Followers

சிறுகதைகள்

[சிறுகதை][twocolumns]

கவிதாயினி

[கவிதாயினி][twocolumns]

ஸ்நாக்ஸ் டைம்

[ஸ்நாக்ஸ் டைம்][bleft]

ஜெனிபர்

[ஜெனிபர்][twocolumns]

ப்ரீத்தா

[ப்ரீத்தா][twocolumns]

ஸ்நாக்ஸ் டைம் 5


for all parts clickungoo
நாம அவசரபட்டுட்டோமோ எதுக்கும் ஒருதடவை யோசிச்சிருக்கலாம் என்னதான் இருந்தாலும் இது அவளோட வாழ்கை அதுல நான் எப்புடி குறுக்கிடுறது. எனறு மனதினை அரித்துகொண்டிருந்தார் லிங்கம். எல்லாம் அவர் பெற்ற அந்த அழகு தேவதையை எண்ணிதான். அவள் சிறு குழந்தையாக இருக்கும்போது ஏற்பட்ட விபத்தில் மனநிலை பாதிக்கபட்டாள் தேவியின் தாய். ஒரு வருடம் கோமாநிலை. அப்போது தேவிக்கு பதிமூன்று வயதுதான் கூட அவள் தங்கை சுதா எட்டு வயதில்.
ஊர்மக்களின் வேண்டுகோளாக லிங்கத்திற்கு வைக்கபட்டது “ஏம்பா இவ்வளவு செலவலிக்க உங்கிட்ட காசு இருக்காப்பா பேசாமா பெரியாஷ்பத்திரில சேத்துடு அங்க ஊசி போட்டுருவாங்கப்பா அப்புறம் நீ வேற கல்யானம் பன்னிகோ! பாத்துக்கப்பா ரெண்டு புள்ளைங்களுக்கு அம்மா வேணும்ல” லிங்கமும் கனைசி வார்த்தைகாக மனதளவில் இசைந்தார்.
“எங்க அம்மாவ எங்களுக்கா பாத்துக்க தெரியும் நீங்க கிளம்புங்க” என்ற குரல் அது தேவிதான்.
“அடங்காபிடாரி எப்புடி பெரியவங்கள மரியாத இல்லாம பேசுறா பாரு” என்ற வசனங்களையும் ஏற்றுகொண்டாள் அந்த சிறுமி தேவி.
ஒரு வழியாக தேவியின் ஆசிரியர் மூர்த்தியின் உதவியால் கிராமத்திலிருந்து மாற்றலாகி வர லிங்கத்திற்கும் ஒரு அலுவலகத்தில் வாட்ச்மேன் பதவி வாங்கி குடுத்தாள் அந்த தேவி. தன் தங்கைக்கு அம்மாவாகவும் தாய்க்கும் அம்மாவாகவும் இருந்தாள் அந்த வயதிலேயே.
காலையில் பள்ளி பின் மதியம் எப்படியாவது பர்மிசன் வாங்கி வந்து தன் தாய்க்கு சாப்பாடு ஊட்டிவிட்டு தான் சாப்பிடாமலேயே சென்று படிப்பாள்.பின் மாலை பொழுதில் கோணார்கடையில் வேலை அப்புறம் வீட்டிற்கு வந்து படிப்பாள். பின் பாத்திரங்களை கழுவி உறங்க இரண்டு கடிகாரமுள்ளும் வானத்தை பார்த்து நிற்கும். மீண்டும் காலையில் எழுந்து அந்த பாழடைந்த சைக்கிளை மிதித்துகொண்டு பேப்பர்போட கிளம்பிவிடுவாள் இதுதான் அவள் சைக்கிளின் வாழ்கை சக்கரம்.
தன் மகளுக்கு அதிக கஷ்டம் தந்துவிட்டோம் என நினைக்கும்போது லிங்கத்திற்கு மனதில் சிறு வலி ஆனால் இப்போது தன் மகளுக்கு கஷ்டம் குறைந்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். ஆம் நீண்ட நாட்களாக தொந்தரவு தந்த தன் மனைவி இறந்து இன்று ஒரு வருடம் ஆகிவிட்டதல்லவா.
அதிலும் தேவி ஓர் நல்ல பள்ளியில் ஆசிரியராக சேர்ந்துவிட்டாள். நல்ல சம்பளம். தன் சகோதரியை நல்ல கல்லூரியில் சேர்க்கும் கனவுடன் உள்ளாள்.
தேவியை என்னும்போது அந்த கடந்தகால நினைவுகள் வந்து லிங்கத்தை புன்னகை செய்ய வைக்கும்
“அப்பா வரும்போது சாக்லட் வாங்கிட்டு வாப்பா” என காலைகட்டி கொள்வாள் அந்த ஐந்து வயதுதேவி. லிங்கத்திற்கு அன்றாடம் கிடைக்கும் சித்தாள் வேலைகிடைப்பதே குதிரைகொம்பு அதில் அன்று சம்பளம் தந்தாள்தான் வீட்டில் சாப்பாடே இல்லை என்றால் ஐஸ் பிரியானிதான்(கஞ்சி). “சரிடா செல்லம் அப்பா வாங்கிட்டு வாரேன்”
இரவும் வந்தது. தேவி உறங்கிவிட்டாள். “என்ன பாப்பா தூங்கிடுச்சா”
“ஆமாங்க சாப்பிடாம தூங்குறா”
“ஏன் எதும் உடம்பு சரியில்லையா”
“இல்ல நீங்க முட்டாய் வாங்கிட்டு வருவீங்க அத சாப்புட வயத்துல இடம் வேணுமாம்” லங்கமோ வெறும் கையினை பார்த்தார்.
பின் தன்மகளை “தேவிகுட்டி எழுந்திரிங்க அப்பா முட்டாய் வாங்கிட்டு வந்துட்டேன்” என கூற அரை தூக்கத்தில் எழுந்தாள்.
லிங்கமோ “முதல்ல சாப்புடுவீங்கலாம் அப்புறம் அப்பா முட்டாய் தருவேனாம்” என அந்த சாதத்தை ஊட்டிவிட அவள் தன் தந்தைக்கு முத்தம் கொடுத்துவிட்டு. “நாளைக்காவது வாங்கி தாங்கப்பா” என தூங்கிவிட்டாள். தினமும் நடைபெறும் நாடகம்தான் இது. லிங்கம் இதுவரை வாங்கிதரவில்லை.
இன்று தான் கூறபோகும் விசயத்தால் எப்படியும் திட்டுவாள் என தெரியும் அதனால் அந்த ஸ்வீட் கடைக்கு சென்று அரைகிலோ லட்டுகளும் இதர மிட்டாய்களும் வாங்கினார். அதிகாலை முதல் கஷ்டமர் இவர்தான்.
வீட்டிற்கு நடக்கும் வழியில் நேற்று நடந்த சம்பவங்கள் ஓடியது.
“லிங்கம் ஐயா இங்க வாங்க” அந்த அலுவலகத்தின் முன்னால் முதலாளி. இன்னால் முதலாளி மனோஜின் தந்தை.
“சொல்லங்க சார்”
“இல்ல உங்க பொண்ணு டீச்சராதான வேலைபாக்குறாங்க. பேரு தேவிதான”
“ஆமாங்க சார்”
“இல்ல எனக்கு ஒரு சத்தியம் பன்னி தருவீங்கலா”
லிங்கத்திற்கு குழப்பம் ஆனாலும் அன்று ஆதரித்தவர் இவர் அல்லவா “சொல்லுங்க சார் எதுனாலும் பன்னுறேன்”
“இல்ல என பையனுக்கு பொண்ணுபாக்கறேன் அதான் அவன் படிச்ச குணமான பொண்ணா கேக்குறான் அந்தஸ்து முக்கியமில்ல அதான் உன் பொண்ண?” என லிங்கத்தின் இருகையையும் பற்றிகொண்டார்.
இதுவரை சரிங்க சார் என்று கூறிய லிங்கத்தின் வாயும் பழக்கதோஷத்தில் “சரிங்க” என்று கூற “அப்போ இன்னைக்கு மதியம் நேரம் நல்லா இருக்கு நாங்க உங்க வீட்டுக்கு வரோம் இந்த இந்தகாசு வச்சுகோ மத்த ஏற்பாடெல்லாம் பன்னிரு கொஞ்சம் VIP வருவாங்க” என கிளம்பினார்.
தேவியை கேட்காமல் அந்த வீட்டில் அனுவும் அசையகூடாது. அப்படி லிங்கம் ஒருநாள் டீவி வாங்கி வந்ததற்கு “இப்ப எதுக்குப்பா இது நமக்கு தேவையா முதல்ல போய் குடுத்துட்டு காச வாங்கிட்டு வாங்க” என தாளித்து எடுத்திவிட்டாள்.
ஆனால் இன்று லிங்கம் அவளது ஆலோசனை இல்லாமல் இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளார். அதிலும் தேவியின் ஒரு நோட்டிலிருந்த காதல் கவிதைகள்வேறு லிங்கத்தை குழப்பியது. அவசரபட்டுவிட்டோமோ என்று.
கோவிலில் சாமிகளை தரிசித்த தேவியும் சுதாவும் வெளியே வர அவர்களை ஒரு கண்தரிசித்தது. “அக்கா உன் ஆளு வந்துட்டான்” இது சுதா.
“ஏய் வாயமூடுடி”
“என்ன மட்டும் அதட்டு! அப்ப அவன உன் ஆளு இல்ல”
“இல்லடி” என்றாள் ஆனால் வெட்கம்மீதமிருந்தது.
“சரி அப்ப எங்க அக்காவ இனி ஃபாலோ பன்னாதிங்க என்னவேனா ஃபாலோ பன்னுங்கனு சொல்லிட்டு வந்துடுறேன்”
தேவியின் முகத்தில் சோகம்.
“என்னக்கா எனக்கு தெரியாதா! உனக்குதான் சாமியே புடிக்காது அப்புறம் இப்பலாம் நீ தினமும் கோவிலுக்கு வர்ர் இதுல நான்வேற பாதுகாப்பு. முதல்நாள்ளயே நான் கண்டுபிடச்சிடேன் அக்கா!”
அதற்குள் அவன் இருவர் முன்னாலும் வந்து நினாறான். “இங்க பாருங்க எனக்கு உங்கள பிடிச்சிருக்கு” என அவன் கூற தேவி தன்தங்கையின் கையைபிடித்து போகலாம் என்றாள். என்னதான் தைரியமான பொண்ணாக இருந்தாலும் காதலின் முன் அனைவரும் கோழைதான்.
“ஐய்யோ மாமா எங்க அக்கா இதுக்கு சரிபட்டு வரமாட்டா என்னவேனா சைட் அடிங்க” என்றாள் சுதா.
“ஏய் லூசு” இது தேவி.
“என்னக்கா நீயும் புரபோஸ் பன்னமாடேங்குற என்னையும் பன்னவிடமாட்டேங்குற” சிரித்தாள்.அவன் புரிந்துகொண்டான். பின்தன்னிடமிருந்த அந்த டைரிமில்கையும் ஒரு ரோஜாவையும் குடுக்க தேவி வெட்கத்துடன் வாங்கிகொண்டு நடந்தாள்.
வீட்டில் “தேவிம்மா இந்தா ஸ்வீட்”  இது லிங்கம்.
“என்னப்பா திடிர்னு” இது தேவி
“இன்னைக்கு உன்ன பொண்ணுபாக்க வர்ராங்கம்மா” என அவர்கூற சுதாவோ “அப்பா!” என சத்தம்போட தேவி அவள் கையை பிடித்து அழுத்தி வேணாம் என தலையாட்டினாள்.
சுதா அமைதியாக இருந்து தந்தை போனதும் “ஏங்கா”
“இல்ல அப்பா விருப்படிதான் நடக்கனும் இல்லைனா கஷடபடுவாரு” என கண்ணீர் வர தன் அறைக்குள் சென்று அழுதாள்.
ஏங்கா உனக்குனு இதுவரைக்கும் எதாவது செஞ்சுருக்கியா! மாப்பிள்ள வரட்டும் நான் பேசுறேன் இல்லைனா காஃபில பேதி மாத்திரைய போட்டுட வேண்டியதுதான் என திட்டம் தீட்டினாள் சுதா.
பொண்ணு பார்க்கும் படலம் ஆரம்பம்.
அனைவரும் அமர்ந்திருக்க தேவி சற்று அழுது வீங்கிய கண்ணுடன் சற்று மேலும் அழகாக இருந்தாள். தலைகுனிந்துநிற்க சுதாவோ அனைவருக்கும் காஃபி கொடுக்க தட்டை எடுத்துவந்தாள். அதில் அந்த மாத்திரைகள் இல்லாமல் இல்லை.
“அக்கா இப்ப பாரு வேடிக்கைய” என தேவியின் காதில்கிசுகிசுத்து நிமிர்ந்தவளின் தட்டு தவறி கீழேவிழுந்தது.
“ஏய் மாம்ஸ் நீங்கதான் மாப்பிள்ளையா! அங்க சைட் அடிச்சது பத்தலையா” என்றாள் சுதா நக்கலாக.
“என்ன கல்யான பொண்ணு டைரிமில்க் எப்படி இருந்துச்சு” இது மனோஜ்

-ஹேவ் நைஸ் காஃபி அன்ட் ஹாப்பி டே பாசங்களே!!!

No comments:

தொகுப்பு...