for all part clikungooo
அவனை
கண்கள் தேடின ‘என்ன இவன்
எப்பயும் வந்து வந்து நிப்பான்
இன்னைக்கு இன்னுமும் காணோம்” என ஷாலினியின்
மனது தவித்துகொண்டிருந்தது.
ஆம்
ஒருவன் தினமும் தன்னை சைட்
அடிக்க காலங்காத்தலயே வந்த காத்திருக்கும் போது
முதலில் ஒரு பயம் தோன்றினாலும்
அவன் தினமும் அவளுக்காகவே வரும்போது
அவன் மீது சிறிது காதல்
பூக்கதான் துவங்கயது. அழகான ஒரு பைக்
நிதானமாக ஓட்டுகிறான். உடை நேர்த்தியில் எள்ளவும்
தவறியதில்லை. மூன்று மாதங்களாக ஷாலினியை
பார்க்க வந்துகொண்டிருக்கிறான் ஆனால் ஒரு வார்த்தைகூட
பேசியதில்லை. கண்களால் பேசும் போது வார்த்தைகள்
ஏன் வேண்டும்.
அவன்
வந்து நின்றவுடன் ஓரகண்ணால் அவனை பார்ப்பதற்காக அந்த
ஒற்றை முடியை எடுத்து காதில்
சொருகும்போது தனி அழகுதான் ஷாலினிக்கு
ஆனாலும் அவன் கவனித்தானோ தெரியாது.
கைபேசியில்
எதையோ உற்று பார்த்துகொண்டு அனாயசமாக
அந்த பைக்கில் சாய்ந்திருப்பான். தன் கண்களை மேல்நோக்கி
ஒருநொடி பாயவிடுவான். அந்த கனம்தான் அவளும்
ஒற்றைமுடியை சரிசெய்த நேரமதில் விழிகள் சந்திக்க சட்டென்
மனதினை பறிகொடுத்துவிட்டாள்.
இன்று
பிறந்தநாள்வேறு! எப்போதும் பிறந்தநாளை விரும்பாதவள் தன்னவனுக்காக (ஆம் மனதில் வந்துவிட்டான்
அல்லவா தன்னவன்தான்) புது ஆடைகள் போட்டு
அழகாக சிங்காரித்து வந்திருக்கிறாள். அவன் இவளுக்கு எவ்வளவு
அழகாகா தெரிகிறானோ அதே அளவுக்கு அவளும்
அழகாக தெரியவேண்டும் அல்லவா அதுதான் ஷாலினியின்
மனது.
ஆனால்
பாவி இன்னும் வரவில்லை. மாலையில்
புது துணி கசங்கிவிட்டாள் தலையில்
இருக்கும் ரோஜாதான் வாடாமல் இருக்குமா! இப்படி
என்னை பார்த்தாள்தானே நன்றாக இருக்கும் மனதில்
பல எண்ணங்கள் ஓடிகொண்டிருந்தன. அவன் வரவே இல்லை.
முகத்தில் ஏமாற்றமாக அவன் வரும் வழியினை
பார்த்துகொண்டிருந்தாள் ஷாலினி.
“ஏய்
என்னடி வடக்க சூரியன் உதிக்காதுமா”
வழக்கமான நக்கலுடன் அவள் கனவு கோட்டை
களவாடினாள் தோழி திவ்யா
“ம்ம்
வாடி”
“என்ன
வாடி! உன் பிறந்தநாள் அன்னைக்கு
கொஞ்சம் சிரிச்சு சந்தோஷமா இருடி”
“ப்ச்ச்…”
“என்ன
உச்சு கொட்டுற”
“எனக்குதான்
பிறந்தநாள்..” ஷாலினி மெல்லியதாக கூற
“கொண்டாட பிடிக்காது அதுதான ஐயோ…” என
குரலில் ஒரு இழுவையாக கூறினாள்.
“ம்ம்”
“அப்புறம்
என்னடி இது புது சுடிதார்!
காதுல கம்மல் தலையில ஒரு
பூ முளைச்சுருக்கு” என கம்மலை விரலால்
ஆட்டிவிட்டாள் திவ்யா.
அவனை
பற்றி கூறினாள் தன்னை தவறாக எண்ணிவிடுவாளோ
என பயந்து “பஸ் வருதான்னு
பாருடி”
“பஸ்
இங்கிட்டு வரும் சரியா நீ
ஏன் அங்கிட்டு பாத்துகிட்டு இருக்க” அவள் கூறுவது
காதிலேயே விழாமல் எதையோ யோசித்துகொண்டிருந்தாள்.
அது அந்த நாள் நினைவுதான்
முதல் நாள்.
அன்றுதான்
அவனை முதலில் பார்த்தாள். திவ்யாவும்
ஷாலினியும் பேசிகொண்டே வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தனர். மாலைவகுப்பு வேற
நிலாமகள் வந்து காத்துகொண்டிருந்தாள் தனது தருனத்திற்காக
சூரியன் ஓவர் டியூட்டி பார்த்து
களைத்து தூங்க சென்ற நேரம்.
“அந்த
பிரபஸர் எல்லாதையும் ஒரே நாள்ள நடத்துறான்டி
சொட்ட” திவ்யா வஞ்சனை இல்லாமல்
யாரையும் திட்டிவிடுவாள். ஷாலினி அப்படி அல்ல
எல்லாம் மனதளவில் கூட எதிர்த்து பேச
மாட்டாள். “ஏய் அப்புடிலாம் பேசாதப்பா
அவரு நம்ம நல்லதுக்குதான் பன்றாரு”
“வந்துட்டா
வக்காலத்து வாங்க ஷாலு நீ
எப்பதான் திருந்த போற”
அந்த
நேரம் அவர்கள் அந்த சுரங்க
பாலத்தின் அடியில் சென்றுகொண்டிருக்க ஒருவன்
பட்டென் வந்து ஷாலினியின் கையினை
பிடித்துகொண்டான். ஷாலினி பதறிபோய் “விடுங்க”
என சினுங்கினாள்.
“1000 ரூபாய்!!”
என அவன் கூற “டேய்
எங்கள பாத்தா அப்புடியா தெரியுது
விடுடா அவள”
“பின்ன
என்னடி ராத்திரில ஊர சுத்திகிட்டு இருக்கீங்க
யாருகூட இருந்துட்டு வர்ரீங்க! வேணும்னா நூறு சேத்து தாரேன்”
“டேய்
விடுடா அவள”
“ப்ளீஸ்
சார் விடுங்க” என ஷாலினிகெஞ்சும் குரலில்.
“என்னடி
சீன் போடுறீங்க” என கத்தியை எடுத்தான்.
அவ்வளவுதான் ஷாலினியின் இதயதுடிப்பு அதிகமானது. “உன்ன கொல்லமாட்டேன் செல்லம்
இவ தான் ஒவரா பேசுறா
இவ கழுத்துல ஒரு கோடு போட்டா
எப்புடி இருக்கும்” என திவ்யாவை நோக்கி
கத்தியை காட்டியவன் ஷாலினியை தன் பக்கமாக இழுத்துகொண்டான்.
“இப்ப
ஒத்துகிறியா செல்லம்” என ஷாலினியின் காதருகே
கிசுகிசுத்தான்.
கன்டிப்பாக
அவள் ஒத்திருநதிருப்பாள் தன் தோழியின் உயிர்
முக்கியமல்லவா! அவள் பயந்த குரலில்”ம்ம்” என கூறவதற்குள்
“என்ன இது காய்கறி வெட்டுற
கத்திலாம் வச்சுகிட்டு” என ஒருவன் பின்னால்
வந்து அந்த கத்தியை பிடுங்கினான்.
“டேய்
நீ யார்டா”
“இப்ப
தெரிஞ்சு என்ன ஆதார் கார்டா
குடுக்க போற?”
“மரியாதையா
போயிடு இவங்க இன்னைக்ககு எனக்கு
வேணும்! நாளைக்கு நீ எடுத்துகோ”
லேசாக
சிரித்துவிட்டு “அவங்கள எடுத்துகிறதுக்கு அவங்க
என்ன திங்குற பொருளாடா”
“மரியாதையா
போயிடு”
“பரவாயில்ல
கத்தி ஷார்ப்பபாதான் இருக்கு” என கையில் சுரண்டி
பார்த்தான்.
“ஏய்
ஏய் போயிடு கிட்ட வராத”
என அவன் நடுங்க “ஓ
கத்தி என்கிட்ட தான இருக்கு! அவங்க
மேல இருந்து கைய எடு”
அவன்
“டேய் என்ன பத்தி தெரியாது
உனக்கு” என கையை நீட்டிபேசும்
பேசவும் இவன் கையிலிருந்து கத்தியால்
அவனது மேல்தோலை கிழித்தான். “ஆ அம்மா!” என
அவன் ஓட “ஆமாடா அவங்க்கிட்ட
போயி இங்க நடந்தத சொல்லு”
என கூறிவிட்டு அந்த கத்தியை ஓரமாக
தூக்கிபோட்டான்.
இரண்டு
பெண்களையும் முறைத்து பார்த்துவிட்டு வேகமாக வெளியே நடந்து
சென்றுவிட்டான். அந்த பார்வையில் ஒரு
கன்டிப்பு தெரிந்தது. அன்றிலிருந்து தினமும் அவன் பைக்கை
எடுத்துகொண்டு காலையில் பேருந்து நிறுத்ததிற்கு வந்துவிடுவான். ஒருவேலை அந்த சுரங்க
மனிதன் வந்துவிடாமல் பாதுக்காக்க வருகிறேன் போல
அப்படிதான்
ஷாலினி நினைத்துகொண்டிருந்தாள் ஆனால் அவளை அறியாமலேயே
அவன் மீது காதல் கொண்டுவிட்டாள்.
ஆனால் போய் கூறுவதற்கு ஒரு
தயக்கம். பெண்ணாக எப்படி கூற
முடியும்.
“என்னடி
உன் முழியே சரியில்லையே! யார
பாக்குற நீ” எனதிவ்யா கண்டுபிடித்துவிட்டாள்.
“இல்லையே
யாரும் இல்லையே! நான் யார பாக்க
போறேன்! சும்மா திரும்புனேன்” என
பலவிதமாக சமாளிக்க திவ்யாவிற்கு சந்தேகம் எழுந்துகொண்டது.
“ஆமா
இங்க ஒரு தடிமாடு தினமும்
வந்துநிக்குமே இன்னைக்கு வரலியா”
“யாரு”
தெரியாது போல கேட்டாள்.
“அதான்டி!
அன்னைக்கு நம்மல டனல்ல காப்பாத்துச்சே”
“அவரா
அவருக்கு நன்றி சொல்லனும்டி”
“அதான்
உன் நன்றிய வாங்கதான் டெய்லி
வாரான் போல! அந்த பொறுக்கிகிட்ட
இருந்து காப்பாத்திட்டு தினமும் ஃபாலோ பன்றான்
பொறுக்கி” என சாடினாள்.
“ஏய்
ஏன்பா! அவரு ரொம்ப நல்லவருப்பா”
“ஆமா
ஆமா” ரொம்ம்ம்ம்ப நல்லவருதான்! சும்மா இருடி” என
கோவமாக மாறினாள் திவ்யா.
“சரிவிடுப்பா
ஏன் கோவபடுற” என ஷாலினியின் முகமும்
சுருங்கியது.
அவன்
இறுதிவரை வரவே இல்லை. ஆனால்
அந்தபேருந்த சரியான நேரத்திற்கு வரவே
ஷாலினியின் மனதினை இரண்டாக பிளந்தாற்
போலஇருந்தது. இறுக்கமான முகத்துடன் பேருந்தில் ஏறினாள். சுற்றி என்ன நடக்கிறது
என்ற கவலை எல்லாம் இல்லை.
சோகமாக அந்தகம்பியை பிடித்தொகொண்டு நின்றாள்.
கன்னதில்
அந்த கம்பியின் குளுமை பட மனதோ
ஏதோ சிந்தத்துகொண்டே வந்தது. ப்ச்ச் ஏன்டா
இன்னைக்கு வரல போடா உனக்காக
தான நான் புது டிரஸ்
வாங்கி போட்டு வந்தேன்! இது
நான் தினமும் சின்ன சின்ன
வேலை செஞ்சு சம்பாதிச்ச காசுல
வாங்குனேன்! ஒரு குட்டி ஃபோன்
வாங்க வச்சுருந்த காசுல உனக்காக சுடிதார்
வங்கி போட்டு வந்துடேன். போடா
நீதான் வரல. இனி வராத
போ.. என தன் மனதிலிருந்த
அவனுடன் சண்டை போட்டுகொண்டு வந்தாள்.
“டிக்கட்..
டிக்கட்”
“இந்தாங்கன்னே
ஒரு டிக்கட்” என ஷாலினி கூற
“உங்களுக்கு உங்க ஹஸ்பென்ட் எடுத்துடாருமா”
என அவர் நகர்ந்துவிட ‘யார்
அது?’ என திரும்பி பார்த்தாள்.
அங்கு
அந்த இளைஞனின் அருகில் திவ்யா உட்கார்ந்துகொண்டு
வந்தாள். “அன்னியாரே வாங்க அண்ணன் பக்கதுல
இடம் இருக்கு” என மூன்று பேர்
இருக்கையில் ஜன்னலோரமாக அமர்ந்துகொண்டு கூறினாள் திவ்யா!
ஷாலினி
விழிக்க “ஷாலு உன்ன காலேஜ்ல
வச்சுதான் முதல்ல பாத்துருக்கான் இந்த
பொறுக்கி! ஓ பேரு செல்ல
மறந்துடேன்ல இவரு ஜீவா! என்
சொந்த அண்ணன். குட்டியா ஒரு
கம்பெனி வச்சுருக்காரு! அப்புறம் பார்ட்டைம் ஜாப்பா ஒரு பொண்ணு
பின்னாடி சுத்திகிட்டு திரியுராரு. அவ பேரு ஷாலினி”
ஷாலினி
பேந்த பேந்த என முழிக்க
ஜீவா கையிலிருந்த ஒரு கிப்டை நீட்டி
“இந்தாங்க!ஷாலினி ஹாப்பி பர்த்டே”
அதை
வாங்காமல் தயங்கி நின்றாள். “உங்களபத்தி
எல்லாம் தெரியும் அப்பா இல்ல! அம்மாதான்!
நீங்க சின்ன சின்ன வேலை
செஞ்சு பீஸ் கட்டி படிக்குறீங்க!
அப்புறம் ஒரு பழைய மொபைல்வாங்கனும்ங்கிறது
இந்த வருச டார்கெட் பாவம்
ஒரு பொறுக்கியால நீங்க இப்ப அதுக்கு
சுடிதார் வாங்கி போடுட வந்துருக்கீங்க!
அதான் அந்த பொறுக்கி இப்ப
கிஃப்ட் பன்றான்! என்ன பிடிச்சிருந்தா வங்கிகலாம்
இல்லைனா இப்புடியே எந்திரிச்சு போயிடுறேன் இனி டிஸ்ட்ரப் பன்னல”
என எழுந்தான்.
அவள்
அவன் கைமீது கைவைத்து சத்தமே
இல்லாத குரலில் “போகாதீங்க…” என தலைகுனிந்து கொண்டாள்.
“சரிடா
நான் அம்மாகிட்ட சொல்லிடுறேன்” திவ்யா முந்தினாள்.
“ஏய்
இருடி அதுகுள்ள என்ன”
“அண்ணா
உனக்காகலாம் நான் வெயிட் பன்ன
முடியாது! எனக்கு பதிலா ஷாலுவ
நீ கொஞ்சிகோ என்ன விடு!” என
கூறிவிட்டு ஷாலினியிடம் “அன்னைக்கு ரொம்ப நேரமாச்சுனுதான் இவன
வர சொன்னேன் துனைக்கு ஆனா அப்புடி நடக்கும்னுன
நான் நினைக்கல நல்லவேல வந்து காப்பாதிட்டான்”
“…”
“அப்புறம்
வீட்டுல போயி எப்புடிலாம் திட்டுனான்
தெரியுமா ! ஏன்டி அவள அப்புடி
இருட்டுலயா கூட்டிவருவ! அதுவும் அந்த பொறுக்கிவே
அவ கைய புடிச்சிகிட்டு நிக்குறான்.
அவ மனசு எப்புடி கஸ்டபட்டுருக்கும்?!.
பாவம்டி அவ”
“உனக்கு
ஏன்டா அனுசரனை”
“அது
வந்து”
“டேய்
அண்ணா”
“அவள
நான்..”
“லவ்வா..”
“ம்ம்”
“இதுதான்டி
ஆச்சு அன்னையில இருந்து டெய்லி என்ன
மூனாவது தெருலயே இறக்கவிட்டுட்டு உன்ன
பாக்க பஸ்ஸ்டாப் வந்துடும் பக்கி” என அவன்
தலையில் தட்டினாள் திவ்யா. இப்போது லேசாக
ஷாலினி முறைப்பபது தெரிய “ஐயோ சாரி
ஷாலு இல்ல அண்ணி! இனி
உங்க புருஷன நான் அடிக்க
மாட்டேன் நீங்களே அடிச்சுகோங்க”
“அடிப்பீங்களா”
என ஜீவா கேட்க “இல்லை”
என்பது போல தலையாட்டினாள் வெட்கத்துடன்.
“அம்மா
இதுங்க செட் ஆகிடுச்சுங்க காலேஜ்
முடிஞ்சதும் (இவர்களின் வெட்கத்தினை பார்த்துவிட்டு) இல்ல இல்ல தாங்காது
அடுத்த வாரமே பேசிடுங்க என்
ஷாலு அண்ணிவீட்டுல”
-ஜெனி
(ஹேவ்
குட் டே அன்ட் நைஸ்
காஃபி பிரண்ட்ஸ்)




No comments: