“போடா எனக்குவேலை இருக்கு”
“செக் பன்னுடி”
“என்ன சினிமால வர்ரமாதிரி ட்ரை பன்றியா”
“ஆமாடி உன்னலாம் வச்சுகிட்டு ரொமான்ஸ் எதிர் பாத்தேன்ல அதுதான் செல்லம் தப்பு” என அவளது கண்ணை பார்த்துவிட்டு “இதுக்குதான் அரேஞஜ் மேரேஜ் பன்னகூடாது போல” என அவளது நெற்றியிலிருந்த ஒற்றை முடியை எடுத்துவிட்டான்.
“அப்ப என்ன லவ் பன்னுடா மாமா”
“லவ்தானடி பன்னிகிட்டு இருக்கேன்”
“ஏய் இப்பதான்டா குளிச்சேன்”
“ப்ளீஸ்டி ஒரு காஃபி குடு” இந்தாடா என அவள் நீட்ட அந்த காஃபி கப்பில் அவனது மார்பில் பட அவளை நோக்கி முன்னேற அவளோ பின்னால் சென்றாள்.
பின்னாலிருந்த சுவர் அவளை நிறுத்த அவன் மேலும் முன்னேறினான். இருவருக்கும் இடையில் அந்த கப் வந்து நிற்க “கொட்டிடும்டா மாமா வேணாம்” சினுங்கினாள்.
அதை வாங்கிவிட்டு அருகிலிருந்த மேஜையில் வைத்துவிட்டு இதழோடு இதழ் பதித்தான்.
“ம்ம் சர்கரை கரெக்டா இருக்குடி” என அவன் கூறிவிட்டு கப்பினை எடுக்க போக சுவரில் சாய்ந்து நின்றிருந்த அவளோ வேகமாக வந்து அவனை கட்டிஅனைத்துகொண்டு கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டாள்.
“என்னடி கோயிலுக்கு போகலியா”
“இன்னைக்கு லீவு…” என கிசுகிசுவென அவள் கூற நான் அங்க இருந்து கிளம்பிடேன்.
நீங்களும் கிளம்பிடுங்கப்பா போலீஸ் கேஸ் ஆகிடும் டாடா பாய்!!
-ஜெனி.

1 comment:

தொகுப்பு...