Followers

சிறுகதைகள்

[சிறுகதை][twocolumns]

கவிதாயினி

[கவிதாயினி][twocolumns]

ஸ்நாக்ஸ் டைம்

[ஸ்நாக்ஸ் டைம்][bleft]

ஜெனிபர்

[ஜெனிபர்][twocolumns]

ப்ரீத்தா

[ப்ரீத்தா][twocolumns]

தங்கக்கடல் 1




தங்கக்கடல் 1

“சே வேலை பாக்க தெரியாதவனலெல்லாம் வச்சுகிட்டு கடுப்படிக்குறானுக”
“என்ன மாடா காலையிலயே டென்சனா கத்திகிட்டு இருக்கு”
“ஆங்ங் வாரும் நல்லா கப்பலு முன்னாடி உட்காந்துகிட வேண்டியது ஜம்முனு ஏதோ சோளகொல பொம்மையாட்டம் வயசானவனெல்லாம் இந்தமாதிரி கடல்தொழிலுக்கு ஏத்தி வந்தாலே இதுதான் பிரட்சனை அவன் தொழிலுக்கு புதுசு ஒரு மண்ணும் தெரியல இவரு ஒரு கயிற பிடிச்சு இழுத்து ஒருமணிநேரம் தூங்கவாப்ள…” கத்திகொண்டிருந்தான் மாடன்.
சூரியனும் அவன் கோவத்திற்கு தீணிபோடும்விதமாக கடலில் மூழ்கிகொண்டு இருக்க தண்ணீரெங்கும் தங்கம்போல் செந்நிறமாக பிரதிபலித்து நின்றது.
“இங்க பாருங்க ஒரு இருநூறுகிலவாவது பிடிச்சாதான் கரையில கால வச்சதும் உங்க எல்லாருக்கும் சம்பளம் இல்லைனா வெறும் கைய வீசிட்டு போக வேண்டியதுதான். போட்ட டீசலுக்கே வழிய காணோம்.”
“மாடா என்னப்பா பேசுற ஏதோ உன் போட்ல தான் அதிஸ்டம் இருக்குனு எங்க வீட்டு பொம்பளையாளுங்க மாடன் போட்டுல போ மாடன் போட்டுல போன்னு போட்டு அரிக்குறாளுக நீ என்னடான்னா இப்புடி பேசுற”
“வாப்பா சொடலை… அதிஷ்டம் கூட கொஞ்சமாவது வேலை செஞ்சாதான் வரும்” அவன் பதில் எதார்த்தமானதுதான் அதனால்தான் என்னவோ எல்லாரும் அமைதியாக நிற்க கப்பலும் ஒரு ஆட்டம் ஆடி நின்றது.
“ப்ச்ச்… காத்தாடில வலைய சுத்தவிட்டீங்களா உங்கள வச்சுகிட்ட என்னதான் பன்றதோ தெரியல” என ஒரு கத்தியினை எடுத்துகொண்டான் கையில்.
கப்பலின் பின்னால் தண்ணீருக்குள் இருக்கும் காத்தாடியில் இந்த மாதிரி அடிக்கடி வலைகள் சிக்கி கப்பல் அப்படியே நிற்பது இயல்புதான். இதுவே பகலாக இருந்தாள் தண்ணீருக்குள் நீந்தி போய் அந்த வலைகளை வெட்டி எரிந்துவிடலாம். ஆனால் கிட்டதட்ட இரவாக போகிறது. ஆனால் இரவாகிவிட்டால் அப்படியே காலைவரை காத்திருக்க வேண்டியதுதான். யார் கீழே இருக்கும் சுறாக்களுடன் சண்டை போட முடியும். இதிலும் இந்த மாதிரி வேலையாட்களை வைத்துகொண்டு போட்ட டீசலுக்கு கூட மீன்பிடிக்காமல் மாடன் எப்படி திரும்ப முடியும். அவனையே நொந்துகொண்டு ஒரு டார்சினை எடுத்துகொண்டும் கடலில் குதித்தான்.
கண்ணில் அணியும் கண்ணாடி அணிந்துகொண்டான். நன்றாக மேலே வந்தவன் இடுப்பில் கயிறினை கட்டிவிட்டு மேலே நிற்பவர்களிடம்கொடுத்தான். இந்த கயிறி இல்லை எனில் அந்த காத்தாடி திடீரென சுத்தி அவனை இரண்டு மூன்று துண்டுகளாக பிரித்து எரிந்துவிடும். இதுபோல மாடனின் ஊரில் பலபேர் இறந்துள்ளனர்.இதுவே கயிறு இருந்தால் அவனை வேகமாக மேலே இழுத்துவிடலாம் அல்லவா.
அனைவரும் தேமே என நிற்க நன்றாக மூச்சினை இழுத்தவன் உள்ளே சென்று பார்த்தான். காத்தாடியில் எதும் சிக்கியதாக தெரியவில்லை. சுற்றறிலும் தடவிகூட பார்த்துவிட்டான். ஒரு சிறிய கயிறுகூட இல்லை. “பின்ன ஏன்டா நின்னுச்சு”
தண்ணீக்கு மேலே  வந்தவன். “அண்ணே ஒரு கயிறுகூட இல்ல இன்ஜின்க எதும் பிராப்ளமான்னு பாருங்க”
“இல்லியேப்பா நான் பாத்துட்டேன் எல்லாம் சரியாதான் இருக்கு”
‘என்னடா இது மர்ம்மா இருக்கு’
“சரி இன்ஜின் ஸ்டார்ட் பன்னுங்க” என அந்த இழையிலிருந்து சற்று தூரமாக இருந்தான்.
“ஸ்டார்ட் ஆகலப்பா”
மாடனுக்கு தலைவலியாய் போனது. ‘எல்லா வேலையும் நான்தான் செய்யனும் போல சே” என போட்டில் ஏற போனான். அப்போதுதான் தன் அருகில் போகும் வலையினை பார்த்தான். அதை இழுத்து பார்க்க அது கடினமாக இருந்தது.
“அண்ணே வலையமட்டும் ஆன் பன்னி இழுத்து பாருங்க” என கூறியதும் ஒரு சிறிய மோட்டார் ஓட அந்த வலை சிறிதும் அசையவில்லை.
“மாடா வலைதான் எதுலயோ மாட்டிகிச்சுன்னு நினைக்குறேன்பா” சொடலை வந்து நின்றான்.
மாடன் என்ன செய்வது எல்லாம் வட்டிக்கு வாங்கி தொழில் செய்கிறான். இந்த நிலமையில் இருந்தால் என்னதான் செய்ய முடியும்.
“மாடா வலைய வெட்டிவிட்டுரலாம்பா”
“என்னது எழுநூறு மீட்டர் வலை இது எப்புடியும் அம்பதாயிரம் வரும்”
“அதுக்குனு உள்ள போயி வெட்டியாவிடமுடியும் முன்னூறு மீட்டருக்கு?”
“சரி சொடலை நீ என்கூட குதி நாம ரெண்டு பேரும் போயி வெட்டிட்டு வந்துடலாம். ரொம்ப நாளைக்கு முன்னாடி கோஸ்டல் கார்ட் காரன் எதுக்கு இந்த ஆக்ஸிஜன் சிலின்டர குடுத்தான்னு இப்போதான் தெரியுது.”
என சொடலையும் மாடனும் நன்றாக நீச்சல் உபகரணங்களுடன் வலையினை மீட்க தண்ணீரில் குதித்தனர். தண்ணீருக்கு அடியில் நீந்துவது என்பது மிகவும் சிரமமான ஒருவிசயம் அதனால்தான் அந்த வலை கயிறினையே பிடித்துகொண்டு கீழே நகர்ந்தனர்.
நீந்துவதற்கெல்லாம் அவர்களிடம் சக்தி இருந்தாலும் திரும்ப மேலே வரவேண்டும் அல்லவா. அதனால் தங்கள் சக்தியினை மிச்சம் வைத்துகொண்டனர். அதுவுமில்லாமல் கடலுக்கடியில் என்ன இருக்கும் எப்போது ஆபத்துவரும் என்று முன்னாலே தெரிந்திருப்பது அரிதுதான். அந்த ஆபத்தை எதிர்கொள்ளவாவது மனதிலும் உடலிலும் தெம்பு வேண்டுமல்லவா.
உள்ளே செல்ல செல்ல இருட்டாக மாறிகொண்டிருந்தது. சொடலை தன் கையில் உள்ள டார்ச்சினை ஆன் செய்ய எதிரில் ஒரு பெரிய மீனின் கண் இருக்க அப்படியே உறைந்துபோயினர். அதன் பற்கள் மாடனின் கையளவு உயரம் இருந்தது. இவர்களின் மொத்த உருவம்தான் அந்த மீனின்தலையே… பார்க்கவே கோரமாக இருக்க. இருவருக்கும் இதயதுடிப்பு அதிகமானது.
சொடலை பயத்தில் அந்த கயிறினை விட மாடன் அவனை பிடித்துகொண்டான்.
“இது வெறும் தலைதான்டா” என தன் கையினை சுட்டிகாட்ட அந்த மீனின் தலைமட்டும் இருக்க பின்னால் ரத்தம் தண்ணீரில் ஓடிகொண்டிருந்தது.
அப்போது நிதானமாகினான் சொடலை. ஆனால் இவ்வளுவு மீனையே கடித்து போட்டிருக்கிறது என்றால். அந்த கடித்த மீன் எவ்வளவு பெரியதாக இருக்கும். என நினைத்தவன் உப்புகடலில் மேலும் உப்பு சேர்த்திருந்தான்.
அதற்குள் மாடன் கயிறினை பிடித்துகொண்டு நீண்ட தூரம் சென்று “வா வா” என சைகை காட்டினான்.
“இவன தனியாவும் விடுட போக முடியாது.. இவன் கூட போகவும் பயமா இருக்கு” திருதிருவென முழித்தவன் சரி போவோம் என மனதினை திடமாக்க முயன்று அவன் பின்னால் சென்றான்.
ஆழ்கடல் மிகவும் கொடுரமான நிசப்தத்துடன் இருந்தது. அவர்களின் விளக்கு ஒளியை தவிர எந்த வெளிச்சமும் இல்லை. பட்டென ஒரு ஆழத்தில் அதனுல் தண்ணீர் புகுந்துகொள்ள அது அனைந்துவிட்டது.
“இதுவும் போச்சா சே ஏன்தான் இப்புடி நடக்குதோ” மாடன் கோவபட்டுவிட்டு கயிறினை மட்டும்துனையாக கொண்டு உள்ளே சென்றான். கயிறின் இறுதியினை அடைந்திருந்தனர்.
ஏதோ கம்பிபோன்ற  ஒன்றில் மாட்டியிருக்க அதை மெதுவாக கழற்ற பார்த்தான். அது நன்றாக இறுகி இருந்தது. கத்தியினை எடுத்தான்.
தண்ணிடம் இருந்த சிறிய லைட்டினை எடுத்து முடிந்த மட்டும் அறுக்க முயன்றான்.
அப்போது ஏதோ மின்னல் ஏற்பட்டது போல தண்ணீரில் ஒரு ஒளி வந்து மறைந்தது.

இருவரும் அப்படியே உறைந்து நின்றனர்.

ஆம் அவர்கள் கண் முன் தெரிந்தது அதுதான். ஒரு பிரம்மாண்ட கப்பல் மூழ்கி கிடந்தது. அதைவிட அந்த மின்னலின் ஒலியினை வாங்கிகொண்டு இன்னும் ஒளிவீசும் அந்த வைரங்கள்தான் ஏதோ  நட்சத்திரம் பூத்தற்போல மின்னிகொண்டிருந்தன. அந்த கப்பலின் மேல்தளம் முழுதும் தங்க ஆபரணங்களும் வைரங்களும் ரத்தினங்களும் நிரம்பி வழிந்தன.
“டேய் ஜாக்பாட்டா” என மாடன் சந்தோஷத்தல் கயிறினை வேகமாக வெட்ட அது சர்ரென அவர்களே மேலை தூக்கி சென்றது.
மேலே சென்றவன்…”டேவிட் மச்சான் இந்த இடத்தோட மார்க்க குறிச்சு வைங்கப்பா”
“ஏன் மாப்ள எதும் செம்பாறை நண்டு பாத்துட்டீங்களா ஒரே ஜாலிதானா? வலைய போட்டுறலாமா?”
“நண்டா??? அட போங்கப்பா கீழ ஒரு பெரிய புதையல் இருக்குப்பா”
“என்னது புதையலா?” கப்பலில் அனைவரும் புரியாமல் விழிக்க
சொடலையும் மாடனும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தனர்.
தண்ணீருக்குள் ராட்சத மீன் ஒன்று அந்த தங்க கப்பலின் முன்னால் சென்றுகொண்டிருந்த சுறாமீனை இரண்டாக பிரித்து போட்டது…..


No comments:

தொகுப்பு...