Followers

சிறுகதைகள்

[சிறுகதை][twocolumns]

கவிதாயினி

[கவிதாயினி][twocolumns]

ஸ்நாக்ஸ் டைம்

[ஸ்நாக்ஸ் டைம்][bleft]

ஜெனிபர்

[ஜெனிபர்][twocolumns]

ப்ரீத்தா

[ப்ரீத்தா][twocolumns]

தங்கக்கடல் 3




“டேய் அதுல இருந்து ஒரு பெட்டியாவது தூக்கிட்டு வந்துருக்கலாம் நீ எங்க சொல்றத கேக்குற?”
“சொடல அந்த மார்க்க குறிச்சு வச்சுகிட்டீல பின்ன என்னடா அது எப்போ இருந்தாலும் நம்மலோட சொத்து சரியா மொத்தமா பேத்து எடுத்துட்டு வந்து நிம்மதியா வாழலாம்”
“தெனமும் அடுப்பு எரியுறதுக்கே நாம கடல்ல கருக வேண்டியிருக்கு இந்த லட்சனத்துல ஒரு பத்துகிலோ தங்கமாவது எடுத்துட்டு வந்து கொஞ்சமாவது வாழ்ந்துருக்கலாம்லடா”
“டேய் மத்தவன்லாம் மீனுக்கு வலைய போட்டு சாவான்டா நாம தினம் போயி தங்கமா அல்ல போறோம்டா”
“சொல்றதுக்கு எல்லாம் நல்லாதான் இருக்கு எவனும் இது கவர்மென்ட் சொத்து அப்டின்னு வந்து நிக்க போறான்டா”
“எவன் வருவான் நினைக்குற எவனுக்கும் தெரியாதுடா நாம பாத்தது.. நம்மலோட ஜபிஎஸ்தான்டா இப்போ நம்மலோட சொத்து” என சொடலையின் கையிலிருந்த அந்த ஜிபிஎஸ் மிஸினை வாங்கினான்
“சரி அந்த கப்பல மொத்தமா தூக்ககுறதுக்ககு எப்புடியும் நம்ம போட் மாதிரி பத்து போட் வேணும்டா”
“அதான் நானும் யோசிக்குறேன் என்ன பன்றதுன்னு..”
“நம்ம ஊரு காரனுவள கேட்டா அம்புட்டுதான் மொத்தமும் கவர்மென்டுக்குதான்”
“சரிடா சொடல அந்த தங்க கப்பல் எப்புடி இங்க  வந்துருக்கும்னு நினைக்குற?”
“தெரியல அந்த காலத்துலதான் கப்பல் நிறைய தங்கத்த ஏத்திகிட்டு இங்கிலாந்துக்கு கடத்திகிட்டு இருந்தானுங்கள்ள அதுல எதுனா ஒரு கப்பல் தாந்துருக்கும்”
“சரிதான்டா ஆனா அந்த வாரிசு எவனும் வராம இருந்தா சரி”
“சார் நீங்கதான் மாடனா?” நல்ல வெண்மையாக சட்டை அணிந்துகொண்டு கருப்பு பேண்ட் அணிந்துகொண்டு ஒருவன் நின்றிருக்க பின்னாலிருந்த ஒரு வெள்ளைகாரன் பேந்த பேந்த விழித்துகொண்டிருந்தான்.
“ஆமா.. நீங்க???”  மாடன் சந்தேகமாக பார்த்தான். கூடவே அந்த ஜீபிஎஸ்ஷினை பாதுகாப்பாக மறைத்து வைத்துகொண்டான்.
“இவரு ஸ்டீவ் இவரோட இந்தியா பீ.ஏ நான் இங்க வெள்ளைகாரனுக வாழ்ந்தப்போ இவரோட தங்கத்த கப்பல்ல ஏத்திகிட்டு போனப்போ கப்பல் தெரியாம முங்கிடுச்சு அதான் அத நீங்க கண்டுபிடிச்சதா கேள்விபட்டோம்”
மாடன் சொடலையினை பார்த்து முறைத்தான்.
“என்ன ஏன்பா பாக்குற நான் உன்கூடதான இருக்கேன் நம்ம போட்டுல இருந்து பெருசுக்கு அப்புடியே அய்யா சந்தோஷமாகி காச அள்ளி வீசுனீங்க அது குடிச்சுபுட்டு கடதெருல உளறிகிட்டு திரிஞ்சுருக்கும்”


“ம்ம் அவரு கத்த போயிதான் எங்க வேலை ஈசியா முடிஞ்சுருச்சு”
“அந்த பெருச இனி போட்ல ஏத்து உனக்கு அடி இருக்கு”
“டேய் இனி எதுக்குடா இந்த கடல்தொழில்” காதில் கிசுகிசுத்தான் சொடலை..
“சரி அது ஏன் எங்க்கிட்ட சொல்றீங்க”
“இல்ல நீங்க பாத்த அந்த கப்பல்தான் கன்டிப்பா இவரோட கப்பலா இருக்கும் அதனால அது எங்க இருகுன்னு சொன்னீங்கனா கொஞ்சம் நல்லா இருக்கும்”
“ஆங்ங்ங.. வாயா வா… நாங்க வலையை போட்டு புதையல எடுப்போமாம் இவரு நோகாம வந்து அது எம்புட்டு புதையல்னு வாங்கிடுபோவாராம் நல்லா இருக்குயா உங்க நாட்டாமை தனம்.. கஷ்டபடுற எங்களாமாதிரி மக்கள காப்பாத்த கடவுள் இந்த மாதிரி எதாவது பன்னுவான் நீங்க அதையும் புடுங்கிகிட வந்துட்டீங்களா…”
“மாரன்… ஷிப் தூக்குற செலவு என்னோடது… நீ லொகேசன் இன்பார்ம் பன்னு ஆளுக்கு பிப்டி பிப்டி”
“என்ன சொல்றாரு?”
“நீ எடத்த சொன்னா மட்டும் போதுமாம்.. கப்பல வச்சு தூக்குறது அவரு பொறுப்பாம் அதுமில்லாம உனக்கு பாதி அவருக்கு பாதியாம்.. நீ அந்த தங்கத்த இங்க மாத்துறது கஷ்டம் கவர்மென்ட்ல இருந்து இந்த பணம் எப்புடி வந்துச்சு அப்டின்னு கேள்வி கேபானுக இவரு தயவு இருந்துச்சுனா அத பணமா மாத்தி உன்கிட்டயே குடுத்துடுவாரு”
அருகில் நின்ற சொடலை கிசுகிசுத்தான் “டேய் நேத்துவரை கஞ்சிக்கு ஊறுகாய் தொட்டுகிட்டு திரிஞ்சவங்கடா நம்ம இப்போ பாரு அந்த கப்பல் கன்டிப்பா நாம தூக்க முடியாது ஆண்டவனா பாத்து அத தூக்கவும் அதுல்ல பாதிக்கு பாதி பங்குக்கும் ஆளு அனுப்பிருக்கான்டா நீ ஒத்துகோ.. நாம தூக்குறதுகுள்ளு நம்மலோட பேர புள்ளைங்க பொறந்து வந்துடுவானுகடா”
மாடன் தனியாக சென்று சிறிது நேரம் யோசித்தான். ‘என்ன இருந்தாலும் நாம இழுக்கனும்னா பெரிய அளவுல கப்பல் வேணும் வெள்ளை காரன்னா அழகா தட்டிட்டு போயிடுவான் எல்லாம் சரிதான் ஆனா அவன் சொன்ன மாதிரி பாதி பங்க தரலைனா?..ம்ம்ம் என்ன பன்றது.. சரி அவன் கப்பல கரைக்கு கொண்டு வரட்டும் அவன போட்டு தள்ளிட்டு நாம மொத்தமா எடுத்துகிட வேண்டியதுதான். இந்த சொடலை பையன் நீதி நேர்மைனு பேசுனா அவனையும் போட்டுட வேண்டியுதுதான்’ மனதில் ஓடவிட்டு.
“சரிங்க நான் டீலுக்கு ஓகே தொரைக்கு ஓகேவா?”
“ம்ம் டபுள் ஓகே..” என கூற அடுத்த நாள் மாடனின் கப்பலில் ஏறிகொண்டு அந்த இடத்திற்கு சென்றனர்.
“தெர இதுதான் எடம் பல அடி கீழ கிடக்கு எடுக்குறதுகுள்ளு நாக்கு தள்ளிடும்”
“ஷேல் வீ கன்பார் பை ஸ்விம்மிங் இன்சைட்”
“என்ன பேசுறீங்க”
“இல்ல கடலுகுள்ள போயி அங்க நீ சொன்ன மாதிரி கப்பல் இருக்கான்னு பாத்து கன்பார்ம் பன்னனும்மாம்”
“இதுதான்யா வெள்ளைகாரன் புத்தி சரி வா போவலாம்..” என ஆக்ஸிஜன் சிலின்டரினை மாட்டினர். அங்கு இரண்டு சிலின்டர்களே இருக்க அந்த வெள்ளை காரனும் அவனுக்கு வழிகாட்ட மாடனும் உள்ளே குதித்தனர்.
அந்த பீ.ஏ ஸ்டீவ்க்கு உடையினை மாட்டிவிட்டுகொண்டே “சார் கப்பல பாத்ததும் அவன போட்டுடுங்க இல்லைனா நமக்குதான் பின்னாடி பெரிய பிரட்சனை நான் இங்க இந்த பையல போட்டுடுறேன்” என கப்பலினை ஓட்டிகொண்டிருந்த சொடலையினை பார்த்து கூறினான்.
“யா டன்” என கையினை காட்ட இருவரும் தண்ணீரில் குதித்தனர்.தண்ணீர் கலங்கி சிறிது நேரம் இருக்கும் அடுப்பில் மீனை வறுத்துகொண்டிருந்தான் சொடலை.
“சாரே மீன் சாப்புடுறியா?”
“வேணாம்”
“காது ஜவ்வ கிளிக்குற மாதிரி குளிருது இதமா மீன் சாப்புட்டாதான் உயிரோட வீட்டுக்கு போவ முடியும் போல”
“உயிரோட யாரு போகனும்”
“நாம எல்லாரும்தான்”
ஹா ஹா நாம இல்ல ராஜா நாங்க


“என்ன?” என கூறும்போது அவன் முன் ஒரு துப்பாக்கியினை நீட்டியிருந்தான்.
“சார் என்ன விளையாடுறீங்க..தீபாவளிலாம் முடிஞ்சுடுச்சு” சிரித்தான் சொடலை.
“டேய் விளையாடுறேனா” என டம் டம் டம் என அந்த மரபலகையில் சுட்டுகாட்டினான்.
“சார் வேணாம்” என துப்பாக்கியின் அருகில் பாய்ந்து அதை பிடித்தான் சொடலை.
“சாரே நாம லொகேஷனுக்கு வந்துட்டோம் பாத்துகோ”
அந்த வெள்ளாகாரன் அந்த பிரம்மான்ட கப்பலினை பார்த்து ஒருநிமிடம் உறைந்துபோய் நின்றான்.
“வாட்ட ப்யூட்டிபுல் ஷிப் ஐ மிஸ்யு ஃபீனிக்ஸ் பேர்ட்” என கப்பலுக்கு முத்தம் கொடுத்தான்.
“என்னடா லூசாகிட்டானா?”
சுற்றிலும் இருட்டு வேற மாடனின் கையிலிருந்த அந்த சிறிய விளக்குதான் வெளிச்சம் கொடுத்துக்கொண்டிருந்தது.  அந்த நொடி அந்த வெள்ளைகாரன் தன் நீச்சல் உடையினை கழற்ற “யோவ் செத்து போயிடுவீய்யா அத ஏன் கழத்துற?” மாடன் புலம்பிகொண்டிருக்க கேட்காம் கழற்றினான் ஆனால் அவனுக்கு எதும் ஆகவில்லை. பதறிபோன மாடனுக்கு இதயதுடிப்பு அதிகமானது.
 அந்த ஸ்டீவோ கண்டுகொள்ளாமல் கப்பலை நோக்கி மிதந்து சென்றான் ஒரு பிணம் போல..
“யோவ் எங்கயா போற?” என கூற கூற அந்த வெள்ளைகாரன் அந்த கப்பலின் திசை திருப்பியினை போய் தொட்டான்.
பின்னால் இருந்த அந்த பெரிய மீனிடமிருந்து உறுமல் சத்தம் கேட்டது.
அதற்குள் அந்த கப்பலில் விளக்குகள் வண்ணமயமாக எரிய துவங்கின. என்ன ஆச்சரியம் என்றால் அந்த விளக்குகள் எல்லாம் நெருப்பில் எரிபவை..
“என்ன இது தண்ணிக்கு அடில நெருப்பு எரியுது”
“கேப்டன் கேப்டன் வந்துட்டீங்களா… “ என ஒரு ஆரவாரம் கேட்க அங்கிருந்த ஒரு ரூமிலிருது அரைகுறையாக அழுகிபோன பிணங்கள் இந்த வெள்ளை காரனை நோக்கி வந்தன.
அவர்களின் மீது இருந்து வந்த அந்த ரத்தம் தண்ணீரில் மிதந்து மடனை வந்து சேர்ந்தன. அவனை சுற்றி சிவப்பாக மாறியது.
“என்ன கேப்டன் உங்க ஒயிப் என்ன சொன்னாங்க”
“நாம செத்தப்போ தூக்கு போட்டுகிட்டவதான்பா இடுகாட்டுல ஒரே கல்லறைலதான் தூங்கிகிட்டு இருந்தோம்.. இருந்தாலும் அவ பாவம்தான் வயித்துல கொழந்தைய வச்சுட்டு இருந்தப்போ நான் விட்டுட்டு வந்தேன் அப்போ கோவிச்சுகிட்டு போனா ஆனா அவளுக்கு என் மேல லவ் கொறையலப்பா நான் செத்துட்டேன்னு தெரிஞ்சு கொழந்தையோட செத்துபோயிட்டா.. அதான் இப்பயும் என்ன இங்க விட அவ தயாரா இல்ல.. கோவிச்சுகிட்டு போயிட்டா” என அந்த ஸ்டீவ் ஃபீனிக்ஸ் ஷிப் கேப்டன் கூறிகொண்டிருக்க அவனுக்காக அந்த கல்லறையின் மீது அமர்ந்து காத்திருந்தாள் அவளது மனைவி….
“சரி இது யாரு பொடியன்”
“அட நம்ம கப்பல சுக்கு சுக்கா ஆக்கி நாம சாகுறதுகெல்லாம் காரணமா இருந்தானே அவன்தான் பாண்டியவீரன்”
“என்னது இதுங்க பொணமா?” மாடனுக்குகையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. வேகமாக நீந்தி தப்பிக்க பார்த்தான்.


“இப்போ சுடுங்க அவன” என கூறியதும் ஒரு பீரங்கியிலிருந்து வந்த குண்டு மாடனின் உடலினை சுக்கு சுக்காக பிளந்து எரிந்தது.
“பெடியன் ரொம்பதான் துள்ளுறான்” என மேலே கப்பலில் இருந்த அந்த பீ.ஏ சொடலையின் குண்டுபதிந்த பிணத்தினை தண்ணீரில் மீனுக்கு இரையாக தள்ளினான்.
கீழே “சேய்லர்ஸ் போலாமா??”
“எஸ் கேப்டன்” என கப்பல் நிமிர்ந்து நின்றது. அப்போது பட்டென அந்த மீன் கண்ணை விழித்து அந்த கப்பலினை மொத்தமாக விழுங்கியது..அந்த கப்பலில் இருந்த வீரர் பிணங்களின் ஆத்மா மறுபடியும் மீனுக்கு இரையானது.
“எங்க தொரைய இன்னும் காணோம்?” மேலே இருந்து சொடலை சுட்ட மீனை பார்த்துகொண்டிருந்தான். அப்படியே ஒருவாய் எடுத்து வைக்க அந்த போட்டின் முன் பகுதியில் ஒரு உருவன் தென்பட்டது.
“சார் வந்துட்டீங்களா”
எந்தவித சத்தமும் இல்லாமல் நிலவொளியினை பார்த்துகொண்டு அது நிற்க அருகில் சென்று பார்த்தான் அது ஒரு பெண்.
“ஒரு பொண்ணு எப்புடி கடல்குள்ள?” என நினைத்துகொண்டான். ஒருவேளை கடல் கன்னியா இருக்குமோ”
“எதுவா இருந்தா என்ன சார் வர்ர வரைக்கும் வேட்டைதான்”
“என்னமா கண்ணு” என அவள் தோளில் கைவைத்தான்.
அவள் திரும்பியவுடன் அவனது வயிற்றில் ஒரு கத்தி இறங்கி இருந்தது.
வாயில ரத்தம் வர அவளை பார்த்தான்.
“வேர் இஸ் மை ஹஸ்பென்ட் நீதான் அவருகுக ஆசைய காட்டி ஒவ்வொரு தடவையும் என்கூட சேரவிடாம பன்ற…”
“நானா?”
அவன் தலையில் தன் ஒரு கையினை வைத்தாள். இன்னொரு கை அந்த கத்தியினை ஆழமாக செலுத்திகொண்டே இருந்தது.
“கேப்டன் இந்த நேரத்துல நாம்போனாதான் தங்கத்த திருடிகிட்டு வந்து சேர முடியும்”
“நாம் நம்ம சொந்தங்கள விட்டுட்டு கன்டிப்பா போகனுமா?”
“ஒரு கப்பலோட கேப்டன் மாதிரி பேசுங்க சார்.. நாம் போறோம் அப்போதான் நம்மலோட பரம்பரையே நிம்மதியா வாழ முடியும் புரிஞ்சதா இப்போ போனாதான் நாம வரியில்லாம திரும்பி வர முடியும்”
“அப்டியே பன்னிடலாம்” என போன ஜென்மத்தில் நடந்தவற்றை அவனுக்கு மனதில் ஓட்டிகாட்டினாள்.. அவள் கண்ணீருடன் கரையில் நின்று அவனை வழியனுப்பி வைத்த காட்சிகளும் ஓடின.
“என்ன மன்னிச்சுடு” அவன் வாயிலிருந்து குரல் கேட்க அவளும் அவளது கத்தியும் காற்றில் கரைந்து சென்றது. தூரத்தில் அந்த கப்பலில் இருந்த அனைத்து ஆன்மாக்களும் வெள்ளை வெள்ளையாக தண்ணீர் மேல் பறந்து நிலவினை நோக்கி செல்வது தெரிய கீழே பார்த்தான். கத்திதான் இல்லை ஆனால் அது அவனு குத்திய அந்த காயம் அப்படியே இருந்தது. அவன் உடலில் இருந்தும் வெள்ளையாக ஒரு உருவம் பிரிந்து நிலவினை நோக்கி செல்ல அவன் உடல் கடலில் சரிந்து விழுந்தது.
மேலிருந்த கப்பல் சுக்கு சுக்காக நொருங்கி அந்த தங்ககப்பலின் மீது தூசியாக விழுந்தது….
அடுத்த முறையும் இதே நாடகத்தினை அரங்கேற்ற……. இந்த முறை மாடன்.... அடுத்த முறை… யாரோ….

-முற்றும்.


No comments:

தொகுப்பு...