Followers

சிறுகதைகள்

[சிறுகதை][twocolumns]

கவிதாயினி

[கவிதாயினி][twocolumns]

ஸ்நாக்ஸ் டைம்

[ஸ்நாக்ஸ் டைம்][bleft]

ஜெனிபர்

[ஜெனிபர்][twocolumns]

ப்ரீத்தா

[ப்ரீத்தா][twocolumns]

கன்னிநிலா பூவாழி 5


கன்னிநிலா-பூவாழி 5

“ஏன் அவர் மட்டும் அந்த அறைக்குள் செல்கிறார் உங்களில் யாருக்கும் அனுமதி இல்லையா” என பூவாழி தன் காதலனிடம் கேட்க “என் தந்தை ஏன் இப்படி செய்கிறார் என்று அறியயிலவில்லை. ஆனால் நிச்சயமாக அவரின்ஒவ்வொரு அசைவிற்கும் பொருள் இருக்கும் என்பது என் சிந்தாந்தம்”
“ஆனால் இவர் ஏன் அந்த ஆழிவேட்டையரை பார்த்து நடுங்குகிறார் என்று புரியவில்லை. ஒருவேளை அவர் தன் சகோதரனாக இருப்பதாளோ என்னவோ!” என ஆதிரையன் தனது ஆதங்கத்தை வெளிகொணர்ந்தான்.
“நிச்சயமாக இல்லை” பூவாழியின் கண்ணில் தீர்க்கமான ஒளியாக திகழ
“ஏன் அப்படி கூறுகிறாய்”
“ஆழிவேட்டையரின் வீரத்திற்கு ஈடுஇனை இல்லை. அவர் முதலில் எதிர்த்து நின்றது எங்கள் சோழமன்னர் இந்திரனைதான்! தற்போதிருக்கும் முடிவேந்தரின் தந்தையார் அவர். அது ஒரு மாபெரும் போர்”
“மாபெரும் போரா?”
“கூற்று வெளிபட்டதும் மனதில் பல லட்சம் வீரர்களின் அணிவகுப்பு கூட யானைபடைகுதிரைபடைகள் தங்களது புஜ பலத்தால் இரண்டு நாடுகளிலிருந்தும் மோதிகொள்ளும் என எண்ணியிருந்தாள் நான் பொறுப்பாக இயலாது காதாலா”
“அப்படி இல்லையென்றால் போர் என்பதின் பொருள்தான் என்ன?”
“நீங்கள் எதிர்பார்த்த அனைத்து படைகளையும் எங்கள் மன்னர் அனுப்பினாராம் ஆனால் எதிரியின் படையில் ஒரே ஒருவர் அது ஆழிவேட்டையர். சூரியன் அவரின் வீரத்தைகாண காலையில் உதித்து நிற்க மாலையில் மிஞ்சியது என்னவோ அந்த இடம்முழுதும் ரத்தநிற பிரதிபலிப்புகள்தான்”
“அப்படியானால் பூவாழி”
“ஆம் பத்தாயிரம் வீரர்கள் ஆயிரம் குதிரைபடை வீரர்கள் ஆயிரம் யானைகள் அனைத்தையும் ஒரு வாள் ரத்தனமும் முத்தும் கலந்தார்போன்ற ஒரு வாளின் பசிக்கு இரையாகின!”
“அந்த வாளை!!”
“அந்த வாளுக்கு சொந்தகாரர் ஆழிவேட்டையர்தான்! அந்த வாளிலிருந்து நிச்சயமாக அவருக்கு சக்தி கிடைக்கவில்லை. மாறாக அவரிடமிருந்துதான் அவரது ஆயுதங்களுக்கு பெரும்பேரு கிடைக்கிறது.”
“அதனால்தான் அவரது பெயரை கேட்டதும் என் தந்தை நடுங்கிபோயவிட்டாரா! ஆனால் அந்த ஆழிவேட்டையர் ஏன் தன் எதிரியான சோழனிடம் போரில் பணிபுரிய வேண்டும். அவர்கள் ஒருமுறை எங்கள் நட்பு கப்பலான பொற்கொள்ளையரின் கப்பலைகூட தாக்கி கபலிகரம் செய்துள்ளனரே”
“அந்த நிகழ்வு எனக்கு தெளிவாக தெரியாது எல்லாம் வாய்மொழி வழக்குதான்! மன்னரை அவர் வாளால் பிளக்க முற்படும்போது மன்னர் அவர் காதில் ஏதோ கூறினாராம். உடனே ஆழிவேட்டையர் மன்னரிடம் சரண்டைந்து அன்றிலிருந்து கப்பற் படையின் ஒருதுருவமாக திகழ்ந்தார் எனவும் கூற கேட்டிருக்கிறேன்”
“சரியாகதான் உள்ளது என தந்தையும் அவ்வாறுதான் மாட்டிகொண்டார். அது என்ன மந்திரம். பிரணவ மந்திரமா என்ன? இப்போது இரு துருவங்களாய் என் தந்தையும் சோழபேரரசுடன் இனைந்து கொள்ள கப்பற்படையின் ஈடில்லா அரனாக இருக்கிறது. அந்த ஆழிவேட்டையரும் உடன் இந்த காரிருளானும்”
என தங்களுக்கு தெரிந்தவற்றை யூகித்துகொண்டிருக்க கப்பல் நங்கூரமிட்டதைபோல நின்றது. அப்போது எரிந்த நிலையில் ஆகாசதீபன் வெளிபட அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர். “தலைவா என்ன இது கோலம்”
“என் கண்ணிற்கு துணிகொடுங்கள்” என கட்டளை இட்டதும் துணியை எடுத்து கொடுத்தனர். அதை கண்ணில் போர்த்த காரிருளானின் உடலிலிருந்த எரிந்த தோல்கள் மாற துவங்கின. இயல்பு நிலைக்கு திரும்பினான்.
“தோழர்களே! நீங்கள் போரில் ஆர்வமாக இருக்கிறீர்கள் என்னுடன் நின்று உயிர்விட தூணிவீர்கள் என எனக்கு தெரியும் ஆனால் உங்களின் உயிரை என் சகோதரனுக்கு கொடுக்க எனக்கு மனம் லயிக்கவில்லை இன்னும் சில நாட்டிகல் தூரத்தில் பசுமை தீவு ஒன்று வரும் அதில் உங்களை தவிர்த்துவிட்டு நான் போருக்கு புறப்படலாம் என என சித்தம்! நீங்கள் இதற்கு உடன் படுவீர்கள் என நினைக்கிறேன்”
“இல்லை இல்லை முடியாது முடியாது” என கப்பலில் ஓசைபலமாக ஒலிக்க
“இது என் உத்தரவு” என முடித்தான்
அனைவரும் சோகமாக நின்றனர் கப்பலின் மீது பல சிப்பிகளும் சங்குகளும் அவ்வபோது ஏறி வந்துகொண்டிருக்க ஆழிவேட்டையர் வந்துவிட்டார் என்பது உறுதியாகவிட்டது.
“நான் எதிர்பார்த்ததைவிட என் மைத்துனன் வேகமானவர்தான்! இன்னும் சில மணிதுளிகள்தான்! என் யூகம் சரி என்றால் சூரியன் இன்னும் பத்துபாகைகள் நகர்வதற்குள் வந்து சேர்ந்துவிடகூடும்”
“தந்தையே நான் உங்களுடன் இருக்கிறேன்! உங்கள் உயிரின் மீது எனக்கு அக்கறை அதிகமாக உண்டு” என ஆதிரையான் வந்து நிற்க “என் காதலனுடன் நானும் நிற்பேன்” என பூவாழியின் குரலும் கேட்க அவர்களை ஆகாசதீபன் பார்த்துவிட்டு.
“காதல் என்றால் என்ன என்று தெரியுமா” இருவரும் விழத்தனர்.
“தந்தையே என்ன கூறுகிறீர்கள்?”
“அது தெரிந்திருந்தாள் நான் ஏன் இப்படி இருக்கபோகிறேன்” என சோகம் வீச “இன்னிலிருந்து நீங்கள் உண்மையான காதலை நேசிக்க போகிறீர்கள்” என பேசிகொண்டே பூவாழியையும் ஆதிரையனையும் இனைத்து ஒரு சங்கிலியால் பினைத்துவிட்டார் காரிருளான்.
அவர்கள் அதை கவனிக்கும் போது “உயிரோடிருந்தாள் நான் உங்களை மீட்பேன்” என காரிருளான் கத்திவிட்டு கடலில் பிடித்து தள்ளினார்.
தூரத்தில் தென்றல் அலையாக தோன்ற தெள்ளயதொரு கடல்நீர் அருகில் விழ தன்னுல் காத்திருந்த விகாரத்தையும் ராட்சச தன்மையையும் அழகாய் வித்திட்டு வழிகாட்ட ஆதிரையான் தன் காதலியுடன். இல்லை இன்றிலிருந்து மனைவியுடன் அந்த கடல்லையில் விழுந்தான் ஆழமான மூச்சு தினற கைகளை கட்டபட்ட நிலையில் அந்த தாக்குதலை எதிர் பார்க்காத பூவாழி தண்ணிரில் விழுந்து மயங்க அவளது கன்னங்களை தட்டிபார்த்தான் ஆவளிடம் எந்த அசைவும் இல்லை.
அவனை சுற்றிலும் அழகிய பவளபாறைகள் வீற்றிருக்க ஒளிபொருந்திய மீன்கூட்டங்கள் ஆழ்கடலிலிம் ஒளியினை பரப்பி வண்ணகோலமிட்டுருக்க ஆதிரையான் இதுவே கரையாக இருந்திருந்தாள் தன் காதலியை தன் தோளில் சாய்த்துகொண்டு அவள் துயிலுறங்க ரசித்துகொண்டிருப்பான். ஆனால் இது ஓர் வக்கிரமான நீர் சூழல் அல்லவா!
நோக்கமானது அவளை உயிருடன் கரை சேர்ப்பது. இதயத்தில் அவள் இருக்க உன்னவளை காப்பாற்று இல்லையே நான் என் ஓட்டத்தை நிறுத்திகொள்வேன் என இறுதியாக எரியும் விளக்குபோல தன் வேகத்தை கூட்ட “மலர் மலர்” என அவன் அழைத்தது காதில் விழவில்லை அவளுக்கு மாறாக மயங்க சாய கையிலிருந்த விலங்கு அவனை அவளுடன் இழுக்க உள்ளே சென்றாள் தன் காதலனுடன்.
அவனது கண்களில் இறுதியாக தோன்றிய காட்சியாக அவளது முகமே பதிய அவளது நெற்றியல் ஒரு முத்தமிட்டான் அது அன்பின் அடையாளமாய் அடுத்த பிறவியில் நான் உன்னை கன்டறிய உதவும் ஓர் குறிப்பு என உணர கண்களை மூடி சாய்ந்தான்.
ஆகாச தீபன் கப்பலிலிருந்த அனைத்து மாலுமிகளையும் இரண்டு இரண்டு நபர்களாக சங்கிலியால இனைத்து கடலில் தள்ளவிட அனைவரும் மயங்கி சரிந்துகொண்டிருந்தனர். “ஏன் தலைவர் இப்படி செய்கிறார்” என அனைவரின் மனதிலும் கேள்வி எழாமல் இல்லை.
ஆகாசதீபன் இப்படிதான் ஒருமுறை சுறாக்காள் நிறைந்த பகுதியில் மாலுமிகைள குதிக்க சொல்ல அனைவரும் தயங்கினர். “குதியுங்கள்” என உத்தரவிட அனைவரும் குதிக்கும்போதுதான் உணர்ந்தனர் கடலில் சைவசுறாக்களும் உண்டு என உடனே கீழே நீந்திய சிலர் கண்டது துர்கையின் புதைந்த கோவில் ஒன்றினை. அனைவரும் கண்கொட்டாமல் பார்த்தனர். வைரத்தினால் செய்யபட்ட கோவில் அல்லவா அது நீருக்கடியில் மின்னிகொண்டிருக்க அந்த சுறாக்கள் அதன் ஒளியை உட்கிரகித்து வாழ்கின்றன என்பதை அறிந்தனர்.
மாலுமிகள் மேலேவர “என்ன துர்கையின் அருள் பறிபூரனமாக கிடைத்ததா” என அறைசுவையில் நகைசுவை அணிந்து கேட்க “தலைவா! உங்களது செயல்கள் எல்லாம் பின்புலம் பெரும் தர்மங்களை கொண்டுள்ளது. இந்த துர்கையின் கோவில் கட்டுகதையாக எண்ணியிருந்த எங்களுக்க விழியில் விழவைத்தீர்கள் மிக்க நன்றி உங்களுக்கு “ என அவர்கள் மெய் சிலிர்க்க அதற்கு காரணம் இந்த கோவிலை ஒருமுறையேனும் பார்த்தாள் செய்த பாவங்கள் அகலும் என்பது ஒரு நம்பிக்கை.
இதைபோன்று காரிருளானின் சிறு அசைவிலும் பொருள் இருக்கும் என உணர்ந்து அனைவரும் கடலில் குதிக்க ஆயத்தமாகினர்.
சுற்றிலும் இருள் சூழ்ந்திருக்க திக்குதெரியாமல் ஓர் உயிர் ஓர் உடலை சுமந்துகொண்டிருக்க மெல்லியதாய் ஒரு வெப்பம் மட்டும் எங்கிருந்த பரவிவருகிறது என்பதை அறிய மெல்லதிறந்தான் தன் கண்களை. இந்தமுறை ஆதிரையான் இருப்பது ஒரு தீவு. ஆம் தீவுதான் கூட தன் காதலி கையில் விலங்குடன் இருக்க அவளை எழுப்ப அசைவில்லைஅவளிடம்
“பூ பூ!” என அவளது தோளினை உலுக்கினான்.
அவள் வயிற்றில் கைவத்து அழுத்தி நீரினைவேளியேற்றினான். மூக்கின் அருகில் சுவாசம் வருகிறதா என பார்க்க எந்த அறிகுறியும் இல்லை. உடனை அவளது வெள்ளிபந்துகளுக்கிடையான மார்புகூட்டுக்கு இடையில் ஒரு கையினை வைத்தவன் தன் ஆள்காட்டியினை அவள் கழுத்தினை நோக்கி ஓடும் ஒரு நரம்பினை தேடினான்.
மற்றொரு கையால் அவளது நெற்றியில் வைத்து தன் வலது காலினை எடுத்து அவள் கொடியிடையில்வைத்து ஒரு அழுத்து அழுத்த நெற்றியிலிருந்த ஓர் நரம்பு ஒரு கனம் தோன்றி மறைய அது மின்னல் வேக்காரனிடம் சிக்கிகொள்ள அந்த இடத்தினை நெற்றியிலிருந்த விரல்களால் அழுத்தினான்.
சிறிது நேரத்தில் மார்பின் நடுவிலிருந்த கின்னகழுத்துகள் தனில்இருந்த ஓர் நரம்பு மெதுவாக புடைத்துகொள்ள சிறிதுநேரம் காத்திருந்தான். சரியான அளவை எட்டியதும் நெற்றியிலிருந்த கையினை எடுத்து அந்த புது நரம்பி ஒரு அடி அடிக்க கூட அவள் மார்பு கூட்டினையும் கொடி இடையையும் ஒருசேர அழுத்த அவளை தூக்கிவாரிபோடபட்டாள்.
உயிர்வந்துவிட்டது அவளுக்கு இருமிகொண்டே தன் வயிற்றிலிருந்த நீரீனை வாய்வாழி வெளிகொணர்ந்துகொண்டிருக்க அவனை பார்த்தாள். இந்த வித்தைகள் எல்லாம் காரிருளான் தனக்கு பரிசளித்த ஒன்று. கடலில் ஒருநாள் கிடந்தாலும் இறப்பு தண்ணீர் குடித்துதான் என்றால் அவரிம் மூளையில் ஓர் மின்னல் கீற்று உயிருடன் இருக்குமாம் அதை சரியாக கண்டறிந்து மார்புக்கிடையில் உள்ள இதயத்தில் சேர்க்கும்போது தொப்புளின் சங்கமத்தையும் கவனத்தில் கொண்டு சரியான விகித்ததில் அழுத்தினால் உயிர் பிழைப்பாய் என காரிருளான் ஆதிரையானுக்கு கற்பித்திருக்க! இந்த வர்ம யுக்திகள் எல்லாம் ஆதிரையானுக்கு கைவந்த கலை.
பூவாழியோ பயந்துகொண்டு தன்னவனின் தோளில்சாய அவனது பார்வையோ கடலை நோக்க இருந்தது.
பூவாழி அவன் பார்க்கும் திசையில் என்ன நடக்கிறது என்று பார்த்தாள் ஆனால் ஒன்றும் விளங்கவில்லை. ஆனால் ஆதிரையான் கண்கொட்டாமல் பார்த்தான். அவனது கண்களில் அந்த காட்சி தோன்றியது. என்ன இருந்தாலும் இவன் அதிசய குழந்தைதானே.
ஆம் தன் தந்தை அனைத்து மாலுமிகளையும் பிடித்து தள்ள கூடவே தன் வாயினால் ஏதோ ஒன்றை சொல்லிகொண்டே இருந்தார். அப்போது கீழே விழும் மாலுமிகள் பெரும் ஒளியுடன் கடலினடியில் தோன்றும் மின்னல் கீற்று ஒன்று அவர்கள் விழுந்த இடத்திலிருந்து சர்ரென அவர்களை அருகிலிருந்த பல்வேற் தீவுகளில் அடித்து இழுத்து சென்றது. அதை பார்க்கும்போது ஆதிரையான் விக்கித்து நிற்க. அந்தகப்பலில் நின்றுகொண்டிருந்த காரிருளான் ஆதிரையானை பார்த்து ஒரு ஏக்க புன் முறுவல் செய்தார்.
ஆதிரையானோ கண்களை இறுக மூடி திறக்க அவனது பார்வை இன்னும் சில மயில்கள் தாண்டும் ஆற்றலை பெற்றன. ஆம் தூரத்தில் சங்குபடைகள் சூழ பல கப்பல்களுடன் ஆழிவேட்டையரின் படைகள் பிரம்மாண்ட தங்க காரிருளானை நோக்கி விரைந்து வந்துகொண்டிருக்க காரிருளான் அவர்களை எதிர்த்து சென்றது.
“என்ன ஆயிற்று காதாலா” என அவன் முகத்திலிருந்த குழப்ப கண்களை பார்த்து கேட்டாள்.
“தந்தை!!!” என அவன் குரல் அப்படியே நின்றது.
“அவருக்கு என்ன? நாம்தானே தனிதீவில் மாட்டிகொண்டோம்” என நிலமை உணர்ந்து கேட்டாள்.
“அவர் இறக்க போகிறார்” என கூறும்போது காளியை துனையாக கொண்ட அந்த தங்க காரிருளானின் மேலிருந்த ஆகாசதீபனின் கண்களிலிருந்து ஒளிகற்றை செல்ல உறுதுனையாக அந்த காளியின் கண்களிலிருந்தும் கற்றைகள் சென்றன.
ஆனால் வேகமாக முன்னேறிய கோடிகணக்கான சங்குகள் கப்பலின் நாலாபுறமும் ஆட்கொள்ள அந்த கப்பல் கடலில் மூழ்கியது. ஆழிவேட்டையர் கோவமாக நின்றுகொண்டு “மாலுமிகளையும் தேடி கொல்லுங்கள்” என உத்தரவிட்டார்.
-தொடரும்.

2 comments:

தொகுப்பு...