“ஏன்டி உனகெல்லாம் வெட்கமே இல்லையா நல்லா காலேஜ்ல யாருகூடயாவது சுத்தவேண்டியது. அப்புறம் என்ன மாதிரி எதாவது இளிச்சவாயன் கிடைச்சா கட்டி வச்சுடவேண்டியது” என்று தன் சிவந்த கைகளை பார்த்துகொண்டிருந்தான்.
அவளோ தன் கன்னத்தில் கை வைத்துகொண்டு நின்றிருந்தால் அவளது வாயிலும் ரத்தம் வடிந்துகொண்டுருந்தது. அன்று அதை வர்ணித்து கவிதை எழுதியவன்தான். ஆனால் தன் மனைவி வேறு ஒருவனை காதலித்திருப்பது தெரிந்தால் யாருக்குதான் மனதுபொறுக்கும்.
மதன்மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன
அதிலும் இப்போது அவனுக்கு வரும் அந்த போன் கால்கள் இவனை குழப்பத்தில் ஆழ்த்தியது எனறுதான்
கூறவேண்டும்.
மதன் லதா தம்பதியினர் பெரியவர்களால்
நிச்சயிக்கபட்ட ஜோடிகள். மகிழ்வாகதான் சென்றுகொண்டிருந்தது இந்த ஒரு வருட வாழ்கை ஆனால்
இந்த சந்தேகம் ஓர் கரையான் போல அரித்து உறவுகளை கபலிகரம் செய்துவிடும்.
மதன் தன் மனைவியிடம் காலையில் சண்டையிட்டுகொண்டு
வந்திருந்தான். அதனால அலுவலகத்தில் வேலை ஓடவில்லை. அதிலும அந்த சிடுமூஞ்சி மேனேஜர் எந்த நேரத்தில் எந்த மூடில்
இருப்பான் எனபது கடவுளுக்கே தெரியாது. இன்று பார்த்து நன்றாக திட்டுவாங்கி முழு கோபத்துடன்
அமர்ந்திருந்தான்.
அவனது நினைவலைகள் அவனை துரத்தின “டேய்
மதன் உனக்கு பொண்ணு பாக்கபோறோம் நாளைக்கு” என்று சுருக்கமாக முடித்தான் அவன் அண்ணன்
சேது.
தாயுமில்லாமல் தந்தையுமில்லாமல் தன்
குடும்பத்தை இழுத்துவந்தவன் சேது. மதனும் தன் அண்ணன் பேச்சை மீறியதில்லை. ஆனால் இந்த
ஒரு விஷயம் மதனுக்கு ஏற்க முடியவில்லை.
அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று
தன் தாயை இழந்து தன் தந்தை பட்ட கஷ்டத்தையும் தன் அண்ணன் பட்ட கஷ்டத்தையும் நேரில்
பார்த்தவன். அதிலும் தன் ஜனனம்தான் தன் அன்னையின் மரனமாக அமைந்தது ஒரு துரதிஷ்டம்.
அதனால் அவன் மனதில் பிரசவத்தின் மறுசொல் இழப்பு என பதிந்துவிட்டது. அதனால் திருமனத்தை
முற்றிலும் மறுத்தான்.
இன்னொரு காரணம் அவனை சொக்க வைத்த கல்லூரி
தேவதை லதா. அவளது அழகுக்கு ஈடு இல்லை. அவளை பார்த்து வியந்துதான் போனான். ஆனாலும் தன்
மனதில் கட்டிய வைராக்கியம் அவனது காதலை சொல்லவிடாமல் தடுத்தது. ஆனாலும் அவளை தூரத்திலிருந்து
ரசித்துவந்தான் தினமும்.
கல்லூரியும் முடிய ஒரு வருடம் நல்ல
வேலையில் கழித்தான். “இன்னாரம் லதா காலேஜ் முடிச்சுருப்பாள்ள” என தன் ஜுனியர் தேவதையை
நினைத்த நேரம்தான் தன் அண்ணாவின் ஒலி கேட்டது.
“ம்ம் சரிங்க அண்ணா” வேறு எதுவும் கூற
முடியவில்லை.
ஆனால் அவனுக்கு காத்திருந்தது அந்த
அதிர்ச்சி. எதிரில் நின்றது அந்த அழகு தேவதை கையில் அந்த காஃபி டம்ளருடன். ‘இவளுக்கு
கல்லூரியில் படிக்கும்போதே நிறைய அப்லிகேசன் அதிலும் அந்த டிபார்மன்ட் வார். கல்லுரிக்கு
மூன்றுநாள் விடுமுறையே விட்டுவிட்டனர். இவளுக்கு குணா அப்புடின்னு ஒரு லவ்வர் இருக்கான்னு
என பிரண்டு சொல்லிருக்கானே’ என நினைக்கும்போதே கையில் காஃபியை வைத்தாள்.
“ஏம்மா மாப்பிள்ளைய பிடிச்சுருக்கா”
என ஒரு குரலை தொடர்ந்து அவள் “ம்ம்” என வெட்கபட்டு ஓடிவிட்டாள். மதன் மட்டும் என்ன
செய்வான் பாவம் அவள் கழுத்தில் தாலிகட்டினான். கனவன் என்ற அந்தஷ்தை பெற்றான். ஆனாலும்
அதற்கான உரிமையை அவன் எடுத்துகொள்ளவில்லை.
மதனுக்கு இன்று இருக்கும் ஒரே பிரட்சனை
அவள் வயிற்றில் வளரும் அந்த குழந்தைதான். “சே ஏன் இப்புடி இருக்க லதா நீ என்ன ஏமாத்திட்ட”
என தனக்குள் கூறிகொள்ள மணியும் தன் வேலையை செய்தது.
“என்ன மதன் தி எனர்ஜிடிக் பாய் என்ன
ஆச்சு உனக்கு எதாவது பிராபலமா” அந்த மேனேஜர்தான்
“ஒன்னுமில்லை சார் வீட்டுல சின்ன பிரட்சனை”
“ஓ மதன் கூல்” என சில அட்வைஸ்களை அள்ளி
தெளித்தார். HR அல்லவா அதனால்தான்.
ஆனால் மதனுக்கு அதில் சில விஷயங்கள்
பிடித்திருந்தன. அவர்மீது ஓர் மரியாதை வந்தது முதல்முறையாக. தன் குறைகளை அவரிடம் இறக்கினான்
மனதில் பாரம் குறைந்தது.
“அப்போ வாழைமரத்துல இருந்து குலைய பிரிச்சுடலாமுனு
முடிவு எடுத்துட்டீங்க” என்றார் அந்த மேனேஜர். குழம்பியவனை குழப்புவது எளிதுதான் மதனும்
குழம்பினான் “ஆமா சார் அதுதான் ஒரே முடிவா இருக்கும்” என கிளம்பினான்.
இந்த நவீன உலகத்திலும் மீதமிருந்த அந்த
ரிசிவர் ஃபோனை எடுத்து காதில் வைத்தாள் லதா கூடவே கண்ணீரையும் துடைத்துகொண்டாள், “அம்மா
எப்புடிமா இருக்க”
“நான் நல்லா இருக்கேன்டி குட்டி அப்புறம்
மாப்பிள்ளை உன்ன நல்லா பாத்துகிறாறா”
“ம்ம் அவர் என்ன கன்னத்துல” என வாய்
குலற “கண்ணுக்குள்ள வச்சு பாத்துகிறாருமா”
“சரிடி எத்தனை மாசம்”
“மூனுமா”
“இனிமேதான் ஜாக்கிரதையா இருக்கனுமா
நேரத்துக்கு சாப்புடுடா தங்கம்” என பேசும்போதே “இருடி சும்மா அக்காகிட்ட பேசனுமுனு
குதிச்சுகிட்டு இருக்கா இந்தா பேசு” என அம்மா கிளம்ப
“என்ன உடன்பிறப்பே நான் சித்தியாக போறேனா”
என்றாள் அந்த வாயாடி சீதா
“ஏய் பெரிய மனுசிமாதிரி பேசாதடி” என்று
அதட்டினாள்.
“ஆமா நானாவது பரவாயில்ல நீ மாமாவ காலேஜ்லயே
காதலிச்சுட்டு இருந்துட்டு வீட்டுல மண்ணென்னைய ஊத்திகிட்டு நின்னீயே! பாவம்டி நம்ம
அப்பா அப்புடியே பதறிட்டாரு. இப்பகூட நீ யாரயாவது காதலிச்சா சொல்லுமா அப்பா ஒன்னும்
சொல்லமாட்டேன். உங்க அக்காகூட நல்லாதான் இருக்கா அப்புடின்னு சொல்லுறாரு. ஆனா எனக்குதான்
மாமா மாதிரி ஒரு இழிச்சவாயனும் சிக்கமாட்டேங்குறான்.” என கிண்டல் செய்ய
“ஏய் படிக்குற வயசுல என்னடி லவ்வு கேக்குது
உனக்கு”
“ஆமாடி அம்மா ஊருக்கு உபதேசமா” என்றாள்
சீதா.
“ஏங்க விடுங்க சீதா பேசிகிட்டு இருக்கா”
என்று சிணுங்கினாள் லதா.
“என்னப்பா ரொமான்ஸா” என்ற சீதாவின்
குரலை வாங்கியது மதனின் செவிகள்.
“ஆமா பேச்சாளரே!” என்றான் மதன் தன்னவளை
பின்னாலிருந்து அனைத்துகொண்டே
“சரி சிவ பூஜைல கரடி எதுக்கு” என கரடியாக
நழுவிகொண்டாள் சீதா.
“ஏங்க தங்கச்சி முன்னாடி என்னங்க இதெல்லாம்”
என அவள்கூற அவன் பின்னாலிருந்து அனைத்தபடி அவள் கன்னத்தில் முத்தமிட்டு கூறானான்.
“என் மச்சினிச்சிகிட்ட நான் பேசுறேன் உனக்கு என்னடி”
“ஏங்க காலையில அந்த கத்து கத்துனீங்க
இப்ப என்ன பாசம் பொத்துகிச்சாக்கும்” என்றாள் சிறிது கோபமாக.
“சரிடி இனிமே அபாசன் பத்தி பேசமாட்டேன்.
எங்க நீ சொன்ன மாதிரியே எங்க அம்மாதான் எனக்கு குழந்தையா பிறக்கபோறாங்க நான் அவங்க்கூட
வாழனும் சீக்கிரம் பெத்துகுடுடி” என வயிற்றில் கை வைத்தான். அவன் கைமீது அவளும் கைவைக்க
அந்த தங்க வளையலை அவளுக்கு சூட்டினான்.
“என்னங்க இதெல்லாம்”
“இது உனக்கு இல்ல எங்க அம்மாவுக்கு”
(வாழை மரத்துல இருந்து குலை கனிஞ்சதும் பிரிச்சு கொஞ்சவேண்டியதுதான் மரத்தையும் குலையையும்
சேர்த்து)
“ஏன்டி உனகெல்லாம் வெட்கமே இல்லையா நல்லா காலேஜ்ல யாருகூடயாவது சுத்தவேண்டியது. அப்புறம் என்ன மாதிரி எதாவது இளிச்சவாயன் கிடைச்சா கட்டி வச்சுடவேண்டியது” என்று வசனம் வந்த
டீவி சீரியலை பார்த்து இதுவேற டிஸ்டபன்ஸ் என அனைத்துவிட்டு தன்னவளையும் தன் தாயையும்
சேர்த்து தூக்கி நடந்தான்.
ஆம் மதன் தன் தேவதையை கனவன் என்ற உரிமையில் இதுவரை கைநீட்டியதில்லை.
அந்த கைகள் அவளை அணைக்கமட்டுமே செய்துள்ளது இதுவரை.
தன்னவளை தூக்கி நடந்தவன் அவள் கன்னத்தில் முத்தம் பதித்தான்.
தன் தாய்க்கும் சேர்த்து.
-ஹேவ் நைஸ் காஃபி அன்டு லவ்லி டே பாசமலர்களே!!!




No comments: